வாரிசுதாரர் நியமனம் (E Nomination ) கட்டாயமும் - அவசரமும்
பணியாளர்களின் வருங்கால வைப்பு நிதி (EPF) கணக்கு வைத்திருப்பவர்களின்
பலன்களை, கணக்கு வைத்திருப்பவர் திடீரென மரணம் அடைந்தால், அவர்களைச் சார்ந்தவர்களுக்கு
மாற்றுவதற்கு இந்த வசதி உதவுகிறது.
பணியில் இருக்கும் பொழுது இறந்தால், அந்த பணியாளர் வாங்கும்
சம்பளம். வேலை செய்த வருடங்களை கணக்கில் கொண்டு மூன்று லட்சங்களில் இருந்து 7 லட்சங்கள்
வரை அவருடைய குடும்பத்திற்கோ, வாரிசாக நியமிப்பவருக்கோ உடனடியாக போய்ச்சேரும்.
ஆகையால் ஒரு பணியாளர் இறந்த பிறகு வாரிசுதாரரை கண்டறிவதில்
உள்ள நடைமுறை பிரச்சனைகளில் இப்பொழுது பி.எப். வாரிசுதாரரை உடனடியாக நியமிக்க சொல்லி,
முன்பு வலியுறுத்தியது. இப்பொழுது கட்டாயப்படுத்துகிறது.
ஆகையால் முதலில் பணியாளர் UAN என்ற அடையாள எண்ணை பெற்றுக்கொண்ட பிறகு, அதை பி.எப். உறுப்பினருக்கான
தளத்தில் சென்று அதை பதிவு (Activate UAN) செய்யவேண்டும். அதன் பிறகு, பணியாளரின் புகைப்படத்தை சுயவிவரம் பகுதியில் (Profile) வலையேற்றவேண்டும்.
அதன்பிறகு பணியாளரின்
துணைவியார்/கணவர்/பிற உறவுகள் குறித்த பெயர், வயது, முகவரி என ஆதாரின் அடிப்படையில் விவரங்களையும், புகைப்படத்தோடு பதிவேற்றவேண்டும். தளம் கேட்கிற விவரங்களை கொடுத்த பிறகு, ஆதார் ஓடிபி மூலமாக ( E sign யையும்) பூர்த்தி செய்யவேண்டும்.
இப்பொழுது பணியாளர்களை இந்த வாரிசுதாரர் நியமனத்தை உடனடியாக
செய்யவைக்கும் பொருட்டு, ஐந்து முறை மட்டும் உறுப்பினருக்கான தளத்தில் அனுமதிக்கிறது.
அதற்குள் வாரிசுதாரரை நியமித்துவிடவேண்டும். இல்லையெனில் உள்ளே எந்த வேலையையும் செய்வதற்கு
அனுமதிக்காமல் தடை (Blocked) செய்கிறது. ஆகையால் பணியாளர்கள் இதன் முக்கியத்துவத்தை
உணர்ந்து உடனடியாக செயல்படுத்துங்கள். நிறுவனங்கள் தனது பணியாளர்களிடம் தெரிவித்து
உடனே செய்ய வலியுறுத்துங்கள். பிறகு பி.எப். அலுவலகத்திற்கு சென்று அலையவேண்டியிருக்கும்.
பி.எப்.
ஊழியர்களின் கருணைத்தொகை அதிகரிப்பு
பி.எப். நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் பணியில்
இருக்கும் பொழுது இறக்கும் பொழுது அவர்களுடைய வாரிசுக்கு முன்பு கிடைக்கும் கருணைத்தொகை
(Exgratia) ரூ. 8.80 லட்சமாக இருந்தது. இப்பொழுது அந்த தொகை ஏப்ரல் 1, 2025லிருந்து
15 லட்சமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை 5% உயரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலர் பத்திரிக்கையில் இந்த செய்தியைப் பார்த்து பி.எப்.பில் நிதி செலுத்தும் பணியாளர்களுக்கு இந்த
திட்டம் பொருந்துமா என சந்தேகம் கேட்டார்கள். இந்த அறிவிப்பு என்பது பி.எப்பில் பணிபுரியும் ஊழியர்களுக்கான அறிவிப்பு. பி.எப். சந்தாதாரர்களுக்கு
என புரிந்துகொள்ளக்கூடாது என விளக்கம் கொடுக்க வேண்டியிருந்தது.
பணியாளர்களை
இணைப்பதற்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய திட்டம்
PM
விக்சித் பாரத் ரோஸ்கர் யோஜனா (PM-VBRY)” என்பது Pradhan Mantri Viksit Bharat
Rozgar Yojana எனப்படும் சர்வதேச மொழியில் “PM-VBRY” என்ற திட்டம் ஆகும். இது
EPFO மூலம் அமல்படுத்தப்படும் புதிய பணியாளர்களை நியமிப்பதற்கு ஊக்கமளிக்கும்
திட்டமாகும். திட்டத்திற்கு மொத்த ஒதுக்கீடு ரூ. 99,446 கோடி செய்யப்பட்டுள்ளது. இந்த
திட்டம் 3.5 கோடி வேலை வாய்ப்புகளை 2 ஆண்டுகளில் உருவாக்குவதே இலக்காக கொண்டு இந்த
திட்டம் வடிவைக்கப்பட்டுள்ளது. இந்த திட்டம் என்பது, 01 ஆகஸ்ட் 2025 முதல்
தொடக்கம் ஆகும், காலம் 31 ஜூலை 2027 வரை இருக்கும்.
திட்டத்தின்
இரண்டு பகுதிகள்
இந்த
திட்டம் Part A மற்றும் Part B என்ற இரண்டு பிரதான பகுதிகளாக
பிரிக்கப்பட்டுள்ளது.
முதல் பகுதி (Part A)
EPFOல்
முதன்முறை சேரும் புதிய உறுப்பினர்களுக்கானது. ஒரு பணியாளர் ஆறு மாதங்கள் அவருக்கான
நிதியளிப்பு செய்த பிறகு, அவருக்கு உதவித் தொகையாக ரூ. 7500 என அவருடைய கணக்கில்
வரவு (Direct Benefit Transfer) வைக்கப்படும்.
அடுத்த ஆறு மாதங்கள் வேலை செய்த பிறகு, அவருடைய கணக்கில் மீண்டும் ரூ. 7500
வரவு வைக்கப்படும். இதற்கு சம்பந்தப்பட்ட பணியாளர் தனது வங்கி கணக்குடன் ஆதாருடன்
இணைத்திருக்கவேண்டும். ஊக்கம் பெறுபவர்களின் சம்பளம் மாதம் ரூ. 1 லட்சம் வரைக்கும் என்பது
குறிப்பிடத்தக்கது.
இரண்டாம் பகுதி (Part B)
இந்த பகுதி
நிறுவனங்களுக்கானது. தனது தேவைக்கு பணியாளர்களை புதிதாக நியமிக்கவேண்டும். இப்படி
நியமிக்கும் ஒவ்வொரு பணியாளருக்கும் பணியாளர்களின் சம்பளத்தைப் பொறுத்து
உதவித்தொகை தரப்படுகிறது. ஊதியம் ரூ.
10000 என்றால், ரூ. 1000 எனவும், ரூ. 10001யிலிருந்து ரூ. 20000 வரைக்கும் ரூ.
2000 எனவும், ரூ. 20001 லிருந்து ரூ. 100000 வரையும் ரூ. 3000 வரை
தரப்படுகிறது. இந்த ஊக்கத்தொகை இரண்டு
ஆண்டுகளுக்கு தரப்படுகிறது. (காலம் - ஜூலை 2027 வரை) அதுவே உற்பத்தித் துறையாக
இருந்தால் (Manufacturing) நான்கு ஆண்டுகளுக்கு தரப்படுகிறது. இந்த நிதி நிறுவனத்தின் பான் கணக்கை அடிப்படையாக
இணைக்கப்பட்டுள்ள வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும். இதோடு நிறுவனத்திற்கு
ஜி.எஸ்.டி இருந்தால், பி.எப். தளத்தில் அந்த விவரங்களையும் பதியவேண்டும்.
