Friday, September 29, 2023

ஜிஎஸ்டியில் சேவையும் வழங்கலா ??


ஜிஎஸ்டியில் சேவையும்
வழங்கலா ??

பிரிவு 7, 2(52), 2(102)

 

சு  செந்தமிழ்ச்  செல்வன்

ஜிஎஸ்டி தொழிலாற்றுநர் &பயிற்சியாளர்

 


சேவையைப்  பற்றி  விளக்க  முடியுமா ?

சேவை என்பது பயன்பாட்டு உரிமையை பிறருக்கு மாற்றிக் கொடுத்தல் :

 

சான்று :

 

Ø  அசையா  சொத்துக்களை வாடகைக்கு கொடுத்தல்,


Ø  அறிவுசார் சொத்துக்கு உண்டான உரிமை, அனுபவத்தை தற்காலிகமாக மாற்றுவது அல்லது அனுமதிப்பது.


Ø  ஒரு நடவடிக்கையில் இருந்து  விலகி இருக்க ஒத்து கொள்ளுதல் அல்லது பொறுத்துக் கொள்ளுதல்


Ø  பழுது நீக்கும் செயல்முறையை செய்தல்


Ø  கமிஷன் அடிப்படையில் எந்த ஒரு  செயலையும் செய்தால்


Ø  தகவல் தொழில நுட்பத்திற்கு தேவையான மென்பொருளுக்கான புரோகிராம் செய்தால், மேம்படுத்துதல்,டிசைன் செய்தல்


Ø  பயண சீட்டு பதிவு செய்தால் போன்றவவை

 

வெளிநாட்டிலிருந்து  பெறும் சேவை வரிக்கு  உட்படுமா ?:

 

ஆம். வணிகத்தின் போது அதன் வளர்சிக்காக இருந்தாலும் இல்லாவிட்டாலும் அதற்கான  சேவையை வெளிநாட்டிலிருந்து  பெறுதல் (இறக்குமதி). இதற்கு பண மதிப்பு இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை.

 

பணமதிப்பு இல்லாவிட்டாலும்  ஜிஎஸ்டியில் வழங்கலாக  கருதப்படுமா ?


மறு பயனின்றி செய்யப்பட்ட அல்லது  செய்வதற்கு ஒத்துக்கொள்ளப்பட்ட முதல் இணைப்பு பட்டியலில் குறிப்பிடப் பட்டுள்ள கீழ்க்கண்ட செயல்கள் வழங்கலாக  கருதப்படும். இந்த இனங்கள்  பணமதிப்பு இல்லாவிட்டாலும் வழங்கல் என்றே கருதப்படும்.

 

(அ ) உள்ளீட்டு வரி வரவு எடுத்துக்க கொண்டப்பின் நிரந்தரமாக மாற்றம் செய்யப்படும் பொருள்கள். பொருள்கள், வணிகம் தொடர்பான சொத்துக்களை அகற்றுதல் (Sale )

 

(ஆ )  மாற்றிக் கொள்ளுதல் (disposal of  business assets )

 

(இ)முதல்வர் (principal ) மற்றும் முகவர்களுக்கு (agent )இடையே நடைபெறும் பொருள் சேவைகள்

 

(ஈ) வெளி நாட்டில் உள்ள தன்னுடைய நிறுவனம் அல்லது சார்பு நிறுவனங்களிடம்’ இருந்து வணிக நலனுக்காக பெறப்படும்  சேவைகள்

தொடர்பு உடையவர்களுக்கு இடையே (related person) நடைபெறும் நடவடிக்கைகள்   வழங்கலாக  கருதப் படுமா ?

 

தொடர்பு உடையவர்களுக்கு இடையே (related person) வழங்கப் படும் பொருள்கள்  அல்லது சேவைகள். இவை வணிக நலனுக்காக பணம் பெறாமல் செய்யப்பட்டாலும் இந்த  நடவடிக்கை   வழங்கலகவே கருதப்படும்.


தொடர்புடையவர்கள்  என்பது  யாரைக்  குறிக்கும் ?

 

தொடர்புடையவர்  என்பதன் கீழ் வணிகத்தின் உரிமையாளர் மற்றும் ஊழியர்கள்  அடங்குவார்கள்.  இதில் ஒரு வணிக உரிமையாளர் , தன்னுடைய  ஊழியருக்கு ஆண்டுக்கு ரூபாய்    ஐம்பது ஆயிரம்  வரை  வழங்கும் பரிசுக்கு வரியில் இருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.

 

தனித்துவமானவர்களுக்கு (distinct  person ) வழங்கப்படும்  பொருள்/சேவை வழங்கலா ?

 

தனித்துவமானவர்களுக்கு (distinct  person ) வழங்கப்படும்  பொருள் மற்றும் சேவையும் வழங்கலாகவே  கருதப்படும். தனித்துவமான நபர் என்பது’ஒரு வணிகத்தின் கிளைகள், செங்குத்து வணிகம் (business  vertical ) ஆகியவற்றைக் குறிக்கும். இவர்களுக்கு இடையே மாநிலத்திற்கு வெளியே இருக்கும் கிளை /தலைமை அலுவலகத்திற்கு பொருள், சேவை மாற்றம் செய்யப்படும் போது அதுவும் வழங்கலாகவே  கருதப் படும்.

 

இரண்டாவது ’இணைப்பு’பட்டியலில்’ குறிப்பிடப்பட்டுள்ள ஒரு பொருளின் உரிமையை’ வேறு ஒருவருக்கு மாற்றித்  தருதல்   பொருள்/ சேவைகளின் வழங்கலாக கருதப்படுகிறது. இதை  விளக்க முடியுமா ? .

 

வணிகத்தை நடத்துபவர், வணிகத்திற்காக வாங்கப்பட்டுள்ள பொருள்களை, தன்னுடைய சொந்த பயன்பாட்டுக்கு எடுத்துக் கொண்டாலோ அல்லது வேறு வேறு ஒருவருக்கு வணிக பயன்பாட்டுக்கு அல்லாமல் கொடுத்தாலோ அது வழங்கல் எனப்படும்.

 

ஏர்-கண்டிஷனர்  விற்பனை  செய்யும்  ஒரு  நபர்  ஒரு ஏர் கண்டிஷனரை தனது கையிருப்பில் இருந்து நிரந்தரமாக தனது வீட்டில் தனிப்பட்ட பயன்பாட்டிற்காக மாற்றுகிறார்.

 

இதில் வணிகச் சொத்து நிரந்தரமாக மாற்ற அல்லது அகற்றப்படுகிறது, ஜிஎஸ்டியின் கீழ் வழங்கலாக கருதப்படும் .

 

வணிகத்தில்  எது  வழங்கலாக   கருதப்படாது  ?

 

வரிக்கு உட்பட்ட நபர், அந்த  நிலையிலிருந்து விடுபடும் முன் வணிக நலனுக்காக செய்யப்படும் வழங்கல்கள், கீழ்க் கண்ட சூழ்நிலைகளைத் தவிர மற்ற தருணங்களில் அவை வழங்கலாகவே கருதப் படும்.


* நடைபெற்றுக் கொண்டு இருக்கும் வணிகத்தை அப்படியே வேறு ஒருவருக்கு மாற்றித் தருதல்

*  தனிப் பிரதிநிதி முலம் அந்த வணிகத்தை நடத்துதல்

*  இந்த சூழ்நிலையில் வணிகத்தை நடத்தும் பிரதிநிதி வரிக்கு உட்பட்டவராகவே கருதப்  படுவார்

 

 

கட்டி  முடிக்கப்பட்ட  கட்டிடம்  வழங்கலாக  கருதப்படுமா ?

 


விற்பனை செய்வதற்காக கட்டப்படும் வளாகம், கட்டிடம், சிவில் கட்டமைப்பு  போன்றவற்றை முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ விற்பனை  செய்தல். ஆனால் இதில் கட்டிடம் முழுவதும் கட்டி முடிக்கப்பட்டது  என்று சான்றிதழ் வழங்கியப் பின்னரோ அல்லது அந்த கட்டிடத்தில் ஒருவர்  குடிபெயர்ந்தாலோ அல்லது இதில் எது முந்தியதோ அதற்குப் பின் முழுத் தொகையும் பெற்றிருந்தால்  இந்த நடவடிக்கை வழங்கலில் அடங்காது.  ஆனால் கட்டிடம் காட்டும் போதே வாங்குபவரிடம் முழுத் தொகை பெற்றிருந்தால் அது  வழங்கலாக கருதப்படும்.


அறிவுசார் சேவை வழங்கலைப்  பற்றி  கூறவும்  ?

 

அறிவுசார் சொத்துக்களை பிறர் பயன்படுத்த உரிமை அளித்தல் அல்லது  தற்காலிக பரிமாற்றம் செய்தல், தகவல் தொழில் நுட்ப மென்பொருளை தயாரித்தல், மேம்படுத்துதல், உருவாக்குதல், செயல்முறை வகுத்தல்,                 உயர்தரமாக்குதல், நடைமுறைப்படுத்துதல், ஒரு நடவடிக்கையில் இருந்து விலகி இருக்க ஒப்புக் கொள்ளுதல், பொறுத்துக் கொள்ளுதல், ஒரு செயல் செய்தல்  இவை  அனைத்தும்  சேவையாக  கருதப் படும்.


