வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (02/09/2023) நமது GSTPS சார்பாக இணைய வழியில் (Zoom) கூட்டத்தை சிறப்பாக நடத்தினோம். நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் கூட்டத்தை ஒருங்கிணைத்தார்.
சிறப்பு பேச்சாளராக வந்திருக்கும் முருகேசன் இராமச்சந்திரன் அவர்களைப்
பற்றிய அறிமுகத்தை நமது பொருளாளர் செல்வராஜ் அவர்கள் வழங்கினார்.
“Tax
Audit Vs GST – Practical Solutions” என்ற தலைப்பில் மதுரையில் இருந்து மூத்த கணக்காளர்
முருகேசன் இராமச்சந்திரன் அவர்கள் விரிவாக பேசினார்.
ஜி.எஸ்.டி
தணிக்கை சார்பாக பல நிறுவனங்களுக்கும் நோட்டிஸ்
அனுப்பிக்கொண்டிருக்கிறார்கள். தணிக்கை குழுவும்
அலுவலகங்களுக்கு வந்துகொண்டிருக்கிறார்கள்.
இதில் ஒரு
கணக்காளராக, வரி ஆலோசகராக பல அம்சங்களையும் கவனமாக சோதிக்கவேண்டும்.
சில நிறுவனங்களின்
கணக்குகளைப் பார்த்தால், GSTR1, GSTR3B,
P&L account என மூன்றிலும் வேறு வேறான விற்றுமுதல் (sales) பதிவாகி இருக்கிறது. ஆனால், இது குறித்து விளக்கம் கேட்கும் பொழுது,
நிறுவனத்துக்காரர்கள் விளக்கம் கொடுக்கிறார்கள்.
இது முற்றிலும் தவறான நடைமுறை. மூன்றிலுமே
ஒரே விற்றுமுதல் தான் இருக்கவேண்டும். AIS வாங்கி சரிபார்த்தல் அவசியம்.
சிலர் சில
தேவைகளுக்காக Exempted sales அதிகப்படுத்துகிறார்கள். இதுவும் தவறு. அதற்கான முறையான ஆவணங்கள் இல்லாமல்
அதிகப்படுத்தக்கூடாது.
இலாப நட்ட
கணக்கில் உள்ள ஒவ்வொரு செலவினங்களுக்கும் ஜி.எஸ்.டிக்கும் தொடர்பு உண்டு. சிலர் விற்பனைக்காக செய்த செலவுகள் என (Sales Promotion) லட்சக்கணக்கில்
எழுதுகிறார்கள். ஆனால், அதற்கு TDS பிடித்தம் செய்திருக்கவேண்டும்.
இல்லையெனில் அதற்கும் வரி செலுத்தவேண்டியிருக்கும். ஜி.எஸ்.டி இது குறித்து விளக்கம்
கேட்டு, சரியாக சொல்லவில்லையென்றால், வருமான வரி துறைக்கும் தெரியப்படுத்துகிறார்கள்.
இப்படி ஒவ்வொரு
தலைப்பு வாரியாகவும் விரிவாக விளக்கம் அளித்தார்.
தமிழகம் தழுவிய
அளவில் கூட்டத்தில் திரளாக பங்கேற்றார்கள். அவர்கள் நடைமுறையில் எதிர்கொள்ளும் சந்தேகங்களுக்கும் தெளிவாக பதிலளித்தார்.
இறுதியில்
நமது இணைச்செயலர் செண்பகம் அவர்கள் நன்றியுரை வழங்கினார்.
கலந்து கொண்டு
கருத்துகளை தெரிவித்த அனைவருக்கும் நன்றி.
இந்த கூட்டம் பதிவு செய்யப்பெற்றது. அதை இங்கு உங்களுக்காக பகிர்கிறோம்.
https://www.youtube.com/watch?v=xZOIUq6WOsw
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment