Sunday, September 22, 2024

GSTPS : 73, 74 and 74A & 128A - Explained by S. Senthamil Selvan, President, GSTPS

 


வணக்கம். நமது சொசைட்டி சார்பாக நடத்தப்படும் நேரடிக் கூட்டம்  நேற்று (21/09/2024) சிறப்பாக நடைபெற்றது.


இன்றைய கூட்டத்தின் முதல் அமர்வாக, நமது GSTPS தலைவர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 74A, 128-A இரண்டையும் விரிவாக விளக்கிப் பேசினார்.  முன்பு இருந்த 73, 74 பிரிவுகளில் இருந்த நிபந்தனைகளில் நடைமுறைப்படுத்துவதில் சில குழப்பங்கள் இருந்ததன. ஆகையால் இரண்டு பிரிவுகளையும் இணைத்து இப்பொழுது 74A அறிமுகப்படுதப்பட்டுள்ளது.  பிரிவு 128A என்பது சமாதான திட்டம். முன்பு இந்த வசதி இல்லாமல் இருந்தது. இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. 


பேச்சாளர் பயன்படுத்திய பிபிடியை இங்கு பகிர்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.















GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

GSTPS : நமது (21/09/2024) நேரடிக்கூட்டம் சிறப்பாக நடைபெற்றது


வணக்கம். நமது சொசைட்டி சார்பாக  வழக்கமாக நான்காவது வாரத்தில் நேரடிக் கூட்டம் நடத்துவோம். இந்த மாதம் வருமான வரித்தாக்கல் செய்யவேண்டிய நெருக்கடி இருப்பதால், மூன்றாவது வாரத்திலேயே நடத்திவிடலாம் என்ற முடிவோடு நேற்று (21/09/2024) சிறப்பாக நடைபெற்றது.

 


தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் எல்லோரையும் வரவேற்று  பேசினார்.

 

இன்றைய கூட்டத்தின் முதல் அமர்வாக, நமது GSTPS தலைவர் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட 74A, 128-A இரண்டையும் விரிவாக விளக்கிப் பேசினார்.  முன்பு இருந்த 73, 74 பிரிவுகளில் இருந்த நிபந்தனைகளில் நடைமுறைப்படுத்துவதில் சில குழப்பங்கள் இருந்ததன. ஆகையால் இரண்டு பிரிவுகளையும் இணைத்து இப்பொழுது 74A அறிமுகப்படுதப்பட்டுள்ளது.  பிரிவு 128A என்பது சமாதான திட்டம். முன்பு இந்த வசதி இல்லாமல் இருந்தது. இப்பொழுது அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.   

 


இடைவேளையில் சுவையான பஜ்ஜியும், உளுந்து போண்டாவும், சூடான காபியும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.   நமது நிர்வாகிகளும் ஒவ்வொருமுறையும் புதிது புதிதாக இனிப்புகள், வடை, பஜ்ஜி, சாட் வகைகள் என அறிமுகப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். 

 


கடந்த சில மாதங்களில் நம்மோடு புதிதாக இணைந்துள்ள உறுப்பினர்களுக்கு, சான்றிதழ்களும், ஐடி கார்டுகளும் வழங்கப்பட்டன.   நமது உறுப்பினர்களுக்கு இந்த ஆண்டு விழா பரிசாக ஏற்கனவே பலருக்கு வண்ணக் குடை பரிசாக அளித்தோம். வாங்காதவர்கள் பொருளாளர் செல்வராஜ் அவர்களைத் தொடர்புகொள்ளுங்கள் என கேட்டுக்கொண்டார்கள்.   குடை, ஐடி கார்டு, உறுப்பினர் சான்றிதழ் வாங்காதவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள்.  அவர்கள் நிர்வாகிகளை தொடர்புகொண்டு பெற்றுக்கொள்ளுங்கள்.

 


திடீரென 10 கேள்விகளுக்கு பதில் அளிக்குமாறு கேள்வித் தாள்களை வழங்கினார்கள். பத்து நிமிடங்கள் மட்டுமே நேரம்.  முதல் பரிசை சீனிவாசன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.  அடுத்தடுத்த நிலையில் இருந்தவர்களும் பரிசுகளை உற்சாகமாக பெற்றுக்கொண்டார்கள்.  அடுத்த முறை ஒரு தலைப்பில் தேர்வு ஏற்பாடு செய்யுங்கள். அந்த தலைப்பை குழுவில் தெரிவித்தால், படித்து வருகிறவர்கள் கொஞ்சம் முன்னேற்பாடு வருவார்கள் என உறுப்பினர்கள் சார்பாக கேட்டுக்கொள்ளப்பட்டது.

 


இரண்டாவது அமர்வாக, Tally 5.0 குறித்து நமது உறுப்பினர் திரு. சண்முகவேல், திரு. மணிகண்டன் அவர்களை அழைத்து வந்து சிறப்புரை ஆற்ற வைத்தார்.  மற்ற நிகழ்வுகளினால், கூடுதல் நேரம் எடுத்துக்கொண்டதால்,  அவருக்கு ஒதுக்கப்பட்ட நேரம் மிக குறைவாக இருந்தது.  அந்த குறிப்பிட்ட நேரத்திலும் முதன்மையான மாற்றங்களை தெளிவாக விளக்கினார்.   இடையிடையே உறுப்பினர்கள் சந்தேகம் கேட்டாலும் பொறுமையாக விளக்கினார். 

 


அதில் முக்கியமான ஒன்று. Tallyயிலிருந்து தளத்திற்கு இணைப்பு கொடுப்பதற்கு, ஜி.எஸ்.டி தளத்தில் உள்ளே நுழைந்து Profile பக்கத்தில் ஒன்றை துவங்கிவைத்தால் (Enable) போதுமானது.  அதற்கு பிறகு ஒரு நிறுவனத்தையோ, பல நிறுவனங்களையோ நாம் இணைக்கும் பொழுது, நாம் இணைப்பவர்கள் Active யாக இருக்கிறார்களா? ரத்து செய்யப்பட்டுள்ளார்களா? அவர்களுடைய முகவரி எது என்கிற தகவல்களை தளத்திலிருந்து கொண்டு வந்து நமக்கு காட்டுகிறது. இதன் மூலம் நிறைய குழப்பங்களை தவிர்த்துக்கொள்ளலாம்.

 


வேறு ஏதேனும் சந்தேகம் இருந்தால், நமது உறுப்பினர் சண்முகவேல் அவர்களை தொடர்புகொள்ளலாம்.  (பேச : 7200284625) உரிய விளக்கம் தருவார்.

 

இது தவிர வழக்கமாக நேரடிக் கூட்டங்களில் நமது உறுப்பினர்கள் தங்கள் தொழில் வாழ்வில் ஏற்படும் சந்தேகங்களையும், அனுபவங்களையும் பலர் பகிர்ந்துகொண்டனர். அது பலருக்கும் ஒரு தெளிவைக் கொடுத்தது.

 


இறுதியில் வழக்கமாக சென்னையில் நடைபெறும் புத்தக திருவிழா (Book Fair) ஜனவரியில் துவங்கும்.  பொங்கலுக்கு ஊருக்கு செல்பவர்கள் புத்தகம் வாங்க முடியாத நிலை ஏற்படுவதால், இந்த முறை பபாசி டிசம்பர் 15 தேதிக்கு பிறகு துவங்கி, ஜனவரி முதல் வாரம் வரை நடத்தப் போவதாக அறிவித்துள்ளது.  (டிசம்பரில் மழை வந்தால் சிரமம் தான்.)

 

நமது தலைவர் ஜி.எஸ்.டி தொடர்பாக எளிய தமிழில் எழுதிய கட்டுரைகளை தொகுத்து புத்தகமாக மணிமேகலை பிரசுரம் வழியாக கொண்டு வரும் செய்தியை தலைவர் மகிழ்வுடன் பகிர்ந்துகொண்டார்.  திருத்தம் செய்யும் வேலையில் ஒரு பகுதியை கோவை பெருமாள் அவர்களும், உறுப்பினர் முனியசாமி அவர்களும் ஏற்றுக்கொண்டிருக்கும் செய்தியைப் பகிர்ந்துகொண்டார்.

 

புத்தகம் அவருடைய முந்தைய வெளியீடுகள் போல சின்னதாக இல்லாமல் கொஞ்சம் தடிமனான வடிவில் வெளிவருகிறது. ஒவ்வொரு மாதமும் தவறாது  கட்டுரை எழுதி, அதை பத்திரிக்கைகளில் வெளியிட்டு, இப்பொழுது அவற்றை எல்லாம் தொகுத்து, இந்த ஆண்டு வரைக்குமான திருத்தங்களை பல மணி நேரம் செய்து, பிழைத்திருத்தம் பார்த்து, லட்சத்தில் கைக்காசை செலுத்தி தமிழ் உலகத்துக்கு கொண்டு வருவது பெரிய விசயம். 

 

ஆகையால் அவருடைய புத்தகத்தை பரவலான அளவில் தொழில்முறை நண்பர்கள் வட்டாரத்தில் நாம் விநியோகிக்க முயற்சிகளை செய்யவேண்டியது அவசியம்.  உறுப்பினர்களில் சிலர் இந்த ஆண்டு காலண்டர், டைரி வெளியிடும் பொழுது, புத்தகத்தை இங்கு அறிமுகப்படுத்தலாம் என ஆலோசனையாக தெரிவித்தனர்.

 

தலைவர் வழியில் நாமும் நமக்குத் தெரிந்த தொழில், சட்ட அறிவை எழுதலாம். அதற்காக தான் நாம் மின்னிதழ் (E Magazine) கொண்டு வருகிறோம். (இதுவரை நமது மின்னிதழ் பார்த்து  ஐந்து உறுப்பினர்கள் நம்மோடு இணைந்துள்ளார்கள்) நமது தளத்தில் பகிரலாம்  எழுத வாய்ப்பில்லை. பேசலாம் என்றாலும், பதிவு செய்து தந்தால், நமது யூடியூப் பக்கத்தில் வெளியிடலாம் என ஆலோசனையாக உறுப்பினர் முனியசாமி பகிர்ந்துகொண்டார்.

 


வந்திருந்த அனைவருக்கும் நன்றி கூறினார் பொருளாளர் செல்வராஜ். கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

நன்றி.


- GSTPS


பின்குறிப்பு:  பேச்சாளர்கள் விளக்கப் பயன்படுத்திய பிபிடிகளை தனியாக பிரசுரிக்கிறோம்.


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety