எங்களது புதிய தளத்தின் முகவரி
https://gstprofessionalssociety.blogspot.com/
வணக்கம்.
எங்களது GSTPS சொசைட்டிற்கான தளம் ஒன்றை வெற்றிகரமாக துவங்கியுள்ளோம். இந்த தளம் எங்களது செயல்பாடுகளை, அறிவிப்புகளை,
குறிப்பிட்ட தலைப்பில் பேசும் பேச்சாளர்கள் பயன்படுத்தும் பிபிடிகளை என நிறைய பகிரலாம்
என இருக்கிறோம்.
எங்களது உறுப்பினர்கள், எங்களைப் போன்ற வரி ஆலோசகர்கள், பொதுமக்கள் என பலரும் இந்த தளத்தைப் பயன்படுத்தி கொள்ளலாம் என்ற பொது நோக்கில் இந்த தளத்தை அறிமுகப்படுத்துகிறோம்.
தளத்தில் உள்ள வசதிகள்
1. GSTPS சொசைட்டியின் பதிவு முகவரி, தொடர்பு கொள்ள மின்னஞ்சல், தொடர்பு கொள்ள செல்பேசி எண்ணைப் பகிர்ந்துள்ளோம்.
2. நிர்வாகிகள் : GSTPS நிர்வாகிகளுடைய குழுப் புகைப்படத்தை பகிர்ந்துள்ளோம்.
3. நமது தளம் GST, IT மற்றும் துறைகளுக்கு நாம் கவனம் கொடுப்பதால், அது குறித்த படத்தை பகிர்ந்துள்ளோம்.
4. பதிவுகள் - நாங்கள் என்னென்ன பதிவுகள் பகிர்ந்துள்ளோம் என தேதி வாரியாக இதில் பார்த்துக்கொள்ளலாம்.
5. தளத்தைப் பார்க்கும் புதியவர்கள் GSTPS சொசைட்டியில் இணைவதற்கு பெயர், மின்னஞ்சல் முகவரி, தங்கள் கருத்தை/ஆலோசனையை/தொலைபேசி எண்ணை தருவதற்கு என ஒரு இடம் தந்துள்ளோம்.
6. பதிவுகளின் வகைகள் – என்பது குறிப்பிட்ட தலைப்புகளில் தொடர்ந்து வெளியிடுவோம். அந்த பதிவுகளை எல்லாம், ஒரு தலைப்பு கொடுத்து வகைப்படுத்தி தான் வெளியிடுகிறோம். குறிப்பிட்ட தலைப்பைத் தொட்டால், அந்த தலைப்பு சார்ந்த பதிவுகளை தளம் காண்பிக்கும்.
7. Search this Blog - தளத்தில் ஏதாவது ஒரு தலைப்பை தேடவேண்டுமென்றால், குறிப்பிட்ட வார்த்தையை தட்டச்சு செய்தால், அந்த வார்த்தை உள்ள பதிவுகளை தளம் நமக்கு காண்பிக்கும்.
10. பார்வைகள் - தளத்தை எத்தனைப் பேர் பார்வையிட்டுள்ளார்கள் என்பதை காண்பிக்கும்.
.
- GSTPS
No comments:
Post a Comment