கடந்த 26/08/2023 அன்று சென்னையில் இராயபுரத்தில் உள்ள அவ்வை அகாடமியில் நமது GSTPS உறுப்பினர்களுக்காக நேரடிக் கூட்டம் நடத்தினோம்.
தொழிற்சாலைச் சட்டங்கள் குறித்து... திரு. சதீஷ்குமார் சிறப்புரை ஆற்றினார்.
Inspector of Factories 1948 ஆண்டு சட்டத்தைப் பற்றி பிபிடி வழியாக விரிவாக விளக்கினார்.
1. "தொழிற்சாலை" என இந்தச் சட்டம் என்ன வரையறை செய்கிறது?
2.ஒரு தொழிற்சாலை இந்த சட்டத்திற்குள் வருவதற்கு என்ன தகுதி வைத்திருக்கிறது?
3. ஒரு தொழிற்சாலையை, இயந்திரங்களை, இன்னபிற விசயங்களை எவ்வாறு பராமரிக்கவேண்டும்?
5. இந்தச் சட்டத்தில் என்னென்ன உரிமைகள் தொழிலாளர்களுக்கு இருக்கின்றன?
என ஒவ்வொரு தலைப்பிலும் முக்கிய அம்சங்களை விரிவாக விளக்கினார்.
இடையிடையே பங்கேற்பாளர்களிடையே கேள்விகளை எழுப்பி, எழுப்பி விவாதித்தது ஆரோக்கியமாக இருந்தது. இடையிடையே நமது உறுப்பினர்கள் கேட்ட சில சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். தான் பணிபுரியும் இடத்தில் ஒரு தொழிலாளிக்கு விபத்து நடந்ததையும், அதை எப்படி எதிர்கொண்டோம் என்கிற அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார்.
பிபிடியை உங்களுக்காக இங்கு பகிர்கிறோம். நன்றி.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment