Tuesday, July 1, 2025

”ஜி.எஸ்.டி (GST) குறித்து மேலும் அறிந்துகொள்ளுங்கள்” – வெற்றிகரமாக 3வது பதிப்பை நோக்கி!


புத்தகத்தின் காலடித்தடங்கள்

 

எங்களது GSTPS சொசைட்டியின் தலைவர், புத்தகத்தின் ஆசிரியருமான செந்தமிழ்ச்செல்வன் அவர்கள், பல்வேறு வணிக இதழ்களில் கடந்த சில வருடங்களாக எழுதிவந்தார்.  அவற்றை  53  தலைப்புகளில்  தொகுத்து, கடந்த நவம்பர் வரைக்குமான அப்டேட்டுகளை தொகுத்தி, 575 பக்கங்கள் கொண்ட புத்தகம் 600 ரூபாய்க்கு, 500 புத்தகங்கள் முதல் பதிப்பாக கொண்டுவந்தார்கள்.

 

மணிமேகலை பிரசுரத்தார் 05/01/2025 அன்று சென்னையில் நடைபெற்ற புத்தக திருவிழாவின் மேடையில்முக்கிய ஆளுமைகள் மூலம் புத்தகம் வெளியிட்டார்கள்.  திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் நண்பர்களும்,  வரி ஆலோசகர்களும் கலந்துகொண்டு வாழ்த்து தெரிவித்தார்கள்.

 


தலைவர் அவர்களை கெளரவப்படுத்த சென்னையில் எங்களது GSTPS  சொசைட்டி சார்பில் புத்தகம் குறித்த அறிமுக விழாவை  11/01/2025 ஏற்பாடு செய்தோம். எங்களது உறுப்பினர்களும், வரி ஆலோசகர்களும், நண்பர்களும்  கலந்துகொள்ள அரங்கு நிறைந்தது.

 

புத்தகங்கள் குறித்த தகவல் தொடர்ந்து பல்வேறு வரி ஆலோசகர்கள் மூலம்  வரி ஆலோசகர்களுக்கு செல்ல செல்ல.. அநேகமாக தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களில் இருந்தும் புத்தகங்களை கேட்டு, பணம் அனுப்பினார்கள். அவர்களுக்கெல்லாம் இரண்டு, மூன்று வேலைநாட்களில் அனுப்பி வைத்தோம்.

 

வணிகர்களுக்கும் எளிதாக புரியும் விதத்தில் கேள்வி பதில்கள் வடிவத்தில் இருந்ததால் கேள்விப்பட்டு வணிகர்களும் வாங்க துவங்கினார்கள்.

 


எங்களது உறுப்பினர்களும், பல்வேறு வரி ஆலோசகர்கள் சார்ந்த அமைப்புகளும், தலைவரின் நண்பர்களும் புத்தகங்களை தங்களது உறுப்பினர்களுக்கும், நண்பர்களுக்கும் பரிந்துரைத்தார்கள்.   வாங்கியும் விநியோகித்தார்கள்.

 

மதுரையில் வரி ஆலோசகராகவும், GST Knowledge என்ற குழுவை இயக்கி வருபவரான திரு. பூரண செந்தில்குமார் அவர்கள் மொத்தமாய் வாங்கி தன் அலுவலகத்தில் வைத்துக்கொண்டு, நேரடியாக வருபவர்களுக்கும், தான் நடத்தும் கருத்தரங்களிலும் விற்பனை செய்தார். தபால் வழியாக கேட்டவர்களுக்கும் தன்னுடைய உதவியாளரை வைத்து அனுப்பிவைத்தார். இந்த புத்தகத்தை சில நூறு புத்தகங்களை விற்பனை செய்ததில் பெரும் உதவி செய்தார்.  அவருக்கு நன்றி.

 

வரி ஆலோசகர் திரு. நீலகண்டன் அவர்களும் புத்தகம் விற்பதற்கு உதவிகள் செய்தார். அவருக்கும் நன்றி.

 

இப்படி பலருடைய ஒத்துழைப்பில், புத்தகம் வெளியிட்ட ஒரு மாதத்திலேயே பதிப்பகம் வெளியிட்ட 500 புத்தகங்களில் 300 புத்தகங்களை SS சார் பெற்றதில், அனைத்து புத்தகங்களும் தீர்ந்தன.  பதிப்பகம் சென்னை புத்தக திருவிழாவிலும், தபால் வழியாகவும் அவர்களும் 200 புத்தகங்களை விற்றிருந்தார்கள்.

 

இரண்டாவது பதிப்பும் வெளிவந்தது!!

 


மணிமேகலை பிரசுரத்தின் பதிப்பாசிரியரான இரவி தமிழ்வாணன் அவர்களை SS சாரைச் சந்தித்த பொழுது,  ” விலை ரூ. 600 என இருந்தும் குறுகிய காலத்திற்குள் முதல் பதிப்பை நீங்களே பெரும்பாலும் விற்பனை செய்துவிட்டீர்கள். வாழ்த்துகள்.   இந்துஸ்தான் சேம்பரில் கூட்டம் நடத்திய பொழுது, அரங்கு நிறைந்த கூட்டம். அத்தனை பேரும் உங்கள் மீது மதிப்புக்கொண்டு வந்திருந்தார்கள் என்பது முக்கியமான விசயம்.  நான் வியந்துபோய்விட்டேன்” என்றார்.

 

புத்தகம் குறித்து தொழில் உலகம், தினகரன், தினத்தந்தி, தினமணி, தினமலர் போன்ற மாத, தினசரி இதழ்களில் மதிப்புரைகள் அடுத்தடுத்து வெளிவந்தன. TN Headlines சானல் SS சாரிடம் ஒரு பேட்டி எடுத்து வெளியிட்டது.


https://www.youtube.com/watch?v=kkJzZCsdXNY&t=426s



 

GSTPS சொசைட்டியை போன்று பல்வேறு மாவட்டங்களில் இயங்கும் அமைப்புகளின் நிர்வாகிகள் புத்தகங்களை குறித்து தங்கள் உறுப்பினர்களுக்கு தெரிவித்தார்கள்.

 

புத்தகங்களைப் படித்துவிட்டு, அவ்வப்பொழுது கருத்துகளையும் நேரில் மகிழ்வோடு பகிர்ந்துகொள்கிறார்கள்.  சிலர் தொலைபேசி செய்து சில சந்தேகங்களையும் கேட்டு தெளிவு பெறுகிறார்கள். ஆசிரியரை நேரில் வீட்டில் சந்தித்து பேசி, வாங்கிச் சென்று கொண்டிருக்கிறார்கள்.

 

புத்தகம் குறித்து மூன்று பேர் இரண்டு நிமிடங்கள், மூன்று நிமிடங்கள் காணொளிகளை GSTPS உறுப்பினர்கள் அனுப்பிவைத்தார்கள்.  GSTPS யூடியூப் தளத்தில் வெளியிட்டோம்.

 


ஜி.எஸ்.டியில் ஒரு சிறப்பு பிரிவு இருக்கிறது. புதிய புதிய வழிகளில் எப்படி ஜி.எஸ்.டி வரி வருவாயை அதிகப்படுத்துவது என்ற சிந்திக்கிற பிரிவு. அதன் அதிகாரிகளில் ஒருவர் தொடர்புகொண்டு, ஒரு மணி நேரம் புத்தகம் குறித்து பாராட்டியும், புத்தகம் குறித்தும் பேசியுள்ளார். ”எங்கள் கமிசனரை  சந்தியுங்கள். அதற்கு நான் ஏற்பாடு செய்கிறேன்” என சொல்லியிருக்கிறார்.

 

இந்த புத்தகத்தை தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள், வணிகர்கள் என பல தரப்பிலும் சென்று சேர்ந்துள்ளது. இருப்பினும் 800 புத்தகங்கள் என்பது மிக குறைவு. மாவட்டத்திற்கு 500 வரி ஆலோசகர்கள் உள்ள தமிழ்நாட்டில், பல ஆயிரம் விற்க வேண்டிய புத்தகம் இது. அவர்களுக்கு இந்த தகவல் சென்று சேருவதில் உள்ள பிரச்சனையால் குறைவாக போய்க்கொண்டிருக்கிறது.

 

அனைவருக்கும் நன்றி.

 

-    - GSTPS

 

புத்தகம் தேவைப்படுகிறவர்கள். கீழே உள்ள தொலைபேசி எண்ணுக்கு GPay செய்யுங்கள். புத்தகத்தின் விலை ரூ. 600. சென்னைக்குள் இருப்பவர்கள் தபால் வழியாக பெற விரும்புகிறவர்கள் கூடுதலாக ரூ. 50 அனுப்புங்கள். சென்னையைத் தாண்டி வெளியூர்களில், வெளி மாநிலங்களில் இருப்பவர்கள் ரூ. 100 அனுப்புங்கள். பணம் அனுப்பிய ஸ்கீரின் ஷாட்டையும், தங்கள் முகவரியையும் கீழ்க்கண்ட எண்ணுக்கு அனுப்புங்கள்.

 

நன்றி.

 

சு. செந்தமிழ்ச்செல்வன்,

தொழிலாற்றுநர்,

9841226856