Saturday, June 24, 2023

GSTPS – ஒரு அறிமுகம்! எங்களோடு இணைந்து பயணியுங்கள்!


2017ல் இந்தியாவில் ஜி.எஸ்.டி அறிமுகமான பொழுது பொழுது தணிக்கையாளர்களும், முதலாளிகளுக்கான சங்கங்களும், வரி ஆலோசகர்களும், மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள். நிறைய சந்தேகங்கள் சூழ்ந்திருந்தன.  

இந்த இக்கட்டான சமயத்தில் தான் சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிக வரி ஆலோசகராக அனுபவம் வாய்ந்த செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் முன்னெடுப்பில், இந்த சொசைட்டியை அவரைப் போல ஒரே சிந்தனை கொண்டவர்களும் இணைந்து ஜி.எஸ்.டி புரொபசனல்ஸ் சொசைட்டியை உருவாக்கினோம்.

சொசைட்டியில் தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் என எல்லா நிலைகளிலும் உறுப்பினர்களாய் இணைந்தார்கள். துவக்க நிலையில் மாதம் ஒரு கூட்டம் என ஏற்பாடு செய்தோம். அதில் ஜி.எஸ்.டி குறித்த தலைப்பு வாரியாக விளக்க கூட்டங்களை நடத்தினோம். உறுப்பினர்களின் கருத்துக்கள் கேட்கப்பட்டன. சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன.

கொரானா காலத்திற்கு பிறகு செயல்பாடுகள் முடங்கி போகாமல்,  மாற்றுவழி கண்டுபிடித்து, வாரம் ஒரு கூட்டம் என இணைய வழியில் (Zoom Via) நடத்தினோம். சொசைட்டியின் நிர்வாகிகளுக்கு தமிழக அளவிலும், இந்திய அளவிலும் பரந்துப்பட்ட தொடர்புகள் இருந்ததால், ஒவ்வொரு வாரமும் துறை சார்ந்த அறிவும், அனுபவமும் கொண்ட பேச்சாளர்களை ஏற்பாடு செய்தோம். அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள். தொடர்ச்சியாக கூட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

சொசைட்டியின் பெயரில் ஒரு வாட்சப் குழுவும், இன்னொன்று GSTPS IT News என்ற பெயரிலும்  இரண்டு வாட்சப் குழுக்களை ஆரோக்கியமாய் இயக்கி வருகிறோம். அதில் புதிதாய் வரும் ஜி.எஸ்.டி குறித்தான அறிவிப்புகள், அப்டேட்கள், செய்திகள், வழக்குகள், தீர்ப்புகள் குறித்த விவரம் என தினமும் நிர்வாகிகள் பகிர்ந்துவருகிறோம். உறுப்பினர்கள் தங்கள் எதிர்கொள்ளும் சந்தேகங்களுக்கும் பதில் அளித்து வருகிறோம்.

ஒவ்வொரு வாரம் சனிக்கிழமை தோறும், காலை 10.30 மணியளவில் ஜூம் (Zoom) வழியில் கூட்டம் நடத்துகிறோம். மாதத்தின்  நான்காம் சனிக்கிழமையன்று மதியம் 2 மணியளவில் நேரடிக்கூட்டமும் நடத்திவருகிறோம். இப்படி கடந்த காலங்களில் 113 ஜூம் வழிக் கூட்டங்களையும்,  பல நேரடிக்கூட்டங்களையும் நடத்தியிருக்கிறோம். எங்களில் ஒருவரோ, குறிப்பிட்ட தலைப்பில் தேர்ச்சி பெற்ற சிறப்புரையாளர்களையோ வரவழைத்து விளக்குகிறோம். விவாதிக்கிறோம். உறுப்பினர்கள் எழுப்பும் சந்தேகங்களுக்கு பதிலளிக்கிறோம்.

மேலும் தங்கள் தொழிலில் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி குறித்த எந்த கேள்விக்கும், சந்தேகத்திற்கும், வழிகாட்டலுக்கும் நிர்வாகிகளை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டால் உடனே பதிலளிக்கிறோம். உரிய முறையில் வழிகாட்டுகிறோம்.

ஜி.எஸ்.டி துவங்கிய காலத்தில் இருந்து  இன்றைக்கும் திருத்தங்கள், புதிய புதிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றன. வழக்குகள் நடைபெற்று வருகின்றன. அது குறித்த முக்கிய தீர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதை தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்வது என்பது மிகச்சிரமம். ஆனால் பலரும் இணைந்த கூட்டு நடவடிக்கையில் இது எளிதில் சாத்தியமாகிறது. ஆகையால் GST Professionals Socitetyயில் இணைய முன் வாருங்கள்.

இந்த சொசைட்டியை முறையாக சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்து இருக்கிறோம்.  அதற்கான விதிமுறைகளை, நடைமுறைகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம்.  கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆண்டின் துவக்கத்தில் மாத காலண்டர் வெளியிட்டியிருக்கிறோம்.  எங்களது உறுப்பினர்கள் வழியாக ஜிஎஸ்டி அலுவலகங்களுக்கும் விநியோகித்திருக்கிறோம்.  உறுப்பினர்களுக்கு பயன்படும் வகையில் டைரி விநியோகித்திருக்கிறோம்.

சொசைட்டியில் சேர பதிவுக்கட்டணம் ரூ.100. மாதம் ரூ. 200 கட்டணம் என வருடத்திற்கு ரூ.2200.  தொடர்ச்சியான கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான செலவுகளை எதிர்கொள்ளத்தான் சந்தா சேகரிக்கிறோம்.

சொசைட்டியில் உறுப்பினராக இணையுங்கள். எங்களோடு இணைந்து பயணியுங்கள். வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும், எங்களை அழையுங்கள். பதில் சொல்கிறோம்.


திரு. சு. செந்தமிழ்ச்செல்வன்,
தலைவர்
098412 26856
 
திரு. பாலாஜி,
செயலாளர்
097104 48944
 
திரு. செல்வராஜ்,
பொருளாளர்
097910 46555
 
திரு. பாலாஜி அருணாச்சலம்,
செயற்குழு உறுப்பினர்
095000 41971


4 comments:

  1. Super sir👏👏👏👏👏👏👏💐💐💐💐

    ReplyDelete
    Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete
  2. Replies
    1. வாழ்த்துகளுக்கு நன்றி.

      Delete