ஒரு கிளப் அல்லது சங்கம் அல்லது சங்கம் அதன் உறுப்பினர்களுக்கு சேவை அல்லது பொருட்களை அளிப்பது வழங்கலாக  கருதப்படுமா ?


ஆம். ஒரு கிளப், சங்கம், சமூகம் அல்லது அதன் உறுப்பினர்களுக்கு வசதிகளை வழங்குவது வழங்கலாக  கருதப்படும். இது CGST/SGST சட்டத்தின் பிரிவு 2(17) (‘e)இல் 'வணிகம்' என்பதன் வரையறையில் சேர்க்கப்பட்டுள்ளது

 

வேலை ஒப்பந்தங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் பொருட்கள் வழங்கல் அல்லது சேவைகள் வழங்கல் என கருதப்படுமா?


வேலை ஒப்பந்தங்கள் மற்றும் கேட்டரிங் சேவைகள் இரண்டும் ஜிஎஸ்டி சட்டத்தின் அட்டவணை-II இல் எண். 6 (a) மற்றும் (b).படி  சேவைகளின் வழங்கலாக  கருதப்படும்.

 

கூலி  வேலை  (ஜாப்  ஒர்க்). செய்ய   அனுப்பப்படும் பொருட்கள்   வழங்கல்  என்ற  தகுதியை  பெருமா ?


இல்லை, பொருள்கள்  தற்காலிகமாக அனுப்பப்படுவதாலும்,   கூலி   வேலை  முடித்ததும் பொருட்கள் திரும்ப  அனுப்பப்படுவதாலும்,  இந்த   நடவடிக்கையை  வழங்கலாக     கருத முடியாது.

 

வழங்கல்   அல்லது  சேவையாக  கருதப்படாது  எந்த   பிரிவில்  கூறப்பட்டுள்ளது ?

சிஜிஎஸ்டி சட்டத்தின்  முன்றாவது அட்டவணையில்  குறிப்பிடப்பட்டுள்ள  செயல்பாடுகள் அல்லது பரிவர்த்தனைகள் பொருட்கள் வழங்கல் அல்லது சேவை வழங்கல் என கருதப்படக்கூடாது.

 

வழங்கல்   அல்லது  சேவையாக  கருதப்படாதது  எவை என்பதை  விரிவாக  கூறவும் ?



1. ஒரு பணியாளர் தனது வேலையின் போது அல்லது அது தொடர்பாக அதன்  உரிமையாளருக்கு  செய்யும் சேவைகள்.

2. தற்போதைக்கு நடைமுறையில் உள்ள எந்தவொரு சட்டத்தின் கீழ் நிறுவப்பட்ட எந்த நீதிமன்றம் அல்லது தீர்ப்பாயத்தின் சேவைகள்.

( "நீதிமன்றம்" என்பது  மாவட்ட நீதிமன்றம், உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவை அடங்கும்)

3. பாராளுமன்ற உறுப்பினர்கள், மாநில சட்டமன்ற உறுப்பினர்கள், பஞ்சாயத்து உறுப்பினர்கள், நகராட்சி உறுப்பினர்கள் மற்றும் பிற உள்ளாட்சி அமைப்புகளின் உறுப்பினர்கள் ஆற்றும் செயல்பாடுகள்;

அந்தத் தகுதியில் அரசியலமைப்பின் விதிகளுக்கு இணங்க எந்தவொரு பதவியையும் வகிக்கும் எந்தவொரு நபரும் ஆற்றும் கடமைகள்; அல்லது

மத்திய அரசு அல்லது மாநில அரசு அல்லது உள்ளூர் அதிகாரசபையால் நிறுவப்பட்ட அமைப்பில் தலைவர் அல்லது உறுப்பினர் அல்லது இயக்குநராக யாரேனும் ஒருவர் ஆற்றிய கடமைகள் மற்றும் இந்த உட்பிரிவு தொடங்கும் முன் பணியாளராகக் கருதப்படாதவர்.

4. இறந்தவரின் போக்குவரத்து உட்பட இறுதிச் சடங்கு, அடக்கம், தகனம் அல்லது சவக்கிடங்கு ஆகியவற்றின் சேவைகள்.

5. நிலம் விற்பனை மற்றும், அட்டவணை II இன் பத்தி 5 இன் பிரிவு (b) க்கு உட்பட்டு, கட்டிட விற்பனை.

6. லாட்டரி, பந்தயம் மற்றும் சூதாட்டம் தவிர, செயல்படக்கூடிய உரிமைகோரல்கள்.


- தமிழ் தொழில் உலகம்-ஆகஸ்டு 2022  இதழில் வெளிவந்தது.

No comments:

Post a Comment