Monday, January 29, 2024

GSTPS : நேரடிக்கூட்டம் சிறப்பாக நடந்தேறியது!


வணக்கம். மாதத்தின் இறுதி சனிக்கிழமையன்று (27/01/2024) சொசைட்டி சார்பாக நடத்தப்படும் நேரடிக் கூட்டம் சிறப்பாக நடந்தேறியது.

 

தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அரங்குகிற்குள் வந்து அமர்ந்ததும், ”காலையில் இருந்தும், வரும் பொழுதும், வெளியூர் செல்வது, நெருக்கடியான வேலை, சொந்தத்தில் ஒரு இறப்பு என பல்வேறு காரணங்களால் வரமுடியவில்லை என பல உறுப்பினர்களிடம் இருந்து அழைப்புகள் வந்த வண்ணம் இருக்கிறது” என்றார்.

 


ஜி.எஸ்.டி தொடர்பான மூன்றாவது வகுப்பை தலைவர் செந்தமிழ்செல்வன் அவர்களும்,, ITC4 குறித்து போருளாளர் செல்வராஜ் அவர்களும் விளக்குவதாகவும் இருந்தது.

 

வில்லியப்பன் அவர்கள் ”வழக்கமாக கலந்து கொள்ளும் சிலர் நெருக்கடிகளில் இன்று கலந்துகொள்ளாததால் மூன்றாவது ஜி.எஸ்.டி வகுப்பின் தொடர்ச்சி அவர்களுக்கு விட்டுப்போகும். ஆகையால், அடுத்தமாதம் வகுப்பை எடுங்கள்” என கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கையை மற்ற உறுப்பினர்களும், நிர்வாகிகளும் ஏற்றுக்கொண்டனர்.

 


மாற்று ஏற்பாடாக,  வரி ஆலோசகர்களாக நம் தொழிலில் எதிர்கொள்ளும் நடைமுறை பிரச்சனைகள் குறித்து விவாதிக்கலாம் என முடிவு செய்யப்பட்டு கூட்டம் துவங்கியது.

 

”சந்தை மதிப்பு” என எதைச் சொல்கிறோம்? ஒரு வண்டியில் 5 லட்சத்திற்கான பொருட்களை இவே பில்லுடன் கொண்டு போகிறோம். ஒரு அதிகாரி இடையில் பிடித்துக்கொண்டு, 10 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் இருக்கின்றன என சிக்கல் செய்தால், அதை எப்படி எதிர்கொள்வது என துவங்கிவைத்தார்.

 


இவே பில் சம்பந்தமாக  கடந்த காலத்திலும், இப்பொழுதும் என்னென்ன பிரச்சனைகள் வருகின்றன? இவே பில் குறித்து ஜி.எஸ்.டி தரும் நோட்டீஸ்கள்,   அவற்றை எப்படி எதிர்கொண்டோம்? அதை எப்படி அவர்கள் ஏற்றுக்கொண்டு, நோட்டிசுகளை திரும்ப பெற்றார்கள் என பல்வேறு அனுபவங்கள், வழக்குகள் மூலம்  விரிவாக விவாதிக்கப்பட்டது.

 


ஜி.எஸ்.டி அதிகாரிகள் வெள்ளிக்கிழமை இரவு செல்லும் வண்டியைப் பிடித்துக்கொண்டு, இன்னும் இரண்டு நாட்களுக்கு விடமாட்டோம் என ஜி.எஸ்.டி சட்டத்தில் இல்லாத விசயங்களை எல்லாம் சொல்லி,  எப்படி ஆதாயம் அடைகிறார்கள்? அதை  ஒவ்வொருவரும் எப்படி எதிர்கொள்கிறோம்? சட்டத்தை தெரிந்துகொண்டு நாம் எதிர்கொள்ளும் பொழுது அதிகாரிகள் எப்படி அதை அணுகுகிறார்கள்? என்பது குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டது.

 

இப்படி ஒருவரும் தாங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு விசயங்கள் குறித்தும் கேள்வி எழுப்பினார்கள். விவாதம் நீண்டது. நேரம் போனதே தெரியவில்லை. இன்றைய விவாதம் அருமையாக அமைந்தது. பலருடைய அனுபவங்களை எல்லோரும் தொகுப்பாக கற்றுக்கொண்டோம் என உறுப்பினர்கள் கூறினார்கள்.

 

ஒவ்வொரு நேரடிக் கூட்டத்தின் பொழுதும், இப்படி நடைமுறை சிக்கல்கள் குறித்து விவாதிப்பது அவசியம் என உறுப்பினர்கள் கருத்து தெரிவித்தார்கள். முதலில் ஒரு தலைப்பை விவாதித்துவிட்டு, இரண்டாவது தலைப்பாக இதை எடுத்துக்கொள்வோம் என முடிவு செய்யப்பட்டது.

 

இடையே, சுவையான இனிப்பு, காரத்தோடு, சூடான காபியும் வழங்கப்பட்டது.

 


பிப்ரவரி மாதத்தில் என்னென்ன தலைப்புகளில் விவாதிக்க இருக்கிறோம். அதில் உறுப்பினர்கள் என்னென்ன தலைப்புகளில் எடுக்கலாம் எனவும் விவாதித்து முடிவெடுக்கப்பட்டது.  விரைவில் குழுவில் பகிர்வோம்.

 

நம் சொசைட்டியில் புதிதாய் இணைந்த மூன்று உறுப்பினர்கள் - சிவசண்முகம் அவர்கள், இந்திரா பிரியதர்சினி அவர்கள், சண்முகவேல் அவர்கள்  தங்களைப் பற்றிய சுய அறிமுகம் செய்துகொண்டார்கள்.  

 

இந்திரா அவர்கள் CA இறுதி (Final) தேர்வுகளின் தயாரிப்பில் இருக்கிறார். நடைமுறை அனுபவம் வேண்டும் என நம்மோடு இணைந்திருக்கிறார். 

 


சண்முகவேல் அவர்கள் Tally மென்பொருள் நிறுவனத்தில் விற்பனை பிரிவில் இருக்கிறார்.  குழுவில் இன்றோ, நாளையோ இணைந்துவிடுவார்.  உறுப்பினர்கள் Tally குறித்து கேள்விகளை குழுவில் கேட்கலாம். அவர் உரிய பதிலளிப்பார்.

 


இதில் சிவசண்முகம் நம்முடைய மின்னிதழைப் பார்த்து நம்மை தொடர்புகொண்டார் என செயலர் தெரிவித்தார்.   மின்னிதழ் மூலம் இணையும் இரண்டாவது உறுப்பினர் இவர். நாம் முன்னெடுக்கும் செயல்பாடுகளை தொடர்ந்து மற்றவர்களுக்கு தெரிவிப்பதன் மூலம் நம்மோடு இணைகிறார்கள்.  உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் நாம் மாதம் தோறும் கொண்டுவரும் மின்னிதழை தொழில்முறை நண்பர்களுக்கு அனுப்பினால், இன்னும் நமது உறுப்பினர் வட்டம் பெருகும். அதை கவனத்துடன் செய்ய கேட்டுக்கொள்கிறோம்.

 

கூட்டம் நிறைவு பெற்றது.

 

நன்றி.

 

-         - GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/

No comments:

Post a Comment