Friday, June 30, 2023
"INCOME TAX RETURN FILING PRACTICAL APPROACH IN ITR 1" - Speaker CA P Balaji
GST PROFESSIONALS SOCIETY is inviting you to a scheduled 114th Zoom meeting.
Topic: "INCOME TAX RETURN FILING PRACTICAL APPROACH IN ITR 1" - Speaker CA P Balaji
Time: Jul 1, 2023 10:30 AM Mumbai, Kolkata, New Delhi
Join Zoom Meeting
https://us02web.zoom.us/j/6625536356?pwd=SzUvejc1TmJnNWlRMFMzdWNJazJwUT09
Meeting ID: 662 553 6356
Passcode: 01072023
---
One tap mobile
+16469313860,,6625536356#,,,,*01072023# US
+19294362866,,6625536356#,,,,*01072023# US (New York)
---
Dial by your location
• +1 646 931 3860 US
• +1 929 436 2866 US (New York)
• +1 301 715 8592 US (Washington DC)
• +1 305 224 1968 US
• +1 309 205 3325 US
• +1 312 626 6799 US (Chicago)
• +1 253 215 8782 US (Tacoma)
• +1 346 248 7799 US (Houston)
• +1 360 209 5623 US
• +1 386 347 5053 US
• +1 507 473 4847 US
• +1 564 217 2000 US
• +1 669 444 9171 US
• +1 669 900 6833 US (San Jose)
• +1 689 278 1000 US
• +1 719 359 4580 US
• +1 253 205 0468 US
Meeting ID: 662 553 6356
Passcode: 01072023
Find your local number: https://us02web.zoom.us/u/kDtyqOinI
Wednesday, June 28, 2023
GSTPS : GST EDUCATIONAL PROGRAMME of July 2023
OUR GSTPS GST EDUCATIONAL PROGRAMME OF THE MONTH OF JULY 2023
ALL TOPIC WILL BE HANDLED BY OUR GSTPS MEMBERS
Sl. TOPIC SPEAKERS
1 01-07-2023 ZOOM 10.30 AM IT RETURN PRACTICAL APPROACH
ITR- 1 CA P. BALAJI
2 08-07-2023 ZOOM 10.30 AM FILNG OF ITR-IV G. SIVAKUMAR
3 15-07-2023 ZOOM 10.30 AM FILNG OF ITR-III S. BALAJI
4 22-07-2023 DIRECT 2.00 PM FILNG OF ITR-II BALAHJI ARUNACHALAM
குறிப்பு : முதல் மூன்று கூட்டங்களை ஜூம் வழியில் நடத்துகிறோம். ஆகையால் யார் வேண்டுமென்றாலும், கலந்துகொள்ளலாம். அதற்குரிய பதிவு எண்ணையும், உள்ளே நுழைவதற்கான பாஸ்வேர்டையும் பிறகு பகிர்ந்துகொள்கிறோம்.
நான்காவது கூட்டமாக நேரடிக் கூட்டம் எங்களது GSTPS உறுப்பினர்களுக்காக சிறப்பாக நடத்தப்படுவது. ஆகையால், உறுப்பினர்கள் மட்டுமே கலந்துகொள்ள முடியும்.
GSTPS சொசைட்டிக்கான புதிய தளம் அறிமுகம்!
எங்களது புதிய தளத்தின் முகவரி
https://gstprofessionalssociety.blogspot.com/
வணக்கம்.
எங்களது GSTPS சொசைட்டிற்கான தளம் ஒன்றை வெற்றிகரமாக துவங்கியுள்ளோம். இந்த தளம் எங்களது செயல்பாடுகளை, அறிவிப்புகளை,
குறிப்பிட்ட தலைப்பில் பேசும் பேச்சாளர்கள் பயன்படுத்தும் பிபிடிகளை என நிறைய பகிரலாம்
என இருக்கிறோம்.
எங்களது உறுப்பினர்கள், எங்களைப் போன்ற வரி ஆலோசகர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த தளத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற பொது நோக்கில் இந்த தளத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
தளத்தில் உள்ள வசதிகள்
1. GSTPS சொசைட்டியின் பதிவு முகவரி, தொடர்பு கொள்ள மின்னஞ்சல், தொடர்பு கொள்ள செல்பேசி எண்ணைப் பகிர்ந்துள்ளோம்.
2. நிர்வாகிகள் : GSTPS நிர்வாகிகளுடைய குழுப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளோம்.
