Friday, October 2, 2026

நமது GSTPS தளத்தின் வெற்றிகரமான 500வது பதிவு

 


2023 ஒரு வசந்த காலத்தில் நமது தளத்தை உற்சாகமாக துவங்கினோம்.  சராசரியாக வாரம் மூன்று அளவில், மூன்று வருடங்களில் 500 வது பதிவை நெருங்கியுள்ளோம்.

 

நமது கூட்ட அறிவிப்புகள், பேச்சாளர்கள் பகிர்ந்து கொள்ளும் பிபிடிகள், நமது சொசைட்டியின் செயல்பாடுகளின் தடங்களை பதிவு செய்யும் தளமாக, நல்ல நினைவுகளை பாதுகாக்கும் தளமாக  இருக்கிறது.

 

சிரமமில்லாமல் தலைப்பு வாரியாக எளிதாக தேடமுடியும்.  தமிழிலும், ஆங்கிலத்திலும் நாம் பராமரிக்கிறோம். வேறு மொழி வேண்டுமென்றாலும் நாம் மாற்றிக்கொள்ள முடியும்.

 

தளம் நமது செயல்பாடுகளை பலரிடம் கொண்டு போய் சேர்த்திருக்கிறது. புதியவர்களை உறுப்பினர்களாக மாற்றித் தந்திருக்கிறது.

 

இப்பொழுது இந்தியா மட்டுமில்லாமல், பிற நாடுகளிலும் பார்க்கிறார்கள் என்பது மகிழ்ச்சியான செய்தி.

 

தளம் என்பது பலரின் கூட்டு முயற்சி தான். சொசைட்டிக்கான தளம் ஆரம்பிக்கலாம் என சொன்ன பொழுது, GSTPS தலைவர் திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் உற்சாகப்படுத்தினார்.  தளத்தில் நமது உறுப்பினர்களும் கட்டுரை எழுதியுள்ளார்கள்.

 

இப்பொழுதும் நமது உறுப்பினர்கள் கட்டுரை எழுத தெரிந்தவர்கள் எழுதித் தாருங்கள். பகிரலாம்.

 

ஒத்துழைப்பு தந்த அனைவருக்கும் நன்றி.

 

- இரா. முனியசாமி, 

வரி ஆலோசகர்,

உறுப்பினர்,

GSTPS

Thursday, October 1, 2026

GSTPS : "Solutions to GST Portal error when return filing" - S. Senthamil Selvan, President, GSTPS

 



நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும்,   உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (03/10/2026) அன்று காலை 10.30  மணியளவில் ஜூம் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு  : "Solutions to GST Portal error when return filing"


பேச்சாளர் :   "S. Senthamilselvan, President, GSTPS"


கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

வெளியூரில் இருக்கும் குடும்பத்தினருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி உண்டு!

 


திருச்செங்கோடு பகுதியில் இருந்து ஒரு பணியாளர் அழைத்தார். தான் வெளியூரில் வேலை செய்வதாகவும், தனக்கு இ.எஸ்.ஐ. பதிவெண் இருப்பதாகவும், குடும்பத்திற்கென தரப்பட்ட இ.எஸ்.ஐ அடையாள அட்டையை கொண்டு திருச்செங்கோட்டில் உள்ள ஒரு டிஸ்பென்சரியில் மருத்துவம் பார்க்க சென்றால், அப்படி பார்க்கமுடியாது அங்குள்ளவர்கள் என தெரிவித்தனர் என்றார்.

 

ஒரு பணியாளர் வெளியூரில் வேலை பார்த்தாலும், அவருடைய குடும்பத்தினர் சொந்த ஊரில் வசிக்கலாம். அப்படிப்பட்ட குடும்பத்தினருக்கும் இ.எஸ்.ஐ. மருத்துவ வசதி கிடைக்க வேண்டும் என்பதற்கான நடைமுறை இ.எஸ்.ஐ. திட்டத்தில் நீண்ட காலமாகவே உள்ளது.

 

பணியாளர் மற்றும் அவருடைய குடும்பத்தினர் தனித்தனியாக பயன்படுத்தக்கூடிய குடும்ப அடையாள அட்டை வழங்கும் நடைமுறை பழைய காலத்திலிருந்தே உள்ளது. இ.எஸ்.ஐ.யின் அதிகாரப்பூர்வ வழிகாட்டுதலிலும், பணியாளருக்கு ஒரு அட்டையும், அவருடன் வசிக்காத குடும்பத்தினருக்கு தனி அட்டையும் வழங்குவது குறிப்பிடப்பட்டுள்ளது.

 

மேலும், 09.06.2011 முதல் கணினி அடிப்படையிலான புதிய நடைமுறை அமலுக்கு வந்தபின், குடும்பத்தினருக்கும் தனியான அடையாள அட்டை (Pehchan Card) வழங்கப்பட்டு, அந்த அட்டையை அடிப்படையாகக் கொண்டு அவர்கள் வசிக்கும் இடத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகத்திலும் மருத்துவ வசதி பெறும் வசதி ஏற்படுத்தப்பட்டது.

 

இதற்கான அடிப்படை சட்ட உரிமை Employees’ State Insurance Act, 1948 – Section 56-ல் உள்ளது. குடும்பத்திற்கும் மருத்துவப் பயன் விரிவுபடுத்தப்பட்டிருந்தால், குடும்ப உறுப்பினருக்கும் மருத்துவ சிகிச்சை பெறும் உரிமை இருப்பதாக இப்பிரிவு குறிப்பிடுகிறது.

 


Section 57 படி, பொதுவாக பணியாளர் அல்லது குடும்பத்தினர் ஒதுக்கப்பட்ட மருத்துவமனை அல்லது மருந்தகத்திலேயே மருத்துவ வசதி பெற வேண்டும். அதே நேரத்தில், தற்போதைய Pehchan Card / Aadhaar அடிப்படையிலான வசதி மூலம் குடும்பத்தினர் வசிக்கும் இடத்தில் உள்ள இ.எஸ்.ஐ. மருந்தகம் அல்லது மருத்துவமனையில் மருத்துவ வசதி பெறும் நடைமுறை உள்ளது.

 

எனவே, தகுதியான குடும்ப உறுப்பினர், செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் சென்றபோது “வெளியூரில் வேலை செய்கிறார் என்பதால் இங்கு மருத்துவம் பார்க்க முடியாது” என்று மட்டும் கூறி மறுப்பது தவறாகும்.

 

மருத்துவ வசதி மறுக்கப்பட்டால்:

இ.எஸ்.ஐ. மருத்துவ உதவி எண்: 1800-11-3839

பொது குறைதீர் உதவி எண்: 1800-11-2526

மேலும், ESIC Grievance Redressal / CPGRAMS மூலமாகவும் புகார் பதிவு செய்யலாம்.

 

முக்கியமாக: மருத்துவம் மறுக்கப்பட்ட தேதி, மருந்தகத்தின் (Dispensary) பெயர், பணியாளர் எண், குடும்ப உறுப்பினரின் விவரம் ஆகியவற்றை பதிவு செய்து வைத்துக்கொள்வது புகார் அளிக்கும்போது உதவியாக இருக்கும்.

 

இ.எஸ்.ஐ. அட்டை என்பது ஒரு அடையாள அட்டை மட்டுமல்ல; தகுதியுள்ள பணியாளர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தினருக்கும் வழங்கப்படும் சமூகப் பாதுகாப்பு உரிமைக்கான ஆதாரமாகும்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721

பிரைவேட் லிமிடெட் - இ.எஸ்.ஐ, பி.எப் பதிவு (Registration)

 


முன்பு  பிரைவேட் லிமிடெட் நிறுவனங்கள் தாங்கள் எப்பொழுது பி.எப். இ.எஸ்.ஐ. க்கு தகுதி பெறுகிறோமோ, அப்பொழுது பி.எப்., இ.எஸ்.ஐ. பதிவு பெற்றால் போதும் என்கிற நிலை இருந்தது. ஆனால் நிறுவனங்கள் தங்கள் தகுதி பெறுகிற பொழுது, எண் பெறுவதில் சுணக்கம் இருந்தது.


23 பிப்ரவரி 2020 – தேதியிலிருந்து யார் பிரைவேட் லிமிடெட் பதிவு செய்கிறார்களோ அவர்களுக்கு, ஒரு பேக்கேஜாகவே இ.எஸ்.ஐ., பி.எப். எண்களையும் தர துவங்கிவிட்டார்கள்.


நிறுவனத்தை பதிவு செய்து தருபவர்களில் சிலர் இந்த செய்தியை நிறுவன பொறுப்பாளர்களிடம்  முறையாக தெரிவிப்பது இல்லை.

 

இப்படி பதிவு செய்த நிறுவனம் எப்பொழுது தகுதி பெறுகிறதோ, ஒரு நிறுவனத்தில் பத்து பேர் எப்பொழுது வேலை செய்கிறார்களோ, அப்பொழுது இ.எஸ்.ஐ. பதிவு எண்ணுக்குரிய கடவுச்சொல் (Password) பெற்று, பணியாளர்களை பதிவு செய்து மாதாந்திர ரிட்டன் தாக்கல் செய்ய துவங்கிவிடவேண்டும்.  

 

ஒருவேளை பத்துக்கு குறைவாகவே பணியாளர்கள் இருக்கிறார்கள்.  எங்களுக்கு தேவை என நினைத்தால்,  தானாக முன்வந்து பதிவு செய்யும் திட்டத்தில் (Voluntary basis) இ.எஸ்.ஐ யை செயல்படுத்தி (Activate) விட முடியும்.  முன்பு இந்த திட்டம் அமுலில் இல்லை. புதிய தொழிலாளர் நலச் சட்டம் அமுலுக்கு வந்த பிறகு இந்த வசதியை இப்பொழுது கொண்டு வந்திருக்கிறார்கள் என்பது கவனிக்கதக்க அம்சம்.

 

EPF க்கு என்ன விதி என்றால், நிறுவனம் துவங்கி எந்த நாளில் 20 பணியாளர்கள் வேலை செய்கிறார்களே… அன்றைய தேதியில் இருந்து, பி.எப். பை பதிவு செய்ய துவங்கிவிடவேண்டும்.  

 

ஒருவேளை இருபதுக்கும் குறைவாக பணியாளர்கள் இருக்கிறார்கள் என்றால், நிறுவனம் தங்களுக்கு தேவை என கருதினால், தானாக முன்வந்து செயல்படுத்திவிடலாம்.

 

ஒருவேளை நிறுவனம் தகுதி பெற்றும்  அதை இயக்காமல் கடந்து சென்றால்…. உதாரணத்திற்கு இரண்டு ஆண்டுகள் கழித்து அதை செயல்படுத்தினால்,  கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு நாம் தொழிலாளர்களுக்காக செலுத்தியிருக்கவேண்டிய தொகையை மொத்தமாக செலுத்தவேண்டிய கட்டாயம் வரும்.  மேலும் வட்டி, அபராதம் எல்லாம் கூடுதலாக வந்து சேரும்.

 

கட்டுமான நிறுவனம் என்றால், முதல் வேலை செய்ய துவங்கிவிடும் பொழுதே, அவர்கள் இ.எஸ்.ஐக்கு தகுதி பெற்றுவிடுவார்கள். ஏனெனில் கட்டிட தொழிலாளர்களுக்கு இ.எஸ்.ஐ, பி.எப். உண்டு.

 

ஆகையால், இதில் கவனமாக இருங்கள். இல்லையெனில் எதிர்காலத்தில் நிறுவனம் பெரிய சிக்கலுக்குள்ளாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.


இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், இ.எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721


Wednesday, September 30, 2026

01.ஜிஎஸ்டி போர்டல் (GST Portal) விவரங்கள் - S. செந்தமிழ்ச்செல்வன், வரி ஆலோசகர், தலைவர், GSTPS

 


1. ஜிஎஸ்டி என்றால்என்ன? (What is GST?)

 

பொருள்மற்றும்சேவைவரி (Goods and Services Tax - GST) என்பது இந்தியாவில் 1 ஜூலை 2017 முதல்நடைமுறைக்குவந்தஒருவிரிவான, பன்முகநிலை, இலக்குஅடிப்படையிலானமறைமுகவரியாகும்.

 

இதுமத்தியமற்றும்மாநிலஅரசுகளால்விதிக்கப்படும் பல்வேறு மறைமுகவரிகளைஒருங்கிணைத்து 'ஒருநாடு — ஒருவரி' என்ற கோட்பாட்டைநடைமுறைப்படுத்துகிறது.

 

ஜிஎஸ்டிக்கு முன்பு நடைமுறையில்இருந்தவரிமுறையில்மத்தியகலால்வரி (Central Excise), சேவைவரி (Service Tax), மதிப்புக் கூட்டு வரி (VAT), மத்தியவிற்பனைவரி (CST) போன்றபலவரிகள்இருந்தன. இவைஅனைத்தும்இப்போதுஜிஎஸ்டியில்இணைக்கப்பட்டுள்ளன.

 

2. ஜிஎஸ்டியின் வகைகள்

 

ஜிஎஸ்டிமுக்கியமாகமூன்றுவகைகளாகப்பிரிக்கப்படுகிறது:

•          மத்தியபொருள்மற்றும்சேவைவரி (CGST - Central Goods and Services Tax) — மாநிலத்திற்குள்நடைபெறும்வணிகத்தில்மத்தியஅரசுவசூலிக்கும்வரி.

•          மாநிலபொருள்மற்றும்சேவைவரி (SGST - State Goods and Services Tax) — மாநிலத்திற்குள்நடைபெறும்வணிகத்தில்மாநிலஅரசுவசூலிக்கும்வரி.

•          ஒருங்கிணைந்தபொருள்மற்றும்சேவைவரி (IGST - Integrated Goods and Services Tax) — ஒருமாநிலத்திலிருந்துமற்றொருமாநிலத்திற்குநடைபெறும்வணிகத்தில்மத்தியஅரசுவசூலிக்கும்வரி.

•          யூனியன்பிரதேசபொருள்மற்றும்சேவைவரி (UTGST - Union Territory GST) — யூனியன்பிரதேசங்களில் SGST-க்குஇணையாகவிதிக்கப்படும்வரி.

3. ஜிஎஸ்டிவரிவிகிதங்கள்

 

ஜிஎஸ்டிகவுன்சில்நான்குமுதன்மைவரிவிகிதங்களைநிர்ணயித்துள்ளது:

வரிவிகிதம்

பொருட்கள் / சேவைகள் வகை

எடுத்துக்காட்டுகள்

0%

வரிவிலக்குபெற்றபொருட்கள்

அரிசி, கோதுமை, பால், முட்டை, உப்பு, புத்தகங்கள்

5%

அத்தியாவசியபொருட்கள்

கோழிஇறைச்சி, மீன், காபி, தேயிலை, சர்க்கரை

12%

நடுத்தரபொருட்கள்

வெண்ணெய், காய்கறிஇறைச்சி, சூழலியல்தெரியாதமருந்துகள்

18%

பொதுவானபொருட்கள் / சேவைகள்

வாஷிங்மெஷின், குளிர்சாதனபெட்டி, தொலைபேசி, உணவகங்கள்

28%

ஆடம்பரப்பொருட்கள்மற்றும்தீங்குபயக்கும்பொருட்கள்

கார்கள், சிகரெட், மதுபானம், காசினோசேவை

 

4. ஜிஎஸ்டிகவுன்சில் (GST Council)

ஜிஎஸ்டிகவுன்சில்என்பதுஜிஎஸ்டிதொடர்பான அனைத்து முடிவுகளையும்எடுக்கும்உச்சநிர்வாககுழுவாகும். இதுஇந்தியஅரசியலமைப்பின் 279A சட்டப்பிரிவின்கீழ்அமைக்கப்பட்டது.

தலைவர்: மத்தியநிதியமைச்சர்

உறுப்பினர்கள்: அனைத்து மாநிலநிதியமைச்சர்கள் / அவர்களதுபிரதிநிதிகள்

பணிகள்: வரிவிகிதங்களைநிர்ணயித்தல், வரிவிலக்குகளைமுடிவு செய்தல், ஜிஎஸ்டிசட்டங்களில்திருத்தங்கள்பரிந்துரைத்தல்.

5. ஜிஎஸ்டிபதிவு (GST Registration)

ஒருநிதியாண்டில்வரிசெலுத்தத்தக்கவழங்கல்மதிப்புரூ. 40 லட்சம் (சேவைகளுக்குரூ. 20 லட்சம்; சிறப்புவகை மாநிலங்களில் ரூ. 10 லட்சம்) தாண்டும்எவரும்கட்டாயமாகஜிஎஸ்டிபதிவு பெற வேண்டும்.

கட்டாயபதிவு தேவைப்படும் சிறப்புவழக்குகள்:

•          மாநிலங்களுக்குஇடையில்வணிகம்செய்பவர்கள்

•          மின்-வணிகஇயங்குதளங்கள்மூலம்பொருட்கள் / சேவைகள் விற்பவர்கள்

•          தலைகீழ்கட்டணமுறை (Reverse Charge Mechanism) கீழ்வருவோர்

•          காசுவல்வரிசெலுத்துபவர்கள் (Casual Taxable Person)

•          பதிவுசெய்யப்பட்டநபரின்முகவர்கள்

6. ஜிஎஸ்டிஐஎன் (GSTIN) என்பதுஎன்ன?

ஜிஎஸ்டிஐஎன் (Goods and Services Tax Identification Number) என்பது ஒவ்வொரு வரிசெலுத்துபவரும்ஜிஎஸ்டிபோர்டலில்பதிவுசெய்தவுடன்பெறும் 15 இலக்கதனித்துவமானஎண்ணாகும். இதுஒருவரிசெலுத்துபவரின் PAN எண்ணைஅடிப்படையாகக்கொண்டது.

GSTIN அமைப்பு (Structure):

இலக்கங்கள்

எத்தனை

விவரம்

1-2

2

மாநிலகுறியீடு (State Code)

3-12

10

PAN எண்

13

1

ஒரே PAN-இல்பதிவுவரிசை எண்

14

1

'Z' — இயல்புநிலை எழுத்து

15

1

சரிபார்ப்புஇலக்கம் (Check digit)

 

7. ஜிஎஸ்டிஎன் (GSTN) என்பதன் விளக்கம்

 

ஜிஎஸ்டிஎன் (Goods and Services Tax Network) என்பதுஇந்தியஅரசாங்கம்அமைத்தஇலாபநோக்கற்ற, தனியார்வரையறுக்கப்பட்டநிறுவனமாகும். இதுஜிஎஸ்டிதொடர்பான அனைத்து தகவல்தொழில்நுட்பஉள்கட்டமைப்பையும்நிர்வகிக்கிறது.

 

7.1 ஜிஎஸ்டிஎன்கட்டமைப்பு (Shareholding Structure)

ஜிஎஸ்டிஎன்-இன்அங்கீகரிக்கப்பட்டமூலதனம்ரூ. 10 கோடிஆகும். பங்குபங்கீடுபின்வருமாறு:

•          மத்தியஅரசு — 24.5%

•          மாநிலஅரசுகள்மற்றும்யூனியன்பிரதேசங்கள் (ஒட்டுமொத்தமாக) — 24.5%

•          தனியார்நிதிநிறுவனங்கள் (HDFC, ICICI, NSE, LIC Housing Finance போன்றவை) — 51%

குறிப்பு: 2018ஆம் ஆண்டு அரசுஅறிவிப்பின்படி, GSTN ஒருமுழுஅரசாங்கநிறுவனமாகமாற்றப்படும்எனஅறிவிக்கப்பட்டது. ஆரம்பத்தில் 51% தனியார்பங்குகள்இருந்தபோதிலும், கட்டுப்பாடுமற்றும்மேலாண்மைஅரசாங்கத்திடமேஇருந்தது.

7.2 ஜிஎஸ்டிஎன்-இன்செயல்பாடுகள்

•          ஜிஎஸ்டிஇணையதளத்தின் (www.gst.gov.in) முழுமையான தகவல்தொழில்நுட்ப அமைப்பை நிர்வகித்தல்

•          வரி செலுத்துவோர் பதிவு, ரிட்டன் தாக்கல், வரி செலுத்துதல் ஆகியவற்றுக்கானதளத்தைவழங்குதல்

•          வங்கிகள், ரிசர்வ்வங்கி, ஜிஎஸ்டிசுவிதாவழங்குநர்கள் (GSPs) போன்றவெளிப்புறஅமைப்புகளை ஒருங்கிணைத்தல்

•          தரவுத்தளத்தை பாதுகாப்பாகவும் நம்பகமாகவும் பராமரித்தல்

8. ஜிஎஸ்டி போர்டல் (GST Portal)

ஜிஎஸ்டி போர்டல் (www.gst.gov.in) என்பதுஇந்திய அரசாங்கத்தின் அதிகாரப்பூர்வஆன்லைன் தளமாகும். வரி செலுத்துவோர் ஜிஎஸ்டிதொடர்பான அனைத்து சேவைகளையும் இந்த ஒரே தளத்தில் பெறலாம். இதனால் உள்ளூர் வரி அலுவலகங்களில் வரிசையில் நிற்க வேண்டியதில்லை; நேரம் மிச்சமாகும்; தவறுகளும் குறையும்.

 

8.1 ஜிஎஸ்டிபோர்டலில் வழங்கப்படும் சேவைகள்

(1) பதிவுச் சேவைகள் (Registration Services)

•          புதிய ஜிஎஸ்டி பதிவுக்கு விண்ணப்பம் செய்தல்

•          ஜிஎஸ்டி பதிவில் திருத்தம் / நீக்கம் செய்தல்

•          பதிவு செய்யாத நபர்களுக்கான தற்காலிக அடையாள எண் (Temporary ID) பெறுதல்

•          அடிப்படை மற்றும் அடிப்படை சாரா விவர மாற்றம் செய்தல் (Core & Non-core field changes)

(2) ரிட்டன் தாக்கல் (Return Filing)

•          படிவம்ஜிஎஸ்டிஆர்-1 (வெளிப்புறவழங்கல்விவரங்கள்)

•          படிவம்ஜிஎஸ்டிஆர்-3B (மாதாந்திர சுய-மதிப்பீட்டு ரிட்டன் படிவம்)

•          படிவம்ஜிஎஸ்டிஆர்-9 / 9C (ஆண்டு ரிட்டன் படிவம் )

•          'Nil' ரிட்டன் தாக்கல் செய்தல்

•          ஜிஎஸ்டிஆர்-4 (கம்போசிஷன் திட்ட வரி செலுத்துவோர்), ஜிஎஸ்டிஆர்-5 (பதிவு செய்யப்படாத வெளிநாட்டினர்) போன்றசிறப்புபடிவங்கள் தாக்கல்

(3) ஆன்லைனில்ஜிஎஸ்டிவரிப்பணம் செலுத்துதல்

•          ஜிஎஸ்டிசலான்உருவாக்குதல் (PMT-06)

•          ரொக்கப் பேரேட்டில் (Cash Ledger) பணம் செலுத்துதல்

•          உள்ளீட்டுவரி வரவு (ITC) பயன்பாடு

•          மின்னணு ரொக்கப் பேரேடு / கடன்பேரேடுகண்காணிப்பு (Electronic Cash & Credit Ledger Monitoring)

(4) பணத்தைத்திரும்பப்பெறுவதற்கானவிண்ணப்பம் (Refund Applications)

