வணக்கம். குடியரசு தின விழாவை ஒட்டி, நம்முடைய சொசைட்டி சார்பில் நான்காம் ஆண்டு பண்பாட்டு விழா நேற்று (25/01/2025) உறுப்பினர்களும், உறுப்பினர்களுடைய குழந்தைகளும், சொந்தங்களும் திரளாக கலந்துகொள்ள சிறப்பாக நிறைவேறியது.
நிகழ்வை துவங்கும்
பொழுது, செந்தமிழ்ச்செல்வன் அவர்களL் புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்டவர்களுக்கும், GSTPS சார்பாக
புத்தக அறிமுக விழா ஒன்றை நிர்வாகிகள் சிறப்பாக நடத்தினார்கள். நிர்வாகிகளுக்கும், அதில் கலந்து கொண்ட அனைவருக்கும்
நன்றி சொல்லி துவங்கினார்.
முதல் குடியரசு
தின விழாவை நமது சொசைட்டியில் துவங்கும்பொழுது,
கொரானா காலத்தை ஒட்டி, இணைய வழியில் கூட்டம் நடத்திக்கொண்டிருந்தோம். இந்த நிகழ்வை நமது உறுப்பினர்களின் தனித்திறமையை,
உறுப்பினர்களின் குழந்தைகளின் திறமையை உற்சாகப்படுத்துவதற்காக நடத்துகிறோம் என்றார்.
நிகழ்வுகளின்
மொத்த தொகுப்பையும் பொருளாளர் செல்வராஜ் சிறப்பாக தொகுத்து வழங்கியதை சிறப்பாக செய்தார்.
Dr. வில்லியப்பன்
அவர்களின் பேத்தியும், உறுப்பினர் இராஜலெட்சுமியின் குட்டி மகளுமான பிரகதி ஒரு பாடல்
பாடி துவங்கி வைத்தார். செல்வராணி அவர்களின் மகள் யாமினி சுதந்திர போராட்ட பெண் போராளி
வேலு நாச்சியார் குறித்த ஒரு குறிப்பைத் தந்தார்.
இதில் பொன்மணி
அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகள் ஆடல், பாடல், ஓவியம் என பல கலைகளிலும் அசத்தினார்கள்.
அவர்களின் ஒரு குட்டிப் பெண் ரோசனா யோகாவில் ஒரு சாதனை முயற்சி செய்தார். பொதுவாக பொது இடங்களில் சிரமமான யோக ஆசனங்களை செய்து காட்டுகிறார்கள். அதனால், வயதானவர்கள், கொஞ்சம் உடற்பருமன் கொண்டவர்கள் எல்லாம் யோகா என்றாலே கொஞ்சம் ஜெர்க் ஆகிறார்கள். யோகா எல்லா வயதினருக்குமானது. நமது தனிப்பட்ட உடல் பிரச்சனைகளை ஒட்டி கூட எளிமையான ஆசனங்கள் நிறைய உண்டு. அதை செய்வதின் மூலம் குணப்படுத்தவும் செய்யலாம்.
சாய் கேசவன்
சிலம்பாடினார். மோக்சிதா ஸ்பானிஷ் பாடலுக்கு நடனமாடினார். இனிமையாக திருப்புகழும் பாடினார்.
அமிர்தவாணியும் ஸ்டைலாக நடனமாடினார். தீபக் சாய் அருமையாக பாடினார்.
ஜோஷ்வா, ஜோகன்
ஓவியங்களிலும் அசத்தினார்கள். ஜியனா ஜேயல்
இரு காக்கா கதைகளை தன் மழலையில் இனிமையான .
சின்ன தம்பி முகேஷ் சிலம்பம், இன்னும் சில சிரமமான அம்சங்களை அநாசயமாக கையாண்டார்.
உறுப்பினர் நீலகண்டன்
அவர்கள் இரண்டு பாடல்களை கரோகியின் உதவியுடன் பல வித அபிநயங்களுடன் சிறப்பாக பாடினார். சில சமயங்களில் படத்தில் வரும் பாடலை விட, பாடலை
பதிவு செய்வது புகழ்பெற்றுவிடும். அப்படியான
பதிவாக இருந்தது.
நமது சொசைட்டியிஒன்
ஆஸ்தான கவி கைலாசமூர்த்தி இரண்டு கவிதைகள் வாசித்தார். ஒன்று வரி ஆலோசகர்களின் தொழில்
சிக்கலை நொந்து பாடினார். எத்தனை புகழ்பெற்ற
இலக்கிய வகைகளை எழுதினாலும், எழுதுகோலைப் பற்றி பாடியது குறைவு. ஆகையால் பாடுகிறேன்
என ஒரு கவிதை வாசித்தார்.
கைலாசமூர்த்தி எழுதுகிறார். அவரைப் போல நாமும் எழுதுவோமோ என உறுப்பினர் முனியசாமி முயன்று எழுதிய கவிதை “நாம் எப்பொழுது வாழப்போகிறோம்”. அது ”இன்ஸ்டண்ட் கவிதை” எனலாம். நன்றாக இருந்தது.
ஜெயக்குமார்
அவர்களுடைய மகன் சந்தோஷ்குமார் படங்களின், வெப் சீரிஸ் குறித்த விமர்சனங்களை அருமையாக
செய்துவருகிறார். அதில் மூன்றை சுருக்கமாக அறிமுகம் செய்துவைத்தார்கள்.
நாம் சொந்த
தொழில் வாழ்வில் மூழ்கிவிடுகிறோம். குழந்தைகளின்
திறன்களையும் வாய்ப்பு கிடைக்கும் பொழுது மேடைகள் அமைத்து தருவதும் பெற்றோர்களுடைய
கடமை தான். அதை புரிந்துகொண்டு வருங்காலங்களில் செயல்படுவோம்.
கலந்துகொண்ட
அனைவருக்கும் நன்றி சொல்லி முடித்து வைத்தார் இணைச்செயலர் செண்பகம். அவர்கள்.
நன்றி.
- GSTPS
நிகழ்ச்சியை நமது யூடியூப் சானலில் காணலாம்.
https://www.youtube.com/watch?v=7yJnx0yyP_Y