Sunday, July 14, 2024

GSTPS : Benefits to Employees under ESIC Scheme - R. Muniasamy, GSTPS Member

 


அனைவருக்கும் வணக்கம்.


இ.எஸ்.ஐ திட்டத்தில் தொழிலாளர்களுக்கான நலன்கள் குறித்து!”   கடந்த (13/07/2024) சனிக்கிழமையன்று ஜூம் கூட்டம் சிறப்பாக நடந்தேறியது. நமது GSTPS உறுப்பினர்களும், தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்தும்  பலரும் கலந்துகொண்டார்கள். இந்த முறை கூட்டத்தில் பங்கு கொள்வதற்கு, பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் என பதிவு அவசியம் என தெரிவித்தும், திரளாக கலந்துகொண்டது இ.எஸ்.ஐ  குறித்து அறிந்துகொள்ள விரும்புகிறார்கள் என்பது புரிகிறது.

 

கூட்டத்தை செயலர் பாலாஜி அனைவரையும் வரவேற்று துவங்கி வைத்தார். தலைவர் செந்தமிழ்ச்செல்வன், பேச்சாளரை அறிமுகப்படுத்தும் பொழுது,  “சொசைட்டியில் உற்சாகமாக செயல்படும் உறுப்பினர் முனியசாமி.  நம் சொசைட்டியின் சமூக வலைத்தளப் பக்கங்களை அவர் தான் பராமரித்து வருகிறார். அவர் தொடர்ந்து பேசவேண்டும்” என வாழ்த்து தெரிவித்தார்.

 

”கடந்த ஆண்டு, தலைவர் பி.எப். இ.எஸ்.ஐ குறித்து பேச சொன்ன பொழுது, ஒரு பறவைப் பார்வையில் இரண்டு தலைப்புகளிலும் பேசினேன்.   இப்பொழுது அதன் தொடர்ச்சியாக இ.எஸ்.ஐ குறித்து இன்னும் கொஞ்சம் விரிவாக பேசலாம்.

 

·         பிரிட்டிஷ் காலத்திலேயே தொழிலாளர்களுக்கான இப்படி ஒரு மருத்துவ வசதி தரவேண்டும் என விவாதித்தார்கள்.

 

·         1948ல் சட்டமாக்கப்பட்டு, 1952ல் உ.பி. கான்பூரில் அப்போதைய பிரதமர் ஜவஹர்லால் நேரு துவங்கி வைத்தார்.

 

         இப்பொழுது மனிதனுடைய சராசரி வாழ்வு 70 என உலக சுகாதார மையம் சொல்கிறது.  ஆனால், 1950களில் 35 என்று தான் இருந்தது.  காரணம் மலேரியாவால் ஆண்டுக்கு பத்து லட்சம், காச நோயால் ஆண்டுக்கு 2.25 லட்சம், பிரசவத்தில் பெண்கள் ஒரு லட்சத்துக்கு 2000 பேர் வரை இறந்தார்கள். 70 ஆண்டு மருத்துவ துறையின் வளர்ச்சியில் எல்லாவற்றையும் மட்டுப்படுத்தியதில்… இ.எஸ்.ஐ.யும் நல்ல பங்களித்திருக்கிறது.

 

·         இந்தியா முழுவதும் மருத்துவமனைகள், டிஸ்பன்சரிஸ் என இ.எஸ்.ஐ. தொழிலாளர்களுக்கு மருத்துவ வசதிகளை அளித்து வருகிறது.

 

·         ரூ. 21000 வரை சம்பளம் பெறுபவர்கள் இந்தத் திட்டத்தில் பலன்பெறுகிறார்கள்.  மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ. 25000 வரை செலுத்தலாம்.

 

·         தொழிலாளர்களுக்கு உடல் நல குறைபாடு, அறுவை சிகிச்சைகள், இ.எஸ்.ஐயில் செய்ய இயலாத மருத்துவத்தை தனியார் மருத்துவமனைகளும் பங்களிக்க அவர்களோடு ஒப்பந்தம்.  வேலைக்கு செல்ல இயலாத காலத்தில் பணபலன்கள்,  பகுதி ஊனம், முழுமையான ஊனம் ஏற்பாட்டால் ஓய்வூதிய உதவி, தொழிலாளி இறந்து போனால்,  குடும்பத்தினருக்கு உதவி,  இறப்புச் சடங்குகளை செய்ய ரூ. 15000 என அதனுடைய செயல்பாடுகள் ஆரோக்கியமானவை.

 

·         ஒவ்வொரு நிறுவனத்தில் சேரும் பொழுதும், தொழிலாளர்கள் ஒரே எண்ணை கொண்டு, தொடர்ந்து பணம் செலுத்துவது தான் சரியானது. இல்லையென்றால், சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவம் என பல நோய்களுக்கு சிறப்பு மருத்துவம் கிடைப்பதற்கு காலம் தாமதமாகும். ஒரு தொழிலாளிக்கு என்னென்ன வசதிகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்பதற்கு, இ.எஸ்.ஐ ஒரு தளமே உருவாக்கி தந்துள்ளது.

 

·         சிறப்பு ஒரு பக்கம் என்றால், அதன் போதாமைகளும் உண்டு.  மருத்துவமனைகள் இன்னும் நிறைய திறக்கப்படவேண்டும்.  திருப்பூரில் 1.75 லட்சம் தொழிலாளர்கள் வருடந்தோறும் 85 கோடி செலுத்துகிறார்கள். கடந்த பல வருடங்களாக, 45 கிமீ தூரத்தில் கோவைக்கு சென்று மருத்துவம் பார்க்கிறார்கள்.   தொடர்ச்சியான கோரிக்கைக்கு பிறகு, சமீபத்தில் தான் மருத்துவமனையை திறந்துள்ளார்கள். சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூர்,  தூத்துக்குடி, திண்டுக்கல், வாணியம்பாடி, நாகர்கோவில் என பல ஆண்டுகளாக  இடம் தேடுகிறார்கள். அடிக்கல் நடுகிறார்கள். ஆனால் தாமதிக்கிறார்கள். திறக்கப்பட பல ஆண்டுகள்  மக்கள் காத்திருக்கிறார்கள். மக்கள் ஆரோக்கியமாக இருந்தால், நாட்டின் உற்பத்தியும் கூடும். ஆகையால் கூடுதல் நிதி ஒதுக்கி இதையெல்லாம் சாத்தியப்படுத்தவேண்டும்.

 

·         இந்தியாவில் இ.எஸ்.ஐ சார்பில் 10 மருத்துவ கல்லூரிகள் இருக்கின்றன. (இதில் சென்னையில் , கோவை என இரண்டு இருக்கின்றன.) 437 MBBS இருக்கைகளும், 28 பல் மருத்துவ இருக்கைகளும் இருக்கின்றன. இதில் இ.எஸ்.ஐ. பணிபுரிகிற தொழிலாளர்களுக்கென்று இட ஒதுக்கீடும் இருக்கின்றன. இதைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

 

·         பல தொழிலாளர்கள் இ.எஸ்.ஐயை பயன்படுத்துவதில்லை. அதில் கிடைக்கும்  பலன்கள் அதிகம். அதைப் பயன்படுத்திக்கொண்டவர்கள், தொடர்ந்து செல்கிறார்கள். ஆகையால் பயன்படுத்துங்கள்.

 

·         தொடர்ந்து பேச உற்சாகம் அளிக்கும் தலைவர் அவர்களுக்கும், இ.எஸ்.ஐ சட்டம், நடைமுறை குறித்து கற்றுக்கொடுத்து,  சந்தேகம் கேட்கும் பொழுதெல்லாம் தீர்த்து வைக்கும் சீனியர் வில்லியப்பன் அவர்களுக்கும், கூட்டத்தை சிறப்பாக ஏற்பாடு செய்த நிர்வாகிகளுக்கும் நன்றி சொல்லி, உரையை முடித்தார்.

 

பங்கேற்பாளர்கள் சிலர் கேள்வி கேட்டார்கள்.  கோவையில் இருந்து பெருமாள் அவர்களும், சீனியர் வில்லியப்பன் அவர்களும் தெளிவான பதிலை தந்தார்கள்.  அவர்களுக்கும் நன்றி.

 

”இ.எஸ்.ஐ ஜி.எஸ்.டியை போல மிகவும் சிக்கல் இல்லாத துறை. ஆகையால், வரி ஆலோசகர்கள் இதையும் கையாளலாம். வருமானம் வரும்” என நல்ல ஆலோசனையாக பெருமாள் அவர்கள் தெரிவித்தார். உண்மை.  இதில் எந்த சந்தேகம் இருந்தாலும், சீனியர் வில்லியப்பன் அவர்களையும், என்னையும் தொடர்பு கொள்ளுங்கள். உதவ தயாராக இருக்கிறோம்.

 

பங்கு கொண்ட அனைவருக்கும் பொருளாளர் செல்வராஜ் நன்றி தெரிவித்து, கூட்டத்தை முடித்துவைத்தார். 

நன்றி.

 

-         GSTPS


பின்குறிப்பு : பேச்சாளர் பயன்படுத்திய பிபிடிகளை இங்கு பகிர்கிறோம்.  பயன்படுத்திக்கொள்ளுங்கள். தேவையானவர்களுக்கும் பகிருங்கள்.
























தொடர்பு கொள்ள
 
: 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Friday, July 12, 2024

GSTPS : "Benefits to Employees under ESIC Scheme" - R. Muniasamy, GSTPS Member

 


அன்புள்ள உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும், 


வணக்கம்.  GSTPS வழக்கமாக மாதத்தில் மூன்று சனிக்கிழமைகளில் இணைய வழிகளில் கூட்டம் நடத்துவது வழக்கம்.  அதன் தொடர்ச்சியில்... 13/07/2024 சனிக்கிழமை அன்று காலை 10.30 மணியளவில் “இ.எஸ்.ஐ திட்டத்தில்  தொழிலாளர்களுக்கான நலத்திட்டங்கள் குறித்து” நமது உறுப்பினர் இரா. முனியசாமி அவர்கள் பேச இருக்கிறார்.


ஆகையால் வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள்.  இது சம்பந்தமாக தெரிந்துகொள்ளவேண்டும் என்ற தேவை உள்ளவர்களுக்கும் இந்த செய்தியை அனுப்புங்கள். 


வழக்கமாக  ஒரு கூட்டத்திற்கான எண்ணையும் (User ID ) , அதற்கான கடவுச் சொல்லையும் (Password)  பகிர்வோம்.  சில தவிர்க்க இயலாத காரணங்களால், அதில் சில மாற்றங்களை செய்திருக்கிறோம்.  இப்பொழுது நீங்கள் கீழே உள்ள  ஜூம் லிங்கை பயன்படுத்தி, உங்களுடைய பெயர், மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி கொடுத்து பதிவு  செய்தால்  உங்களுடைய மின்னஞ்சலுக்கு  User ID, Password இரண்டும் வந்து சேரும்.  அதைப் பயன்படுத்துவதின் மூலம் கூட்டத்தில்  கலந்துகொள்ளலாம்.


நன்றி.


- GSTPS



Hi Members and Friends

 

GST Professionals Society is inviting you to a scheduled 141st Zoom meeting. 

 

Topic : "Benefits to Employees under ESIC Scheme"  Speaker Mr R Muniasamy Time : Jul 13, 2024 10:30 AM India Register in advance for this meeting:

https://us02web.zoom.us/meeting/register/tZEufuqhrTgtHdE8i7L0N_HAViKUm5hG3PXp

 

After registering, you will receive a confirmation email containing information about joining the meeting.


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety



Saturday, July 6, 2024

GSTPS : 53வது ஜி.எஸ்.டி சபைக் கூட்டத்தின் பரிந்துரைகளும், அதைத் தொடர்ந்து வந்த 16 சுற்றறிக்கைகளும்! – திரு. சிவரூப கணேஷ், தணிக்கையாளர்

  


வணக்கம். சனிக்கிழமையான இன்று (06/07/2024)   வழக்கம் போல இணைய வழியில் (ஜூம்) கூட்டம்  நடைபெற்றது.   சிறப்பு பேச்சாளர் சிவரூபகணேஷ் அவர்கள் சிறப்பாக பேசினார்.  நமது உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.

 

அவரைப் பற்றிய அறிமுக உரையில், தலைவர் “உற்சாகமான இளைஞர். முதல் முயற்சியிலேயே தணிக்கையாளர் ஆனவர்.   படிக்கும் காலத்திலேயே சிறப்பாக பேசி பாராட்டு பெற்றவர். தன் நிறுவனத்தின் பெயரிலேயே ஒரு யூடியூப் சானலை உருவாக்கி, ஜி.எஸ்.டி குறித்து  புதிய வடிவில் காணொளிகள் வெளியிட்டு வருகிறார். வேறொரு கூட்டத்தில் சிறப்பாக பேசியதைப் பார்த்தேன். அதனால் நமது சொசைட்டியிலும் பேச அழைத்தேன்.” என பாராட்டி வரவேற்று பேசினார்.

 

சிவரூபகணேஷ் அவர்களுடைய சானல்!   https://www.youtube.com/@ShivaRoopaGanesh  இதுவரை 19 காணொளிகள் வெளியிட்டுள்ளார்.

 

53வது ஜி.எஸ்.டி சபைக்  கூட்டத்தின்  பரிந்துரைகளையும், அதனைத் தொடர்ந்து வந்த 16 சுற்றறிக்கைகளையும் பற்றியும் பிபிடிகளின் வழியே பேச்சாளர் விளக்க ஆரம்பித்தார்.

 

·         பரிந்துரைகள், பத்திரிக்கைச் செய்தி, சுற்றறிக்கைகள் இதற்கான சட்ட அங்கீகாரம் என்ன?  எவை அதிகாரிகளுக்கு வழிகாட்டுகின்றன? எதை அதிகாரிகள் மறுக்கமுடியாது? என்கிற ஜி.எஸ்.டி அமைப்பின் கட்டமைப்பை நன்றாக விளக்கினார். சில அறிவிப்புகளுக்கு மத்திய அவையின் ஒப்புதல் வேண்டும். ஆகையால் சில அறிவிப்புகள் புதிய பட்ஜெட்டுக்கு பிறகு தான்  நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.

 

·         மார்ச் 31, 2015க்குள் பணத்தை செலுத்துங்கள். வட்டி, அபராதத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்! என அரசு பரிந்துரைத்ததும், பலரும் இதுவரை நாம் கட்டிய வட்டி, அபராதத்தை ஜிஎஸ்.டி திரும்ப தருமா? என கேட்கிறார்கள்.  ஜி.எஸ்.டி சபையின் சிந்தனை எல்லாம், நீதிமன்ற வழக்குகளில் நிறைய வரி தேங்கி கிடக்கின்றன.  இந்த அறிவிப்பின் மூலம், வரியையாவது வசூலிக்கலாம்  என்ற யோசனையில் இருந்து தான் இந்த அறிவிப்பு.  ஏற்கனவே கட்டிய வட்டியை, அபராதத்தை திரும்ப தந்தால், உள்ளே வரும் வருமானத்தை விட, கையை விட்டு போகும் தொகை அதிகமாக இருக்கும். ஆகையால் அப்படி நடக்க வாய்ப்பில்லை என்றார்.

 

இப்படி ஒவ்வொரு சுற்றறிக்கையையும் சட்டம் என்ன சொல்கிறது? சுற்றறிக்கை  என்ன சொல்கிறது? அதில் சொல்ல தவறிய அம்சம் என்ன? என்பதை தெளிவாகவும், விரிவாகவும் விளக்கினார்.

 

அவர் பகிர்ந்து கொண்ட பிபிடிகள் ரத்தின சுருக்கமாக இருக்கின்றன. அவருடைய உரையை கேட்கும் பொழுது தான் நன்றாக தெளிவாக கற்றுக்கொள்ளமுடியும்.   அவருடைய பிபிடிகளை நமது தளத்தில் இப்பொழுது பகிர்கிறோம். பாருங்கள்.

 

53வது ஜி.எஸ்.டி சபை கூட்டம் பரிந்துரைகளை அறிவித்ததுமே அவருடைய சானலில் ஒரு காணொளி வெளியிட்டார். வாய்ப்புள்ளவர்கள் பாருங்கள்.

https://www.youtube.com/watch?v=OCWc9mluDhs&t=177s

 

கூட்டத்தில், மதுரையில் இருந்து முருகேசன் அவர்களும், நமக்கு அறிமுகமான சம்சுதீன் அவர்களும் கலந்துகொண்டார்கள்.  பங்கேற்பாளர்களில் சிலர் சந்தேகம் கேட்டார்கள்.  அவர்களுக்கும் பேச்சாளர் பதிலளித்தார்.

 

பொருளாளர் செல்வராஜ் அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல, கூட்டம் இனிதே நிறைவுற்றது.

 

-        -  GSTPS
























தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety



Friday, July 5, 2024

GSTPS : நமது தளத்திற்கு இன்றுவரை 10000 பார்வையாளர்கள் வருகை தந்திருக்கிறார்கள்!



அனைவருக்கும் வணக்கம்.

 

நமது தளத்தை கடந்த ஆண்டு ரிசார்ட் செல்லும் பொழுது தான் ஜூனில் 2023ல் உற்சாகமாக துவங்கினோம்.  

 

நமது கூட்ட நிகழ்வுகள், அறிவிப்புகள், பேச்சாளர்கள் தரும் பிபிடிகள், நமது மாத மின்னிதழ்கள் என ஒரு வாரத்திற்கு இரண்டு என்ற அடிப்படையில், ஒவ்வொரு மாதமும் சராசரியாக எட்டு பதிவுகளுக்கு மேல் பகிர்ந்துள்ளோம்.

 

13 மாதங்களில் 10000 பார்வைகள் என்றால், ஒரு நாளைக்கு சராசரியாக 25 பார்வையாளர்கள்.  தொடர்ந்து நமது தளத்திற்கு வருகை  தருகிறார்கள், படிக்கிறார்கள் துவக்க மாதங்களில் தினசரி 10 பேர் வருகை தந்தார்கள்.  இது ஒரு நல்ல முன்னேற்றம் என புரிந்துகொள்ளலாம்.

 

நமது தளத்தின் வெற்றி என்பது ஒரு நமது  உறுப்பினரோ, நமது துறைசார்ந்த தனிநபரோ  தன் தொழில் தேவைக்கு நடைமுறையில் எழும் சந்தேகங்களுக்கு நமது தளத்திற்கு பதில் கிடைக்கும் என நம்பி வந்தால், அது தான் வெற்றி. 

 

இது கூட்டு உழைப்பிற்கு கிடைத்த ஒரு வெற்றி.   தளத்தை மேம்படுத்துவதற்கான ஆலோசனைகளைப் பகிர்ந்துகொள்ளுங்கள்.

 

நன்றி.