•          ஏற்றுமதிவணிகத்தில்வரிப்பணம்திரும்பப்பெறுதல்

•          கூடுதல்வரிசெலுத்தியபணத்தைத்திரும்பப்பெறுதல்

•          பயன்படுத்தப்படாதஉள்ளீட்டுவரி வரவு (ITC) பணத்தைத்திரும்பப்பெறுதல்

•          RFD-01 படிவம்மூலம்ஆன்லைன்விண்ணப்பம்

(5) அறிவிப்புகள்மற்றும்தகவல்தொடர்பு (Notices & Communication)

•          துறைசார்அறிவிப்புகளைப்பெறுதல்மற்றும்பதிலளித்தல்

•          பதில்கள்மற்றும்ஆவணங்களைபதிவேற்றம் செய்தல்

•          வரி செலுத்துவோர் இடையிலானதகவல்தொடர்புவசதி

(6) ஜிஎஸ்டிபயிற்சியாளர் (GST Practitioner) தேடல் மற்றும்ஈடுபாடு

ஒருஜிஎஸ்டிபயிற்சியாளரைக்கண்டுபிடித்துஈடுபடுத்திக்கொள்ளமுடியும். ஜிஎஸ்டிபயிற்சியாளர்கள்வரி செலுத்துவோர் சார்பாகரிட்டன்கள் தாக்கல் செய்யலாம்.

(7) கம்போசிஷன்திட்டம் (Composition Scheme)

காம்பொசின்திட்டத்தில்இணைதல்மற்றும்இந்தத்திட்டத்திலிருந்துவெளியேறுவதற்கானவிருப்பத்தைத்தேர்ந்தெடுத்தல் போர்டல் மூலம்செய்யலாம். இந்தத்திட்டம்சிறுவணிகர்களுக்காகவடிவமைக்கப்பட்டது; ஆண்டு வருவாய்ரூ. 1.5 கோடிவரைஉள்ளவர்கள்குறைந்தவரிவிகிதத்தில்வரிசெலுத்தலாம்.

(8) மின்-சேவைகள் ஒருங்கிணைப்பு (e-Services Integration)

•          மின்-வழிரசீது (E-Way Bill) இணையதள இணைப்பு

•          மின்-விலைப்பட்டியல் (E-Invoice) அமைப்புஒருங்கிணைப்பு

•          ஆதார்அங்கீகாரம் (Aadhaar Authentication)

•          புவிக்குறியீட்டுவசதி (Geo-coding)

(9) இணக்கக்கண்காணிப்பு (Compliance Tracking)

•          தாக்கல் நிலைசரிபார்ப்பு (Filing Status Checking)

•          தாமதக்கட்டணம்மற்றும்வட்டிகணக்கீடு

•          இணக்கமதிப்பீட்டைக்கண்காணித்தல் (Compliance Rating Monitoring)

(10) உள்ளீட்டுவரி வரவு மேலாண்மை (ITC Management)

•          படிவம்ஜிஎஸ்டிஆர்-2B மற்றும்பிறபடிவங்களைப்பதிவிறக்குதல்

•          உள்ளீட்டுவரிவரவின்விலைப்பட்டியல்வாரியானவிவரங்களைப்பெறுதல் — ITC சரிபார்ப்பு

•          ITC கண்காணிப்புமற்றும்பயன்பாடு

(11) உறுதிமொழிகடிதம் (Letter of Undertaking — LUT)

ஏற்றுமதிசெய்வோர்ஒருங்கிணைந்தவரிசெலுத்தாமல்ஏற்றுமதிசெய்வதற்கானஉறுதிமொழிகடிதத்தை (LUT) போர்டல் மூலம்சமர்ப்பிக்கலாம்.

(12) ஜிஎஸ்டிதொடர்பானகுறைகளைச்சமர்ப்பித்தல்

வரி செலுத்துவோர் தங்களுக்குஏற்படும்குறைகளைஅல்லதுதொழில்நுட்பசிக்கல்களை நேரடியாக ஜிஎஸ்டி போர்டல் மூலம்தெரிவிக்கலாம்.

9. ஜிஎஸ்டிபோர்ட்டலைஆன்லைனில்எவ்வாறுபயன்படுத்துவது?

ஜிஎஸ்டிபதிவைப்பெற்று செயலில் உள்ளஜிஎஸ்டிஐஎன்வைத்திருந்தால்மட்டுமேஜிஎஸ்டிபோர்ட்டலில்உள்நுழையமுடியும். படிப்படியானசெயல்முறைபின்வருமாறு:

  1. www.gst.gov.in என்ற அதிகாரப்பூர்வஜிஎஸ்டி போர்டல் இணையதளத்தைதிறக்கவும்.
  2. முகப்புப்பக்கத்தில் 'Login' என்ற பட்டனைக் கிளிக் செய்யவும்.
  3. Username மற்றும் Password உள்ளிடவும்.
  4. Captcha குறியீட்டை உள்ளிட்டு 'Login' அழுத்தவும்.
  5. முதல்முறை உள்நுழைபவர்கள், OTP மூலம்அடையாளத்தைஉறுதிப்படுத்தவேண்டும்.

10. ஜிஎஸ்டிமுறையின்நன்மைகள் (Benefits of GST)

•          வரிஅடுக்குநீக்கம் (Elimination of Cascading Effect) — முன்பு வரியின் மேல் வரிவிதிக்கப்பட்டது; ஜிஎஸ்டியில்உள்ளீட்டுவரி வரவு (ITC) மூலம்இதுதவிர்க்கப்படுகிறது.

•          'ஒருநாடு — ஒருசந்தை' என்ற கோட்பாட்டைநடைமுறைப்படுத்துகிறது.

•          ஒட்டுமொத்தஇணக்கசுமைகுறைகிறது; ஒரேஆன்லைன் போர்டல் மூலம்அனைத்தையும்செய்யலாம்.

•          வரிஏய்ப்புகுறைகிறது; அனைத்து நடவடிக்கைகளும் டிஜிட்டல் கண்காணிப்பில் இருக்கும்.

•          சிறுவணிகர்களுக்குகம்போசிஷன்திட்டம்மூலம்எளியவரிமுறைகிடைக்கிறது.

•          சேவைகளுக்கும்பொருட்களுக்கும்ஒரேவரிமுறை — ஒரேவிதிமுறைகள்.

•          ஆன்லைன் ரிட்டன் தாக்கல், ஆன்லைன்வரி செலுத்துதல் மூலம்வணிகஎளிமை (Ease of Doing Business) மேம்படுகிறது.

சுருக்கம்


GST Portal Dashboard என்பது சாதாரண தகவல் திரை அல்ல.

அது ஒரு வரிப்பணியாளரின் GST Compliance நிலையை முழுமையாக கண்காணிக்க உதவும் முக்கிய நிர்வாக கருவியாகும்.

தொடர்ச்சியாக பயன்படுத்தினால் Return default, Notice miss, ITC mismatch போன்ற பிரச்சினைகளை முன்கூட்டியே கண்டறிய முடியும்.

 

ஜிஎஸ்டிஎன்பதுஇந்தியாவின்வரிமுறையைசீர்திருத்தியஒருபுரட்சிகரமானமாற்றம். GSTN என்ற தொழில்நுட்பதளம்மூலம்வரி செலுத்துவோர் அனைத்து சேவைகளையும்ஒரேஇடத்தில் — www.gst.gov.in — மூலம்பெறலாம். ஜிஎஸ்டிபதிவு, ரிட்டன் தாக்கல், வரி செலுத்துதல், பணம்திரும்பப்பெறுதல், ITC மேலாண்மைஆகியஅனைத்தும்இப்போது டிஜிட்டல் முறையில் செய்ய முடியும். இதுவணிகஎளிமையைமேம்படுத்தி, வெளிப்படைத்தன்மையைஅதிகரிக்கிறது.




- S. செந்தமிழ்ச்செல்வன்,
வரி ஆலோசகர்,
தலைவர்,
GSTPS