நமது GSTPS கூட்டம் சனிக்கிழமையன்று கிரீம்ஸ் சாலையில் அமைந்துள்ள இந்துஸ்தான் சேம்பரில் சிறப்பாக நடந்தேறியது.
இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. செயலர் பாலாஜி அனைவரையும் வரவேற்று பேசினார்.
இணைச்செயலர் செண்பகம் அவர்கள் Tax Audit AY 2024 - 25 குறித்து பிபிடி வழியாக ஒவ்வொரு அம்சமாக விளக்கினார். கலந்து கொண்டவர்களின் சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். அவரோடு இணைந்து… செயலர் பாலாஜி, தணிக்கையாளர் சந்திரமெளலி அவர்களும் பதில் அளித்தார்கள்.
நேரடிக் கூட்டத்தில் தாங்கள் எதிர்கொண்ட அனுபவங்களை, தங்களது சந்தேகங்களை கேட்டு விவாதிப்பது சிறப்பு. அதன்படி... இந்த முறையும் தலைவர் செந்தமிழ் செல்வன் அவர்கள், முனைவர் வில்லியப்பன், தணிக்கையாளர் சந்திரமெளலி, திரு. கிருஷ்ணமூர்த்தி, திரு. சாதிக்பாட்சா, ஆச்சி மசாலா ஜெய், தனது துறை சார்ந்த அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர்.
குறிப்பாக ரோவிங் ஸ்குவாடு அனுபவங்களையும், அது தொடர்பான சட்ட ரீதியான அம்சங்களையும் பகிர்ந்து கொண்டது சிறப்பாக இருந்தது.
தேநீர் இடைவெளியில்,
சுவையான இனிப்பும், சாட் வகைகளும், சூடான காபியும் வழங்கப்பட்டது.
நமது சொசைட்டியின்
புதிய உறுப்பினர்களான
திரு. பத்ரேசன்
அவர்களும், திருமதி மேகலா அவர்களும் தங்களைப்
பற்றி சுய அறிமுகம் செய்துகொண்டனர். இருவரையும்
அறிமுகப்படுத்திய (Tally) சண்முகவேலு அவர்களுக்கு சொசைட்டி சார்பாக நன்றி.
நமது உறுப்பினர்களின்
எண்ணிக்கை இரண்டு டிஜிட்டிலிருந்து, சமீபத்தில் மூன்று டிஜிட்டாக மாறியிருக்கிறது.
ஒவ்வொரு உறுப்பினரும் உறுப்பினர்களை இணைப்பதில் கவனம் கொண்டால் நல்லது.
ஆண்டுவிழாவை
ஒட்டி, அழகான குடைகள் நமது ரிசார்ட் பயணத்தின் பொழுது வழங்கப்பட்டன. விடுபட்ட உறுப்பினர்களுக்கும்,
புதியவர்களுக்கும் இப்பொழுது வழங்கப்பட்டன.
இன்னும் வாங்காதவர்கள் நமது பொருளாளர் செல்வராஜ் அவர்களை தொடர்புகொள்ளுங்கள். திரு. கிருஷ்ணமூர்த்தி அவர்கள் தன்னுடைய ஐடி கார்டு
குறித்து கேட்டார். விரைவில் ஏற்பாடு செய்து தருவதாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.
இன்றைய கூட்டத்தின்
இரண்டாவது பகுதியான... GSTR1A &
DRC 03A குறித்த புதிய அறிவிப்புகளை தலைவர் செந்தமிழ்செல்வன் அவர்கள் பிபிடி வழியாக விளக்கினார். அது தொடர்பான சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
அடுத்தடுத்து
என்னென்ன தலைப்புகளில் வகுப்பு எடுப்பது என்ற முன்மொழிவுகளையும், ஆலோசனைகளையும் உறுப்பினர்களிடம்
தலைவர் செந்தமிழ்ச்செல்வன் விவாதித்தார்.
இன்னும் நமது வாட்சப் குழுக்களிலும் பகிருங்கள் என கேட்டுக்கொண்டார்.
பொருளாளர் செல்வராஜ் கலந்துகொண்டவர்களுக்கு நன்றி தெரிவித்தார். மேலும், நமது உறுப்பினர்கள் தங்கள் சொந்த வீட்டு விசேசங்களை நம் உறுப்பினர்களுடன் பகிர்ந்துகொள்வது வழக்கம். அதன் தொடர்ச்சியில் நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் சகோதரரின் மகளும், நமது உறுப்பினருமான பிரியதர்சினி சமீபத்தில் தணிக்கையாளர் தேர்வில் வெற்றிபெற்றார். அதனால் இன்றைய ஸ்நாக்ஸ் செலவை தலைவர் ஏற்றுக்கொண்டார்.
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment