GSTPS துவங்கி ஐந்தாம் ஆண்டு துவக்க விழாவின் பொழுது சொசைட்டிக்கென ஒரு தளத்தை கடந்த ஜூன் 2023 மாதம் துவங்கினோம். அதற்குள் 5000 பார்வையாளர்களை சென்றடைந்திருக்கிறோம். சராசரியாக மாதம் 625 என கணக்கில் கொண்டால், தினமும் 20க்கும் மேற்பட்டவர்கள் பார்க்கிறார்கள் என புரிந்துகொள்ளலாம்.
இந்தத் தளம் நிர்வாகிகள், பேச்சாளர்கள், உறுப்பினர்கள், பொதுப்பார்வையாளர்கள்
என அனைவரின் பங்களிப்பில் தான் உற்சாகமாக பயணிக்கிறது.
வாராந்திர
கூட்டங்கள் குறித்த அறிவிப்பு, கூட்ட அனுபவங்களையும், பேச்சாளர்கள் தயாரித்து விளக்கும்
பிபிடிகளையும், GSTPS தலைவர் செந்தமிழ்செல்வன் அவர்கள் பிற அமைப்புகள் நடத்தும் கூட்டங்களில்
கலந்துகொண்டு பேசும் பொழுது, அதற்கான பிபிடிகளையும், கூட்டத்தின் காணொளிகளை யூடியூப்பில் பகிர்ந்த பிறகு
அதற்கான சுட்டிகளையும் தளத்தில் பகிர்கிறோம்.
இப்படி மாதம்
குறைந்தபட்சம் சராசரியாக எட்டு பதிவுகளை இடுகிறோம். ஜூன் 2023 துவங்கி, இந்த மாதம் ஜனவரி 2024 வரை என ஆறு மாதங்களில்
76 பதிவுகளை பகிர்ந்திருக்கிறோம்.
தளத்தை இதுவரை
17 பேர் பின்தொடர்கிறார்கள். இப்படி பின் தொடர்வர்களுக்கு
நாம் ஒரு பதிவை வலையேற்றும் பொழுது அவர்களுடைய மின்னஞ்சலுக்கு உடனடியாக ஒரு அறிவிப்பை
தளம் அவர்களுக்கு அனுப்பி வைத்துவிடும்.
யூடியூப்,
பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்களை விட முந்தைய
தலைமுறையைச் சார்ந்தது தான் பிளாக் ஸ்பாட் தளம். துவங்கிய காலத்தில் உலகம் முழுவதும் இருக்கிற பிரபலங்களும், மக்களும் தங்கள் உணர்வுகளை
பகிர இது போன்ற தளங்களைத் தான் பெரும்பாலும்
பயன்படுத்தினார்கள். பின்னால் தான் யூடியூப்,
பேஸ்புக் மற்றவைகளும் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது.
வலைத்தளம்
யூடியூப், பேஸ்புக்கை விட பாதுகாப்பானது என
சொல்லலாம். யூடியூப்பும், பேஸ்புக்கும் நன்றாக கல்லாக்கட்டுவதால், முழுக்க முழுக்க
அவர்களுடைய கட்டுப்பாட்டுடன் இயங்குகிறது. ஆகையால் காபி ரைட் பிரச்சனை, பேஸ்புக்கில் யாரேனும் புகார்
எழுந்தால், உடனே முழுவதுமாய் தடை செய்துவிடுகிறார்கள். பழைய செய்திகள், நொடிப்பொழுதில்
புகைப்படங்கள் எல்லாமும் காணாமல் போய்விடும் அபாயம் இருக்கிறது. வலைத்தளத்தில் அந்த
பிரச்சனை காத்திரமாய் இல்லை. ஆகையால், நமது
சொசைட்டியின் செயல்பாடுகள் குறித்த ஆவணக் காப்பகமாக எப்பொழுதும் செயல்படும்.
நமக்கென ஒரு
தளத்தை உருவாக்கினால், நம் வசதிக்கேற்ப இன்னும் வண்ணமயமாய் உருவாக்கலாம். இன்னும் தேவைக்கேற்ப பல வசதிகளை அதில் கொண்டு வரலாம். நம்
சொசைட்டியின் வளர்ச்சியில் பல நூறு உறுப்பினர்கள் இணையும் பொழுது அப்படி ஒரு தளத்தின்
தேவை எதிர்காலத்தில் தேவைப்படும். அது வரை
இந்த வலைத்தளம் நமக்கு போதுமான வசதிகளை இலவசமாக தருவதால், இதுவே நமது பொருளாதார
ஆரோக்கியத்திற்கு நல்லது.
நமது வாடிக்கையாளர்கள்,
தொழில்முறை நண்பர்கள் ஏதேனும் ஒரு தலைப்பில்
சந்தேகம் கேட்டால், சுருக்கமாக பதில் சொல்வதோடு, தளத்தில் அது தொடர்பான பதிவு இருந்தால்,
அவர்களுக்கு அந்தச் சுட்டியை அனுப்பி வைத்து
படிக்க வைக்கிறோம்.
இப்படி இந்தத்
தளத்தை நமது உறுப்பினர்களும், பொது வெளியில் உள்ளவர்களும் தங்களது தொழில் தேவைக்கு
அடிக்கடி பயன்படுத்தும் பொழுது தான் அதனுடைய உண்மையான வெற்றி இருக்கிறது. ஆகையால் இந்த
தளத்தை தொழில்முறை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்துங்கள். தொழிலில் சுய முனைப்புடன் இருப்பவர்கள் இப்படி ஒரு
தளம் இருப்பது தெரிந்தால், ஆர்வத்துடன் தொடர்ந்து பயன்படுத்திக்கொள்வார்கள். நம்மோடு இணைந்து பயணிக்கவும் அவர்கள் நிச்சயம் விரும்புவார்கள்.
இந்த தளம்
உங்களுக்கு எப்படி பயன்படுகிறது? இன்னும் ஆரோக்கியமாக என்னென்ன செய்யலாம் என ஆலோசனைகள்
தந்தால் நல்லது. இன்னும் உற்சாகமாக பயணிக்கலாம்.
- - GSTPS
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/
No comments:
Post a Comment