கடந்த 17ந் தேதியில் இருந்து… பி.எப். நிறுவனத்திற்காக இயங்கும் தளத்தில் ஒவ்வொருமுறை நுழையும் பொழுதும், நிறுவன முதலாளியிடம்/பொறுப்பாளரிடம் ஓடிபி பெறவேண்டும்.
ஒரு நிறுவன முதலாளியிடம், பி.எப் தளம் உள்ளே போக ஓடிபி கேட்ட பொழுது...
"எதுவும் ஓடிபி வரல்லையே சார்"
பதிவு பெற்ற மொபைல் எண்ணை கண்டுபிடித்து தெரிவித்த பொழுது...
"அந்த எண்ணா? வீட்டில் கொடுத்திருக்கிறேன். இருங்க கேட்கிறேன்" என்றவர்
ஓடிபிக்கான ஐந்து நிமிடங்கள் முடிவடைந்த நிலையில்...
"என் மனைவி போனை எடுக்க மாட்டேங்கிறாங்க சார்!"
அப்ப
மொபைல் எண்ணை மாத்திரலாம். வீட்டுக்கு போனதும் அந்த மொபைல் எண் வைத்திருப்பீர்கள் அல்லவா? அப்பொழுது அழைக்கவா சார்?”
" அப்ப பசங்க கிட்ட செல் சிக்கியிருக்குமே! அவங்ககிட்ட இருந்து வாங்குறது கஷ்டம்! நாளை காலையில் அழையுங்கள் சார்".
காலையில் அழைத்து ... முதல் காரியமாய் அவருக்கு போன் செய்து மாற்றிவிட வேண்டும்.
அடுத்த நாள் காலையில்...
"ஓடிபி சொல்லுங்க சார்!"
"ஏதும் வரல்லையே!"
திரும்பவும் முயற்சி.
”இப்பவும்
வரல்லையே!”
சந்தேகம்
வந்து… “நீங்க வைச்சிருக்கிறது பட்டன் போனா? அப்படி இருந்தால், இன்பாக்ஸ் நிறைந்திருக்கும். சில செய்திகளை அழியுங்கள்”
“நான் வைச்சிருக்கிறது
ஆண்ட்ராய்டு சார்”
மீண்டும்
யோசித்து, “ரீசார்ஜ் செய்திருக்கிறீர்களா?”
“ரீசார்ஜ்
செய்தால் தான் வரும்ல! இப்பொழுதே பண்ணிவிடுகிறேன்”.
ஒரு வழியாய்
வீட்டு போனில் இருந்து, அவர் போனுக்கு வெற்றிகரமாய்
மாறிவிட்டோம். இனி எல்லாம் நலம் தான் என நினைத்தேன்.
மதியம் 4
மணிக்கு அழைத்தால்… “என் பசங்க ஸ்கூல் வந்திருக்கிறேன். பேரண்ட்ஸ் மீட்டிங் சார். பிறகு
அழைக்கிறீர்களா?!”
அட போங்கப்பா! ஒரு பி.எப். தளத்திற்குள் போவதற்குள் எத்தனைப் போராட்டம்?
No comments:
Post a Comment