வணக்கம். சனிக்கிழமையான இன்று (06/07/2024) வழக்கம் போல இணைய வழியில் (ஜூம்) கூட்டம் நடைபெற்றது. சிறப்பு பேச்சாளர் சிவரூபகணேஷ் அவர்கள் சிறப்பாக பேசினார். நமது உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.
அவரைப் பற்றிய
அறிமுக உரையில், தலைவர் “உற்சாகமான இளைஞர். முதல் முயற்சியிலேயே தணிக்கையாளர் ஆனவர். படிக்கும் காலத்திலேயே சிறப்பாக பேசி பாராட்டு
பெற்றவர். தன் நிறுவனத்தின் பெயரிலேயே ஒரு யூடியூப் சானலை உருவாக்கி, ஜி.எஸ்.டி குறித்து புதிய வடிவில் காணொளிகள் வெளியிட்டு வருகிறார்.
வேறொரு கூட்டத்தில் சிறப்பாக பேசியதைப் பார்த்தேன். அதனால் நமது சொசைட்டியிலும் பேச
அழைத்தேன்.” என பாராட்டி வரவேற்று பேசினார்.
சிவரூபகணேஷ்
அவர்களுடைய சானல்! https://www.youtube.com/@ShivaRoopaGanesh இதுவரை 19 காணொளிகள் வெளியிட்டுள்ளார்.
53வது ஜி.எஸ்.டி
சபைக் கூட்டத்தின் பரிந்துரைகளையும், அதனைத் தொடர்ந்து வந்த 16 சுற்றறிக்கைகளையும்
பற்றியும் பிபிடிகளின் வழியே பேச்சாளர் விளக்க ஆரம்பித்தார்.
·
பரிந்துரைகள்,
பத்திரிக்கைச் செய்தி, சுற்றறிக்கைகள் இதற்கான சட்ட அங்கீகாரம் என்ன? எவை அதிகாரிகளுக்கு வழிகாட்டுகின்றன? எதை அதிகாரிகள்
மறுக்கமுடியாது? என்கிற ஜி.எஸ்.டி அமைப்பின் கட்டமைப்பை நன்றாக விளக்கினார். சில அறிவிப்புகளுக்கு
மத்திய அவையின் ஒப்புதல் வேண்டும். ஆகையால் சில அறிவிப்புகள் புதிய பட்ஜெட்டுக்கு பிறகு
தான் நடைமுறைக்கு வரும் என தெரிவித்தார்.
·
மார்ச்
31, 2015க்குள் பணத்தை செலுத்துங்கள். வட்டி, அபராதத்தில் இருந்து தப்பித்துக்கொள்ளுங்கள்!
என அரசு பரிந்துரைத்ததும், பலரும் இதுவரை நாம் கட்டிய வட்டி, அபராதத்தை ஜிஎஸ்.டி திரும்ப
தருமா? என கேட்கிறார்கள். ஜி.எஸ்.டி சபையின்
சிந்தனை எல்லாம், நீதிமன்ற வழக்குகளில் நிறைய வரி தேங்கி கிடக்கின்றன. இந்த அறிவிப்பின் மூலம், வரியையாவது வசூலிக்கலாம்
என்ற யோசனையில் இருந்து தான் இந்த அறிவிப்பு. ஏற்கனவே கட்டிய வட்டியை, அபராதத்தை திரும்ப தந்தால்,
உள்ளே வரும் வருமானத்தை விட, கையை விட்டு போகும் தொகை அதிகமாக இருக்கும். ஆகையால் அப்படி
நடக்க வாய்ப்பில்லை என்றார்.
இப்படி ஒவ்வொரு
சுற்றறிக்கையையும் சட்டம் என்ன சொல்கிறது? சுற்றறிக்கை என்ன சொல்கிறது? அதில் சொல்ல தவறிய அம்சம் என்ன?
என்பதை தெளிவாகவும், விரிவாகவும் விளக்கினார்.
அவர் பகிர்ந்து
கொண்ட பிபிடிகள் ரத்தின சுருக்கமாக இருக்கின்றன. அவருடைய உரையை கேட்கும் பொழுது தான்
நன்றாக தெளிவாக கற்றுக்கொள்ளமுடியும். அவருடைய
பிபிடிகளை நமது தளத்தில் இப்பொழுது பகிர்கிறோம். பாருங்கள்.
53வது ஜி.எஸ்.டி
சபை கூட்டம் பரிந்துரைகளை அறிவித்ததுமே அவருடைய சானலில் ஒரு காணொளி வெளியிட்டார். வாய்ப்புள்ளவர்கள்
பாருங்கள்.
https://www.youtube.com/watch?v=OCWc9mluDhs&t=177s
கூட்டத்தில்,
மதுரையில் இருந்து முருகேசன் அவர்களும், நமக்கு அறிமுகமான சம்சுதீன் அவர்களும் கலந்துகொண்டார்கள். பங்கேற்பாளர்களில் சிலர் சந்தேகம் கேட்டார்கள். அவர்களுக்கும் பேச்சாளர் பதிலளித்தார்.
பொருளாளர் செல்வராஜ்
அவர்கள் அனைவருக்கும் நன்றி சொல்ல, கூட்டம் இனிதே நிறைவுற்றது.
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment