Sunday, September 24, 2023

GSTPS : Tally 3.0 - Mr. S. Velayutham, Trainer Tally Software


வணக்கம்.  ஒவ்வொரு மாதமும் நாலாவது வாரத்தில் நேரடியாக ஒன்று கூடி, கூட்டம் நடத்துவது நமது வழக்கம்அதன் தொடர்ச்சியில் இன்று 25வது நேரடிக்கூட்டமாக எழும்பூரில் உள்ள இக்சா மையத்தில் மதியம் கூடினோம்.

 


இனிய
தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.  வந்தவர்களை வரவேற்றும், இன்று நமக்கு வகுப்பு எடுக்க இருக்கும் Tally பயிற்சியாளர் வேலாயுதம் பற்றியும்  நமது பொருளாளர் செல்வராஜ் அறிமுக உரை வழங்கினார்.  வேலாயுதம் அவர்கள் கடந்த காலங்களில் Tally குறித்து நம்மிடையே இரண்டுமுறை உரையாற்றியிருக்கிறார்.

 


நமது தொழிலில் கணக்குகளைப் பராமரிக்க பெரும்பாலும் Tally மென்பொருளை பயன்படுத்தி வருகிறோம். ஜி.எஸ்.டி துவங்கிய காலத்தில் இருந்து தொடர்ச்சியாக புதுப்புது மாற்றங்களை அறிவித்துக்கொண்டே இருக்கிறது.  Tallyயும் அதற்கேற்ப தனது மென்பொருளில் மாற்றங்களை செய்து கொண்டே வருகிறது. இப்பொழுது Tally Prime 3.0  என அறிமுகப்படுத்தியிருக்கிறது என்பதை தமிழில் பயிற்சியாளர் வேலாயுதம் புரியும் விதத்தில் அருமையாக விளக்கினார்.

 


ஒரு நிறுவனம் தன்னுடைய ஒரே பானில் (PAN)  இரண்டு, இரண்டுக்கும் மேற்பட்ட தொழில்களை செய்யும் பொழுது, நாம் தனித்தனியாக Tallyயில் கணக்குகளை பராமரித்து ஆண்டு முடிவில் தணிக்கையாளர் இணைத்து வருமான வரித்தாக்கல் செய்கிறார்.  அந்த சிரமத்தை தவிர்ப்பதற்காக இப்பொழுது ஒரே கணக்கில் எல்லா கிளை/பிற தொழில்களின் கணக்குகளையும் ஒருங்கிணைக்க ஏற்பாடு செய்து தந்திருக்கிறது.  மேலும் ஜி.எஸ்.டிக்கு தனித்தனியாக மாதாந்திர ரிட்டன்களையும் தாக்கல் செய்யமுடிகிற ஏற்பாட்டையும் செய்து தந்திருக்கிறது.

 


ஜி.எஸ்.டியில் பதிவு செய்யாத நிறுவனம் தேவை கருதி, ஜி.எஸ்.டி பதிவு எண்ணை பெறும் பொழுதும், இதுவரை ஜி.எஸ்.டி எண்ணை பயன்படுத்திக்கொண்டிருந்த நிறுவனம் தன்னுடைய பதிவை முறையாகவோ/ஜி.எஸ்.டி ரத்து செய்யும் பொழுதோ, Tally யில் உரிய மாற்றங்களை செய்து கொள்ள வசதிகளை செய்து தந்திருக்கிறது.

 

நம் Tally கணக்கில் ஒரு பதிவை நீக்கும் பொழுது, அதன் வரிசை எண் மாறும் அல்லவா! இப்பொழுது இன்வாய்ஸ்  என இருக்கும் பொழுது இப்படி மாறுவது என்பது வேறு வேறு கோளாறுகளை உருவாக்குகிறது. இப்பொழுது அதற்கும் ஒரு தீர்வை கண்டறிந்திருக்கிறது.

 


இப்படி இன்னும் சில அம்சங்களை அறிமுகப்படுத்தினார்.

தேநீர் இடைவேளைக்கு பிறகு.

வரி ஆலோசகர்களாகிய நாம்  நமது வாடிக்கையாளர்கள் குறித்த தகவல்களை நாம் ஒவ்வொருவரும் அவரவர் அறிந்த வழிகளில் பராமரித்து வருகிறோம்.  சிலர் இதற்கான சிறப்பு மென்பொருளை பயன்படுத்துகிறார்கள். சிலர் எக்ஸைலைப் (Excel) பயன்படுத்துகிறார்கள்.

இப்பொழுது புதிதாக எக்சைலில்  நாமே  நமது வாடிக்கையாளர்களின் அடிப்படையான தகவல்களை உள்ளே இடும் பொழுது  அது எல்லாவற்றையும் தொகுத்து மேம்பட்ட வகையில் நமக்கு பயன்படும் சில உபயோகமான அறிக்கைகளை பயன்படும் வகையில் தருகிறது.  இதை Tally பயிற்சியாளர் அரவிந்தன் அவர்கள் விளக்கி கூறினார்.

 


இந்த எக்சைலை  இப்பொழுது (Trial என்ற முறையில்) நமக்கு இலவசமாக தந்திருக்கிறார்கள். நம்மில் ஒருவர் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்த பொழுது Dr. வில்லியப்பன் அவர்கள் இதைப் பெற்றுக்கொண்டார். அதை நாம் தொடர்ந்து பயன்படுத்தும் பொழுது, இன்னும் மேம்படுத்த நமக்கு உதவுவதாகவும் தெரிவித்தார். நமது உறுப்பினர்கள் அவரிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளலாம்.


பங்கேற்றவர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் விளக்கமளித்தார்.


இறுதியில் நன்றியுரையை  நமது உறுப்பினர் முனியசாமி வழங்கினார்.

பயிற்சியாளர் வேலாயுதம் அவர்கள் Tally குறித்து எளிமையாகவும், அனைவருக்கும் புரியும் விதத்தில் விளக்கினார். எதிர்காலத்திலும் நமக்கு பயிற்றுவிக்க அவரையே நாம் அழைக்கலாம்.  அவருக்கு நன்றி.  Tally CRM (Customer Relationship Manager)  டூல் பற்றி எளிமையாக புரியும் விதத்தில் விளக்கினார். அவருக்கும் நன்றி.   இன்றைக்கு இடைவெளியில்  சூடான காபி, போண்டா வழங்கியது Dr. வில்லியப்பன் அவர்கள். அவருக்கு இரண்டு மகள்கள். இரண்டாவது மகளது திருமணம் சமீபத்தில் நடைபெற்றது. நமது நிர்வாகிகளும், உறுப்பினர்கள் சிலரும் கலந்துகொண்டோம். அந்த மகிழ்ச்சியை உறுப்பினர்களோடும் பகிர்ந்துகொண்டார்.


நமது உறுப்பினர் சண்முகப்ப்ரியா அவர்களுக்கு சமீபத்தில் மகன் பிறந்துள்ளார்.  தமிழ் என பெயர் வைக்கப்போவதாக தெரிவித்தார்கள். மகிழ்ச்சிஅவருடைய உடன் பிறந்த சகோதரியும் நமது உறுப்பினருமான செல்வராணி அவர்கள் அந்த மகிழ்ச்சியை பகிர்ந்துகொள்ளும் விதத்தில்  எல்லோருக்கும் சுவையான லட்டுகள் வழங்கினார்.

 நமது உறுப்பினர்கள் தமது இல்லத்து மகிழ்வான நிகழ்வுகளை இப்படி மற்ற உறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்ளும் பண்பு என்பது மகிழ்ச்சி தரக்கூடியது.   சொசைட்டி துவங்கிய காலத்தில் இருந்தே இந்த பண்பாடு இருக்கிறது. இப்பொழுதும் தொடர்கிறது. எதிர்காலத்திலும் தொடரவேண்டும்வந்து கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி.”

கூட்டம் இனிதே முடிவுற்றது.

 

- GSTPS


தொடர்பு கொள்ள 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102


 

No comments:

Post a Comment