GSTPS வாரந்திர 113வது ஜூம் வழிக்கூட்டத்தில், 17/06/2023 அனேறு நமது சொசைட்டியின் உறுப்பினரான செல்வராஜ், CMA அவர்கள் “Formation of Private Limited – Why? How?” என்ற தலைப்பில், பிபிடி தயாரித்து, ஒவ்வொன்றையும் தெளிவாகவும், விரிவாகவும் விளக்கினார். நமது உறுப்பினர்களும், பல்வேறு மாவட்டங்களிலிருந்தும் பலரும் கலந்துகொண்டார்கள். கூட்டம் முடிந்து, உறுப்பினர்களும், மற்றவர்களும் எழுப்பிய கேள்விகளுக்கு நிதானமாக விளக்கமளித்தார்.
இப்படி வகுப்பு எடுப்பது அவருக்கு முதல் கூட்டம் என தெரிவித்தார். அப்படித் தெரியவில்லை. தொடர்ந்து வகுப்பு எடுப்பவர்களைப் போல பளிச்சென எடுத்தார். இனி, அடுத்தடுத்து புதிய தலைப்புகளில் வகுப்பு எடுக்கிறேன் எனவும் தெரிவித்துள்ளார். அவருக்கு நமது சொசைட்டி சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்வோம்.
எப்பொழுதும் நமது தலைவர் 12.30 க்குள் கூட்டத்தை முடித்தால் நலம் என நினைப்பவர், இந்த முறை 1 மணிக்கு மேலாக வரையிலும் கூட்டம் தொடர்ந்து கொண்டிருந்தது சிறப்பு. வெளியூரில் இருந்து கலந்து கொண்ட ஒருவர் நமது சொசைட்டியில் உறுப்பினராகிறேன் எனசாட் பாக்சில் தெரிவித்ததும் சிறப்பு.
No comments:
Post a Comment