இது “tip of the iceberg” – என்கிறார்கள் அதிகாரிகள்
ஹைதராபாத் நகரில்
செயல்பட்டு வந்த
சில
biryani உணவகங்கள் மீது
மேற்கொள்ளப்பட்ட வழக்கமான Income Tax சோதனையின் போது,
அவர்கள் பயன்படுத்தியிருந்த POS (Point of Sale) billing software-இல் சீரற்ற data pattern-கள் இருப்பது அதிகாரிகளால் கவனிக்கப்பட்டுள்ளது.
இதனைத்
தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விரிவான data analysis மூலம்:
- நாடு முழுவதும்
சுமார் 1.7 லட்சம் உணவகங்களின் billing தொடர்பான தகவல்கள்
- 60 TB-க்கும் அதிகமான electronic sales data
ஆய்வு
செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கண்டறியப்பட்ட முக்கிய முறைகேடுகள்
விசாரணையின் போது
கீழ்க்கண்ட நடைமுறைகள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம் என
சந்தேகிக்கப்படுகிறது:
1.
Cash Sales Suppression
UPI / Card மூலம் பெறப்பட்ட வருவாய்கள் software-இல் பதிவாகியிருந்தபோதிலும், Cash மூலம் பெறப்பட்ட விற்பனை விவரங்கள் software database-இல் இருந்து நீக்கப்பட்டிருக்கலாம்.
2.
Selective Bill Deletion
சில
குறிப்பிட்ட நாட்களில் உருவாக்கப்பட்ட billing entries முழுமையாக software-இல் இருந்து அழிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
3.
Under Reporting of Turnover
Actual turnover-ஐ விட குறைவான வருவாய்:
- GST Returns
- Income Tax Returns
இல்
அறிவிக்கப்பட்டிருக்கலாம்.
வரி ஏய்ப்பின் அளவு
FY 2019–20 முதல் மேற்கொள்ளப்பட்ட sales-இல் சுமார்
25% முதல்
30% வரை
turnover suppression நடந்திருக்கலாம் என
அதிகாரிகள் முதற்கட்டமாக மதிப்பீடு செய்துள்ளனர்.
இதன்
அடிப்படையில்:
👉 ₹70,000 கோடி அளவிற்கு அறிவிக்கப்படாத வருவாய் (Unaccounted Turnover) இருக்கக்கூடும் என
சந்தேகிக்கப்படுகிறது.
(இந்த மதிப்பீடு விசாரணை முடிவின் அடிப்படையில் மாறக்கூடியது)
தொழில்நுட்ப ஆய்வின் பங்கு
POS billing software-இல் இருந்து பெறப்பட்ட raw data-கள் மீது:
- Forensic Audit
- Artificial Intelligence (AI) based analytics
பயன்படுத்தப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Software audit trail மற்றும் backend
database entries மூலம்
deleted invoices மீண்டும் trace செய்யப்பட்டதாகவும் கூறப்படுகிறது.
சட்ட ரீதியான விளைவுகள் (Indicative)
இத்தகைய turnover suppression நிரூபிக்கப்பட்டால், பின்வரும் சட்டப்
பிரிவுகள் பொருந்தக்கூடியவை:
GST
Act
- Section 35 – Accounts and Records
- Section 44 – Annual Return
- Section 74 – Tax not paid due to fraud / wilful
misstatement
- Section 122 – Penalty for certain offences
Income
Tax Act
- Section 270A – Under Reporting / Misreporting of Income
- Section 271AAC – Penalty in respect of unexplained
income
- Section 276C – Wilful attempt to evade tax
(Prosecution)
“தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான கண்காணிப்பு காலத்தில், கணக்குகளில் மறைவு
நீண்ட
நாள்
நிலைக்காது” — டாக்டர் பார்த்தசாரதி ஷோம்,
முன்னாள் Chairman, CBDT
*இறுதியாக...*
GST Returns மற்றும் POS
billing data இடையிலான data reconciliation இனி வருங்காலங்களில் அதிகரிக்கும் சூழல்
உருவாகி வருவதால், உண்மையான turnover disclosure, software audit trail பாதுகாப்பு மற்றும் சரியான books of accounts பராமரிப்பு ஆகியவை உணவகம் துறையில் செயல்படும் வரிப்பணியாளர்களுக்கு மிகவும் அவசியமாகின்றன.
பிரியாணி பிரியர்களுக்கு,
விலை அதிகரிக்கப் போகிறது. சோகம்
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ
ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721


No comments:
Post a Comment