Tuesday, September 12, 2023

GSTPS : GST Updates - Dr. M. Villiyappan


வணக்கம்.  கடந்த சனிக்கிழமையன்று (09/09/2023)  இணையவழியில் (Zoom) கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


“GST Updates” என்ற தலைப்பில், Dr. வில்லியப்பன், குறிப்பாக ஆகஸ்டு மாதம் வெளிவந்த ஜி.எஸ்.டி குறித்த அறிவிப்புகளை (Notifications) எல்லாவற்றையும் தொகுத்து விரிவாக விளக்கினார்.


மேராபில், மேரா அதிகார் – இந்த திட்டத்திற்கான செயலியை அரசு அறிமுகப்படுத்தி, மக்கள் கடைகளில் கொள்முதல் செய்யும் பில்களை பதிவிட சொல்லி, குலுக்கல் முறையில் ரூ. 10000 முதல் ஒரு கோடி வரை பரிசுகள் உணடு என உற்சாகமூட்டியிருக்கிறது.  இதில் வரி ஆலோசகராக நமது பங்கு என்னவென்றால்… இந்த திட்டத்தை தெரியப்படுத்தி கடைக்காரர்கள்/நிறுவனம் சார்ந்தவர்கள் (B2C) பில்களை மக்களுக்கு கொடுத்தால், நிச்சயம் கணக்கில் காட்டவேண்டும். இல்லையெனில் பெரும் அபராதத்தை செலுத்த வேண்டியிருக்கும் என்பதை பயிற்றுவிக்கவேண்டும்.


ஜி.எஸ்.டி பதிவின் பொழுது, பான் எண்ணிற்கும், ஆதாருக்கும் உள்ள இடைவெளியில் ஆதார் ஓடிபி போட்டு  நிறைவேற்ற முடியாத பொழுது (Authentication failed) சம்பந்தப்பட்ட ஜி.எஸ்டி அலுவலகத்தில் இருந்து நிறுவனத்தை வந்து சரிபார்க்க வரும் பொழுது, முதலாளி இருக்கவேண்டும் என்பதை இப்பொழுது இருக்கவேண்டியதில்லை என அறிவித்திருக்கிறார்கள்.


அதே போல Notification 38ல் நிறைய மாற்றங்களை ஜி.எஸ்.டி செய்திருக்கிறது.  அதெல்லாம் நாம் அவசியம் அறிந்துகொள்ள வேண்டிய மாற்றங்கள். (நிறைய எழுதவேண்டியிருக்கும் என்பதால்… இத்துடன் முடித்துக்கொள்கிறேன்.)


கூட்டத்தில் நமது உறுப்பினர்களும், பிற மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் திரளாக கலந்துகொண்டனர்.  பங்கேற்பாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.


வேலை நெருக்கடியில் கலந்துகொள்ள முடியாதவர்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் பிபிடியை இங்கு பகிர்ந்துள்ளோம்.

நன்றி.


- GSTPS





















































































குறிப்பு : இந்த பிபிடிகளை பிடிஎப் தொகுப்பாக வேண்டும் என்கிறவர்கள் எங்களுக்கு மின்னஞ்சல் வழியாக தெரிவியுங்கள். அனுப்பி வைக்கிறோம்.

தொடர்பு கொள்ள 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102




No comments:

Post a Comment