Thursday, September 21, 2023

GSTPS : "Importance of Trade Mark & Patent" - Mr. M. Elamparithi, Advocate


வணக்கம்.  கடந்தவார சனிக்கிழமையன்று (16/09/2023) நமது GSTPS வழக்கமாக நடத்துகிற இணைய வழிக் (Zoom) கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.


“டிரேட்  மார்க், பேடண்ட்டின் முக்கியத்துவம்” குறித்து ஒரு அறிமுக அளவில் வழக்கறிஞர் இளம்பரிதி அவர்கள் சிறப்புரையாற்றினார்.


ஒரு நிறுவனத்தின் லோகோ, ஒரு பொருளை நாம் பிரத்யோகமாக செய்யும் முறை, ஒரு கலைஞனின் படைப்புகள் என பல அம்சங்களும் முறையாக  பதியப்படவேண்டும்.  இப்பொழுது இன்னும் நுணுக்கமாக மாறிவிட்டது.  என்பீல்டின் பைக்கின் விசேசமான சத்தத்தை கூட பதிவு செய்கிறார்கள். இனி வேறு யாரும் அந்த சத்தத்தை உருவாக்கிவிட முடியாது.


ஒரு நிறுவனமோ, தனிநபரோ, ஒரு குழுவோ தனது பல்லாண்டு கால கடுமையான உழைப்பின் மூலம், பல ஏற்றத்தாழ்வுகளை எதிர்கொண்டு,  அதன் பொருட்களை, ஒரு தனித்துவத்தை மக்கள் மனதில் பதிக்கிறார்கள். நிலைநிறுத்துகிறார்கள்.  ஒரு கட்டத்தில் விளம்பரமே இல்லாமல், அவர்களின் பொருட்கள் பல கோடிகளில் விற்பனை செய்துக்கொண்டிருப்பதை நாம் பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். 


இப்படிப்பட்ட சிறப்பான ஒன்றை முறையாக பதிவு செய்து வைத்துக்கொள்வது என்பது நவீன உலகில்  மிகவும் முக்கியமானது.  வளர்ந்த நாடுகளில் நிறுவனங்களும், தனிநபர்களும் இதில் மிகவும் கவனமாக இருக்கிறார்கள்.  இந்தியாவில் நம்முடைய அறியாமையால், பதிவு செய்துகொள்ளாத பொழுது, வேறு யாரோ பதிவு செய்து நம்மை பெரும் பாதிப்புக்குள்ளாகிவிடுவார்கள். பிறகு நாம் வருத்தப்படுவதில் அர்த்தமில்லை. 


இதன் முக்கியத்துவத்தை தனது பல்லாண்டு கால அனுபவத்தின் மூலம், அதன் நடைமுறைகளை, ஆச்சி மசாலா, பாராசூட் ஆயில், இளையராஜா, எஸ்.பி.பி என நாம் அறிந்த உதாரணங்கள் மூலம் புரியவைத்தார்.  பதிவு செய்வதற்கான அரசு கட்டணத்தையும், தங்களது கட்டணமாக வாங்குகிறார்கள் என்பதையும்  தெரிவித்தார். இந்த கட்டணங்கள் லட்சத்தில் இல்லாமல், ஆயிரங்களில் இருப்பது ஆச்சர்யமாக இருந்தது.


GSTPSயினுடைய தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் இந்த தலைப்பை ஒட்டிய சில வழக்குகளையும், அதில் தன்னுடைய தொழில் அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.


நாம் வரி ஆலோசகர்கள். கணக்காளர்கள்.  நமக்கும் இந்த தலைப்புக்கும் பொருத்தமில்லை என நமது உறுப்பினர்கள் சிலர் நினைத்துக்கொண்டு கலந்துகொள்ளாமல் விட்டிருக்கலாம். அதற்கு நமது உறுப்பினர் செல்வராஜ் CMA அவர்கள் சொன்னது சரியாக பொருந்தும்.  ”இனிமேல் எல்லாம், ஜி.எஸ்.டி வரி ஆலோசகர்கள் தங்களுடைய  GST, IT வேலைகளை மட்டும் செய்தால் போதும் என இருந்துவிடமுடியாது. ஒரு நிறுவனத்தின் பல்வேறு விசயங்களுக்கு ஆலோசனை, சேவை வழங்குவதன் மூலம் தான் இனி நீடிக்கமுடியும் என்கிற நிலை உருவாகிவருகிறது. ஆகையால், ஒரு நிறுவனம் சார்ந்த அனைத்து விசயங்களையும் நாம் தெரிந்துகொள்வது அவசியம் என்பதை புரிந்துகொள்ளவேண்டும்.”


நமது உறுப்பினர் ரமேஷ் அவர்களும், மற்றவர்களும் பதிவு செய்வது, அதன் நடைமுறைகள் குறித்து சில கேள்விகளை கேட்டார்கள். எல்லோருக்கும் இளம்பரிதி அவர்கள் பதிலளித்தார்.


செயலர் பாலாஜி நன்றியுரையுடன் இனிதே நிறைவுற்றது. நன்றி.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102



No comments:

Post a Comment