Tuesday, September 30, 2025

GSTPS: 44வது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


வணக்கம்.  27/9/2025 அன்று 44வது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


வருமான வரித் தாக்கல் (Tax Audit cases) செய்வதற்கான கடைசி தேதி இந்த மாத இறுதியாக இருந்தது.  ஒரு மாதத்தை தள்ளி வைக்க கோரியதை ஏற்று ராஜஸ்தான் & கர்நாடகா உயர்நீதிமன்றங்கள்  உத்தரவிட்டதால் தான் நமது கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. இல்லையெனில் சொசைட்டி கூட்டம் அறிவித்திருந்தாலும், எண்ணிக்கை கணிசமாக குறைந்திருக்கும்.  நியாயமாக ஆகையால் அவர்களுக்கு நன்றி சொல்லி நியாயமாக துவங்கியிருக்கவேண்டும்.



முதல் தலைப்பாக தலைவர் செந்தமிழ்ச்செல்வன் சமீபத்திய ஜி.எஸ்.டி அறிவிப்புகளை  முதல் அரை மணி நேரம் பிபிடி வழியாக விளக்கினார்.  இடையிடையே உறுப்பினர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் அனுபவங்கள் வழியாக பதில் அளித்தார். 


ஒவ்வொருமுறை பேசும் பொழுதும், சந்தேகங்கள், கேள்வி எழுப்பும் பொழுதும் இதெல்லாம் சில முறை நமது சொசைட்டிக்கான வாட்சப் குழுவில் பகிர்ந்து கொண்டிருக்கிறோம் என சொல்லித் தான் பதில் அளித்தார்.  (தலைவருக்கு நேரடி கூட்டமே முறையாக குழுவில் வரும் செய்திகளை உறுப்பினர்கள் படிக்கிறோமா என சோதிப்பதற்கு தான் என நினைக்கிறேன்.  நாமும் தினமும் படிக்கவேண்டும் என பலமுறை முடிவு செய்கிறோம். சத்தியம் செய்கிறோம்.  தீர்மானங்கள் எடுக்கிறோம். ஆனால் இந்த நேரம் தான் பெரிய பிரச்சனையாக இருக்கிறது.  சோகம்.) இப்படி ஒரு ஆசிரியரும் இல்லை என்றால், நமக்கெல்லாம் சிரமம் தான். 🙂



இரண்டாவது தலைப்பாக Tally ஆசிரியர் திரு. வேலாயுதம்  அவர்கள் சமீபத்திய ஜி.எஸ்.டி குறித்த மாற்றங்களை, டாலி எத்தனை சுலபமாக்கியுள்ளது என்பதை விளக்கினார்.  இன்னும் தலைப்பைத் தவிர வேறு சந்தேகங்கள் இருந்தாலும் கேளுங்கள் என பங்கேற்பாளர்களிடமும் கேட்டுக்கொண்டார். 



மாத வங்கி அறிக்கையை எப்படி டாலியில் அப்டேட் செய்வது என்பதையும் Dr. வில்லியப்பன் அவர்கள் குறிப்பாக கேட்டதையும், கணக்கில் கொண்டு விளக்கினார். 


இனி 2B நாம் கொள்முதல் செய்யும் பில்களின் பட்டியலை ஜி.எஸ்.டி தளம் கடந்த மாதம் வரை உருவாக்கித் தந்தது போல,  உருவாக்கித் தரப்போவதில்லை.


இனி ஒவ்வொரு மாதமும் IMS (Invoice Management System) வழியாக போய், எத்தனை பில்கள் இருக்கிறதோ, அத்தனை பில்களையும் நாம்  ஏற்றோ (Accept) மறுத்தோ (Reject) அதை பெண்டிங் வைத்தோ 2B யை உருவாக்கும் (Compute) படி கொண்டு வருகிறார்கள். 


அதற்கு டாலியில் அதை செய்வதற்கு ஒரு வழியை உருவாக்கித் தந்துள்ளார்கள். ஆகையால் இது குறித்து உங்களுடைய டாலி பார்ட்டனரிடம் கேளுங்கள். இல்லையெனில் நமது குழுவில் உள்ள உறுப்பினர் திரு. சண்முகவேல் அவர்களிடம் (மொபைல் எண்: 72002 84625) கேளுங்கள்.  உங்களுக்கு உதவுவார்.


ஒவ்வொரு துறையிலும் திரு. வேலாயுதம் போன்ற ஆசிரியர்கள் தான் சிரமங்களை, இது எல்லாம் அத்தனை கஷ்டமில்லை. எளிதான விசயம் தான் என சொல்லிக்கொண்டே கடினமான விசயங்களையும் எளிதாக்கி தருகிறார்கள். அவருக்கு நன்றி. அவருக்கு சொசைட்டி சார்பாக நினைவு பரிசும் வழங்கப்பட்டது.




இடைவேளையில்,  (பாவ்) பன், அதற்கு சுவையான தொக்கு, வெஜ் சாலட், லட்டு, தயிர் வடை என  சாட் வகைகளையும், சுவையான காபியும் இந்த முறை சிறப்பாக ஏற்பாடு செய்திருந்தார்கள்.    ஒவ்வொரு மாதமும் புதிய புதிய வகைகளில் ஏற்பாடு செய்கிறார்கள். நமது உறுப்பினர் சந்திரசேகர் அவர்கள் இதை சுவைத்துச் சாப்பிட்டுக்கொண்டே, Tally 2.0 என்றெல்லாம் சொல்கிறீர்கள்.  அது போல ஸ்நாக்ஸ் வகைகளில் அடுத்த கூட்டத்தில் ஆனியன் ஊத்தப்பம் ஏற்பாடு செய்யுங்கள் என உற்சாகமாய் கேட்டுக்கொண்டிருந்தார். 



சமீபத்தில் நம்மோடு இணைந்தும் பயணிக்கும் புதிய உறுப்பினர்கள் திரு. சேகர், திரு. பால்பாண்டி, திருமதி. பிரியா மூவரும் தங்களைப் பற்றி சுய அறிமுகம் செய்துகொண்டார்கள்.


புதிய உறுப்பினர்களுக்கு சான்றிதழ்களும், அடையாள அட்டைகளும் வழங்கப்பட்டன. அதே போல சொசைட்டியின் ஆண்டு பரிசான தண்ணீர் புட்டிகள் வழங்கப்பட்டன.

கூட்டம் இனிதே நிறைவுபெற்றது.


அறிவு என்பது விவாதிக்கும் பொழுது தான் விரிவடையும். அதுவரை ஒன்றை சரியென நம்பிக்கையுடன் புரிந்து வைத்திருப்போம்.  ஆனால் விவாதிக்கும் பொழுது, புதிய புரிதலை நமக்கு உருவாக்கின்றன. நேற்றும் அப்படிப்பட்ட புதிய புரிதல்கள் ஏற்பட்டன எனலாம்.


நேரடிக் கூட்டங்களில் கலந்துகொள்ளும் பொழுது தான் உறுப்பினர்களுக்குள் இயல்பாக பழகும் வாய்ப்பும் ஏற்படுகிறது. யாரெல்லாம் நேரடிக் கூட்டங்களில் தொடர்ந்து பங்கேற்கிறார்களோ, அவர்களுக்குள் அத்தனை நெருக்கம் கூடியிருக்கிறது. சிலர் பால்ய நண்பர்கள் போல மாறியிருப்பதை நாம் பார்க்கிறோம்.  தொழில்முறையிலும் சகஜமாய் உதவிக்கொள்கிறார்கள். 


ஆகையால் உறுப்பினர்கள் மாதத்தில் அரை நாள் என்பது நம் விரிவை விரிவு செய்வதற்கும், நமது தொழில்முறை நட்பு வட்டத்தை அதிகப்படுத்துவதற்கும் நாம் பயன்படுத்திக்கொள்ளவேண்டும். 


நன்றி.


- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment