வணக்கம். நேற்று சனிக்கிழமை (06/01/2024) அன்று GSTPS சார்பாக நடத்தப்படும் இணைய வழிக்கூட்டம் (Zoom) சிறப்பாக நடைபெற்றது.
தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கூட்டத்தை துவங்கி வைத்தார். “நமது உறுப்பினர் முனைவர் வில்லியப்பன் அவர்கள்
நமது உறுப்பினர்களுக்கு நல்ல பரிச்சயம் உள்ளவர்.
ஆகையால் அவரை குறிப்பிட்டு அறிமுகப்படுத்தவேண்டும் என்ற அவசியமில்லை. தொடர்ச்சியாக 30 ஆண்டுகளுக்கும் மேலாக
அம்பத்தூர் தொழிற்பேட்டையில் வரி ஆலோசகராக பணியாற்றிவருகிறார். ஆகையால், வரித்துறை சம்பந்தப்பட்ட அறிவிலும், குறிப்பாக
நடைமுறை ரீதியாகவும் நிறைய அனுபவம் உள்ளவர் என அறிமுகப்படுத்தினார்.
முனைவர் வில்லியப்பன் அவர்கள் "Conversion of Sole Proprietorship to
Partnership - Impact under GST & IT" – தலைப்பை பிபிடிகளை
கொண்டு விளக்க துவங்கினார்.
தனிநபர் நிறுவனம்?
கூட்டு நிறுவனம்? அதற்குரிய இயல்பு, தன்மைகள், வரம்புகள் என்னென்ன?
நடைமுறையில் எந்தெந்த சூழ்நிலைகளில் மாறவேண்டிய நிலைமை
ஏற்படுகிறது?
மாறும் பொழுது என்னென்ன ஜி.எஸ்.டி. அம்சங்கள், வருமான வரித்துறை
அம்சங்கள், இ.எஸ்.ஐ, பி.எப் அம்சங்களை கவனமாக
கவனிக்கவேண்டும்.
அப்படி கவனிக்காமல் விடும் பொழுது என்னென்ன பிரச்சனைகளை
எதிர்கொள்கிறோம்
என்பதை விரிவாக விளக்கினார்.
இந்த தலைப்பை எடுத்துக்கொள்ளும் பொழுது, எளிதாக விளக்கிவிடலாம்
என்ற நம்பிக்கை இருந்தது. ஆனால், இதில் ஜி.எஸ்.டி சட்டம், வருமான வரிச் சட்டத்தில்
உள்ள அம்சங்களையும், நடைமுறை ரீதியாகவும் என்னென்ன அம்சங்கள் இருக்கின்றன என தொகுக்கும்
பொழுது, நிறைய சந்தேகங்கள் எழுந்தன. நமக்கு
பழக்கமான வழக்கறிஞர், தணிக்கையாளர்களிடம் விவாதித்த பொழுது, இது சம்பந்தமாக அவர்களுக்கும்
பெரிய பரிச்சயம் இல்லை என தெரியவந்தது. நாம் தொகுத்ததை இங்கு முன்வைத்துவிடலாம். இதை விவாதமாக
எடுத்துகொண்டு செல்லலாம் என முன்வைத்துவிட்டேன் என பேசி முடித்தார்.
அதற்கு பிறகு பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகள், பேச்சாளரும்,
தலைவரும் மற்ற நிர்வாகிகளும் தங்களுடைய பல அனுபவங்களை பகிர்ந்துகொண்டது எல்லோருக்கும்
நல்ல புரிதலை உருவாக்கி தந்தது.
பொருளாளர் செல்வராஜ் ”தலைப்பு எளிமையானது என்று தான் துவக்கத்தில்
தோன்றியது. ஆனால் விளக்கிய பிறகும், விவாதங்களுக்கு பிறகும் இந்த தலைப்பு அப்படி எளிதானது
அல்ல என புரிகிறது” என பேச்சாளருக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி தெரிவித்து
கூட்டத்தை முடித்து வைத்தார்.
நன்றி.
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/
No comments:
Post a Comment