 

-          - GSTPS


https://gstprofessionalssociety.blogspot.com/

 

Wednesday, July 3, 2024

வரி ஆலோசகர்களுக்கு உதவ... மெட்டா தரும் வாட்சப்பில் புதிய தொழில் நுட்பம்


வாட்சப் உள்ளே நுழைந்தால்... +பச்சைக் கட்டத்திற்கு மேலே . AI ஒன்றை ( சாட் ஜிபிடி போல) மெட்டா அதாவது வாட்சப் புதிய வசதி ஒன்றை அறிமுகப்படுத்தியிருக்கிறது! கவனித்தீர்களா?


அதைத் தொட்டால்... வாட்சப்பில் புதிய பக்கம் ஒன்றை திறக்கிறது. 

GST Council 53rd recommendations பற்றி கேள்வி கேட்டு.... அதை அனுப்பினால்... சில நொடிகளில்...


Clear Tax தளத்தின் கட்டுரையை எடுத்து வந்து விரிவாக இப்படி காண்பிக்கிறது.


The 53rd GST Council meeting, which took place on June 22, 2024, in New Delhi, made the following recommendations ¹ ² ³ ⁴:


- Tax rate revisions and exemptions:

- A uniform 5% IGST will be applied to aircraft parts.

- Milk cans, carton boxes, solar cookers, and poultry machinery parts will have a 12% GST.

- Services provided by Indian Railways for platform tickets and battery-operated car services are exempt.

- Accommodation services up to Rs. 20,000 per month per person for stays over 90 days are exempt.

- Imports of specified items for defense forces are IGST exempt until June 30, 2029.

- Facilitation measures:

- Waiver of interest and penalty for fiscal years 2017-18 to 2019-20 if paid by March 31, 2025.

- Monetary limits for government appeals in GST cases to reduce litigation.

- Pre-deposit amount for filing appeals reduced.

- Biometric Aadhaar authentication for GST registration.

- A common time limit for demand notices and orders for 2024-25.

- Sunset date for anti-profiteering applications set for April 1, 2025.

****


கல்கி திரைப்படத்தில் நடித்தவர்கள் யார் யார்.. என கேட்டேன். 

புஜ்ஜியாக நடித்திருப்பது கீர்த்தி சுரேஷ் என்பது வரையிலான தகவல்களை கொடுக்கிறது...


-Saran


படம் வரைவதில் இன்னும் கற்றுக்குட்டிதான். சிறு உருவங்களாக தோன்றும் மனிதர்களின் மூக்கும் முழியும் நன்றாக இருப்பதில்லை. 


- Arul Murugan


நான் அதை Quiz master ஆக மட்டும் தான் பயன்படுத்தி வருகிறேன்!


- Rajesh


விவரங்கள் கேட்கும் போது சிலவற்றை இணைத்திலிருந்து அப்படியே தருகிறது. நான் முக்கியமாக மெட்டா பற்றிய கேள்விகளுக்கு பயன்படுத்துகிறேன். தமிழ் கொஞ்சம் தகராறுதான்.


- குமரன்


நூலகங்கள் பற்றிய கேள்விகளுக்கு AI அளித்த பதில் பொருந்தி போகிறது.  உரையாடல் மொழி குறித்த கேள்விகளுக்கு விரிவாகவும் எளிமையாகவும் பதில் தருகிறது.


- சித்ரா


இதெல்லாம் பிறரின் அனுபவங்கள். (From Facebook)


வேறு வேறு வகைகளில்... முயன்று கற்றுக்கொள்ளுங்கள்.  வரி ஆலோசகர்களான நம் தொழிலுக்கு நிச்சயம்  பயன்படும். 


சாட் ஜிபிடியோ, மெட்டா ஏஐ யோ மனிதர்களுடைய அறிவை நமக்கு தொகுத்து எளிதாக தருகிறது. அதைக் கற்றுக்கொண்டு நாம் முன்னேறவேண்டும்.  இல்லையெனில், நம்மை ஓரிடத்தில் நிறுத்திவிட்டு, நம்மை கடந்து சென்றுவிடுவார்கள்.


#புதியதொழில்நுட்பம் கற்போம்

#நம் தொழிலை ஆற்றலுடன் முன்னேற்றுவோம்