3. நமது தளம் GST, IT மற்றும் துறைகளுக்கு நாம் கவனம் கொடுப்பதால், அது குறித்த படத்தை பகிர்ந்துள்ளோம்.
4. பதிவுகள் - நாங்கள் என்னென்ன பதிவுகள் பகிர்ந்துள்ளோம் என தேதி வாரியாக இதில் பார்த்துக்கொள்ளலாம்.
5. தளத்தைப் பார்க்கும் புதியவர்கள் GSTPS சொசைட்டியில் இணைவதற்கு பெயர், மின்னஞ்சல் முகவரி, தங்கள் கருத்தை/ஆலோசனையை/தொலைபேசி எண்ணை தருவதற்கு என ஒரு இடம் தந்துள்ளோம்.
6. பதிவுகளின் வகைகள் – என்பது குறிப்பிட்ட தலைப்புகளில் தொடர்ந்து வெளியிடுவோம். அந்த பதிவுகளை எல்லாம், ஒரு தலைப்பு கொடுத்து வகைப்படுத்தி தான் வெளியிடுகிறோம். குறிப்பிட்ட தலைப்பைத் தொட்டால், அந்த தலைப்பு சார்ந்த பதிவுகளை தளம் காண்பிக்கும்.
7. Search this Blog - தளத்தில் ஏதாவது ஒரு தலைப்பை தேடவேண்டுமென்றால், குறிப்பிட்ட வார்த்தையை தட்டச்சு செய்தால், அந்த வார்த்தை உள்ள பதிவுகளை தளம் நமக்கு காண்பிக்கும்.
10. பார்வைகள் - தளத்தை எத்தனைப் பேர் பார்வையிட்டுள்ளார்கள் என்பதை காண்பிக்கும்.
.
- GSTPS
Saturday, June 24, 2023
GSTPS : Formation of Private Limited Company - Why & How? - K. Selvaraj, CMA
GSTPS – ஒரு அறிமுகம்! எங்களோடு இணைந்து பயணியுங்கள்!
2017ல் இந்தியாவில் ஜி.எஸ்.டி அறிமுகமான பொழுது பொழுது தணிக்கையாளர்களும்,
முதலாளிகளுக்கான சங்கங்களும், வரி ஆலோசகர்களும், மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம்
எழுதிக்கொண்டிருந்தார்கள். நிறைய சந்தேகங்கள் சூழ்ந்திருந்தன.
இந்த இக்கட்டான சமயத்தில் தான் சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிக வரி ஆலோசகராக அனுபவம் வாய்ந்த செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் முன்னெடுப்பில், இந்த சொசைட்டியை அவரைப் போல ஒரே சிந்தனை கொண்டவர்களும் இணைந்து ஜி.எஸ்.டி புரொபசனல்ஸ் சொசைட்டியை உருவாக்கினோம்.
சொசைட்டியில் தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் என எல்லா நிலைகளிலும் உறுப்பினர்களாய் இணைந்தார்கள். துவக்க நிலையில் மாதம் ஒரு கூட்டம் என ஏற்பாடு செய்தோம். அதில் ஜி.எஸ்.டி குறித்த தலைப்பு வாரியாக விளக்க கூட்டங்களை நடத்தினோம். உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன.
கொரானா காலத்திற்கு பிறகு செயல்பாடுகள் முடங்கி போகாமல், மாற்றுவழி கண்டுபிடித்து, வாரம் ஒரு கூட்டம் என இணைய வழியில் (Zoom Via) நடத்தினோம். சொசைட்டியின் நிர்வாகிகளுக்கு தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பரந்துப்பட்ட தொடர்புகள் இருந்ததால், ஒவ்வொரு வாரமும் துறை சார்ந்த அறிவும், அனுபவமும் கொண்ட பேச்சாளர்களை ஏற்பாடு செய்தோம். அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள். தொடர்ச்சியாக கூட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.
சொசைட்டியின் பெயரில் ஒரு வாட்சப் குழுவும், இன்னொன்று GSTPS IT News என்ற பெயரிலும் இரண்டு வாட்சப் குழுக்களை ஆரோக்கியமாய் இயக்கி வருகிறோம். அதில் புதிதாய் வரும் ஜி.எஸ்.டி குறித்தான அறிவிப்புகள், அப்டேட்கள், செய்திகள், வழக்குகள், தீர்ப்புகள் குறித்த விவரம் என தினமும் நிர்வாகிகள் பகிர்ந்துவருகிறோம். உறுப்பினர்கள் தங்கள் எதிர்கொள்ளும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து வருகிறோம்.
ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை தோறும், காலை 10.30 மணியளவில் ஜூம் (Zoom) வழியில் கூட்டம் நடத்துகிறோம். மாதத்தின் நான்காம் சனிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் நேரடிக்கூட்டமும் நடத்திவருகிறோம். இப்படி கடந்த காலங்களில் 113 ஜூம் வழிக் கூட்டங்களையும், பல நேரடிக்கூட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். எங்களில் ஒருவரோ, குறிப்பிட்ட தலைப்பில் தேர்ச்சி பெற்ற சிறப்புரையாளர்களையோ வரவழைத்து விளக்குகிறோம். விவாதிக்கிறோம். உறுப்பினர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறோம்.
மேலும் தங்கள் தொழிலில் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி குறித்த எந்த கேள்விக்கும், சந்தேகத்திற்கும், வழிகாட்டலுக்கும் நிர்வாகிகளை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டால் உடனே பதிலளிக்கிறோம். உரிய முறையில் வழிகாட்டுகிறோம்.
ஜி.எஸ்.டி துவங்கிய காலத்தில் இருந்து இன்றைக்கும் திருத்தங்கள், புதிய புதிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்த முக்கிய தீர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்வது என்பது மிகச்சிரமம். ஆனால் பலரும் இணைந்த கூட்டு நடவடிக்கையில் இது எளிதில் சாத்தியமாகிறது. ஆகையால் GST Professionals Socitetyயில் இணைய முன் வாருங்கள்.
இந்த சொசைட்டியை முறையாக சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்து இருக்கிறோம். அதற்கான விதிமுறைகளை, நடைமுறைகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டின் துவக்கத்தில் மாத காலண்டர் வெளியிட்டியிருக்கிறோம். எங்களது உறுப்பினர்கள் வழியாக ஜிஎஸ்டி அலுவலகங்களுக்கும் விநியோகித்திருக்கிறோம். உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் டைரி விநியோகித்திருக்கிறோம்.
சொசைட்டியில் சேர பதிவுக்கட்டணம் ரூ.100. மாதம் ரூ. 200 கட்டணம் என வருடத்திற்கு ரூ.2200. தொடர்ச்சியான கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான செலவுகளை எதிர்கொள்ளத்தான் சந்தா சேகரிக்கிறோம்.
சொசைட்டியில் உறுப்பினராக இணையுங்கள். எங்களோடு இணைந்து பயணியுங்கள். வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், எங்களை அழையுங்கள். பதில் சொல்கிறோம்.
திரு.
சு. செந்தமிழ்ச்செல்வன்,
தலைவர்
098412
26856
திரு.
பாலாஜி,
செயலாளர்
097104
48944
திரு.
செல்வராஜ்,
பொருளாளர்
097910
46555
திரு.
பாலாஜி அருணாச்சலம்,
செயற்குழு
உறுப்பினர்
095000
41971
பொதுக்குழு தேர்தல் & புதிய நிர்வாகிகள் அறிவிப்பு நிகழ்வு!
தலைவர் :
திரு. செந்தமிழ்செல்வன்
செயலர் :
திரு. எஸ். பாலாஜி,
இணைச்செயலர் :
திரு. ஏ. செண்பகம்
பொருளாளர் :
திரு. எஸ். செல்வராஜ்
செயற்குழு உறுப்பினர்கள் :
திரு. பாலாஜி அருணாச்சலம்
திரு. ஜி. சிவக்குமார்
திரு. சுந்தர்ராம் கல்யாண்
திரு. எஸ். முத்தரசன்
தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலுடன் இனிதே துவங்கியது. நமது சொசைட்டியின் பொதுக்குழு கூட்டத்தில் பெரும்பான்மையான உறுப்பினர்கள் கலந்துகொண்டது இன்னும் சிறப்பாக இருந்தது.
சொசைட்டியில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். உறுப்பினர்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டனர்.
சொசைட்டியில் தனது அனுபவங்களையும், தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகிகளுக்கு உறுப்பினர்களின் சார்பாக தன் வாழ்த்துகளைப் பகிர்ந்துகொண்ட சொசைட்டியின் உறுப்பினர் Dr. வில்லியப்பன் அவர்கள்.