இதற்கான நிபந்தனைகள்
1. இந்த ஊக்கத் தொகையை பெறுவதற்கு
சம்பந்தப்பட்ட பணியாளர்களின் விவரம் பி.எப். தளத்தில் சரியாக பதிவு
செய்யப்படவேண்டும்.
2. பணியாளரை சரியாக அடையாளப்படுத்தும்
விதத்தில் அடையாள எண் (Universal Account Number) உருவாக்கப்பட்டிருக்கவேண்டும்.
உமாங் செயலியில் (Face Authentication) செய்யப்பட்டிருக்கவேண்டும்.
3. ஐம்பது ஊழியர்களுக்கு கீழ் எண்ணிக்கை
கொண்ட நிறுவனங்களாய் இருந்தால், குறைந்தப்பட்சம் இரண்டு பணியாளர்கள்
சேர்க்கப்படவேண்டும்.
4. ஐம்பது ஊழியர்களுக்கு அதிக எண்ணிக்கை
கொண்ட நிறுவனங்களாய் இருந்தால், குறைந்தப்பட்சம் ஐந்து பணியாளர்கள்
சேர்க்கப்படவேண்டும்.
புதிய முறை அமுல்படுத்துதல்
கடந்த
ஆகஸ்டு 2025 வரைக்கும் நிறுவனத்தில் வேலை செய்யும் பணியாளர்களின் அடையாள எண்கள்,
சம்பள விவரம், பி.எப். விவரம் எல்லாவற்றையும் ஒரு பைலில் (ECR) தொகுத்து தாக்கல்
செய்துகொண்டிருந்தோம். இப்பொழுது பி.எப். அதில் நடக்கும் தவறுகளை சரி செய்வதற்காக
புதிய முறை (செம்ப்டம்பர் மாத கணக்கை கணக்குப் பார்க்கும்) இந்த அக்டோபர் மாதத்தில் இருந்து அமுல்படுத்த உள்ளது. அதற்கான
வழிகாட்டல்களை 33 பக்கங்களுக்கு புரியும் விதத்தில் ஒவ்வொன்றையும் படங்களாக
தந்துள்ளது. இணையத்தில் (USER MANUAL RE-ENGINEERED ECRS) தேடினால் எளிதாக கிடைக்கிறது.
பி.எப். தளத்திலும் அதைத் தரவிறக்கம்
செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
(https://www.epfindia.gov.in/site_en/revamped_ecr.php)
முந்தைய
முறையில் கட்டணமும், கணக்கு தகவலும் ஒன்று சேர்ந்ததாக இருக்கும். இப்பொழுது, Return மற்றும் பண பரிமாற்றம்
தனித்தனியாக பிரிக்கப்பட்டு செயல்படும்.
ECR சமர்ப்பிக்கும் முன்பு தவறான தகவல்களை தவிர்த்து, சரியான தகவல்களை
தரும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. (System Based Validation)
தாமதமாக
செலுத்தினால் வரும் வட்டி மற்றும் அபராதத்தை புதிய முறையில் பி.எப். தளமே
கணக்கிட்டு தரும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
ஒருமுறை ECR சமர்பிக்கப்பட்டதும், அதில் தவறு இருந்தால், சில நிபந்தனைகளை
பூர்த்தி செய்தால், அதனை திருத்தும் வசதியும் இருக்கும் என புதிய முறையில்
தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய முறை வந்தாலும், ஏற்கனவே நிறுவனங்கள் தாக்கல்
செய்துகொண்டிருந்த பழைய தாக்கல் செய்யும் வடிவத்தை (ECR format) மாற்றம்
செய்யவில்லை எனவும் தெரிவித்துள்ளது. ஆகையால் கொடுக்கப்பட்டுள்ள புதிய மாற்றங்களை
கவனத்துடன் புரிந்துகொண்டு, செயல்படுத்துங்கள்.
Passbook Lite என்ற புதிய வசதி
அறிமுகம்.
பி.எப்.
தனது உறுப்பினர்களுக்கான “Passbook Lite” என்ற புதிய வசதியை உறுப்பினர்களுக்கான தளத்தில் அறிமுகம்
செய்துள்ளது. இதனால் சில அடிப்படைத் தகவல்களை இங்கேயே பார்க்கலாம். விரிவாக பார்க்கவேண்டுமென்றால், பாஸ்புக்கிற்கு
என இயங்கும் தளத்தில் தனியாக பார்க்கலாம் எனவும் அறிவித்துள்ளது.
பி.எப். கணக்கை மாற்றுவதற்கான
சான்றிதழ் (Annexure K)
Annexure K
என்பது பணியாளர் வேலை செய்த முந்தைய கணக்கை புதிய கணக்கிற்கு மாற்றுவதற்கான
மாற்றுச்சான்றிதழாகும். இப்பொழுது
இணையத்திலேயே உறுப்பினர்கள் பெறக்கூடிய வசதியை செயல்படுத்தியுள்ளது முக்கியமானது.
இந்த முறை வெளிப்படையானதாகவும், எளிதாக்கியும் உள்ளதாக பி.எப். அறிவித்துள்ளது.
உதாரணமாக…
1. பணியாளரின் பழைய கணக்கு TN/12345/678
2. பணியாளரின் புதிய கணக்கு TN/12345/987
முதல் கணக்கில் உள்ள பி.எப். தொகை, சேர்ந்திருக்கும் வட்டித்தொகை அனைத்தையும் இரண்டாவது கணக்கிற்கு மாற்றுவதற்கு இந்த விண்ணப்பம் உதவுகிறது.
முன்பணம் (Advance) பெறுவதை
விரைவுப்படுத்தப்பட்டுள்ள வசதி
ஒரு பணியாளர்
தன் கணக்கில் சேகரிக்கப்பட்டுள்ள நிதியில் இருந்து, திருமணம், மருத்துவம், வீடு
கட்டுதல் என அவசர, அவசிய தேவைகளுக்கு
முன்பணம் பெறும் வசதியை ஏற்படுத்தி தந்துள்ளது.
அதற்கான விதிகளையும் விரிவாக தந்துள்ளது.
தானாக ஒப்புதல் (Auto settlement)
செய்யும் முறை
முன்பு
பணியாளர்கள் முன்பணத்திற்கு விண்ணப்பிக்கும் பொழுது, அதிகாரிகள் நமது கோரிக்கையை
பரிசீலனை செய்த பின்பு தான் நடைபெற்றது.
பணியாளர்களின் அடிப்படை விவரங்கள், தகுதிகள் சரியாக இருந்தால், சிஸ்டமே சரிப்பார்த்து, 3-5 நாட்களுக்குள்
உறுப்பினர்களின் வங்கிக் கணக்கிற்கு அனுப்பும்.
பழைய வரம்பு ரூ. 1 லட்சம். புதிய
வரம்பு ரூ. 5 லட்சம்
முன்பு
இப்படி தானியங்கி முறையில் முன்பணம் பெறும் வசதி ரூ. 1 லட்சம் வரை இருந்தது.
கூடுதலான தொகைக்கு தாமதம் ஏற்பட்டது. இப்பொழுது புதிய முறையில் 5 லட்சம் வரை
அனுமதிக்கப்பட்டுள்ளது என்பது முக்கியமானது. இதிலும் பணியாளர்களின் அடிப்படை
விவரங்கள், தகுதிகள் சரியாக இருந்தால்,
சிஸ்டமே சரிப்பார்த்து, 3-5 நாட்களுக்குள் உறுப்பினர்களின் வங்கிக்
கணக்கிற்கு அனுப்பும்.
இன்னும்
வளரும்.
வணக்கங்களுடன்,
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,
9551291721
(இந்தக் கட்டுரை ”தொழில் உலகம்” அக்டோபர் மாத இதழில் வெளிவந்தது)
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment