கடந்த சனிக்கிழமையன்று (25/05/2024) நமது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.
தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ஜி.எஸ்.டி குறித்த ஐந்தாவது
வகுப்பை பிபிடி வழியாக தெளிவாக விளக்கினார்.
வழக்கமாக, ஒரு கறாரான வாத்தியாராய் கடந்த வகுப்பு குறித்த கேள்விகளை கேட்பார்.
என்னைப் போல டல் மாணவர்கள் தலையை சொறிவோம்.
இன்றைக்கு நேரம் கடந்ததினால், நேரடியாக வகுப்புக்கு சென்றுவிட்டார்.
குறிப்பாக அதிகாரிகளின் நியமனம், அவர்களின் அதிகாரம் என்ற
அளவில் இருந்தது. அதிகாரிகள் ஜி.எஸ்.டி துவங்கிய
காலம் தொட்டு எல்லாம் சட்டத்தை படித்துக்கொண்டிருந்தார்கள். இப்பொழுது தினந்தோறும் நோட்டிசுகளை தொடுத்துக்கொண்டே
இருக்கிறார்கள். வில்லியப்பன் சார் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 64 நோட்டிசுகளை பெற்றிருக்கிறார்.
ஆகையால் காலையில் முழிக்கும் பொழுதே, இன்றைக்கு
எந்த அதிகாரியை பார்ப்பது என்ற யோசனையில் எழுகிறோம்.
ஆக, ஒரு சிஸ்டம் என்ன விதிகளோடு இயங்குகிறது என புரிந்துகொண்டால்
தான், அவர்களை சரியாக எதிர்கொள்ளமுடியும்.
நாம் நமது வாடிக்கையாளர்களை துன்பத்திலிருந்து காக்க முடியும். அவரை மீட்டால் தான்,
நம் பொருளாதாரமும் வளமாக இருக்கும். அந்த அடிப்படையில்
இந்த வகுப்பு மிகவும் முக்கியமாய் இருந்தது.
வகுப்பு எடுக்கும் பொழுது, நிறைய அனுபவங்களை அவரும் பகிர்ந்துகொண்டார். பங்கேற்ற உறுப்பினர்களும் உற்சாகமாய் தங்களது அனுபவங்களை
பகிர்ந்துகொண்டனர். நிறைய நேரம் விவாதித்ததினால்,
நேரம் கொஞ்சம் கடந்து போனது. தலைவரே தான் எடுக்க நினைத்திருந்த இரண்டாவது அத்தியாத்தை
அடுத்த மாதம் தள்ளி வைக்கும்படி ஆகிவிட்டது.
இடைவேளையில் சுவையான இனிப்பும், காரமும், சூடாக காபியும்
வழங்கினார்கள்.
திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும், குபேந்திரன் அவர்களும்
சமீபத்தில் நம்மோடு இணைந்த இரண்டு புதிய உறுப்பினர்கள். கடந்த மாதம் நீலகண்டன் அவர்கள்
நடத்திய கூட்டத்தில் நம் சொசைட்டி பற்றி கேள்விப்பட்டு நம்மோடு விருப்பமாக இணைந்தவர்கள். நம் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் வெவ்வேறு வெளி கூட்டங்களில்
தொடர்ந்து உரையாற்றுகிறார். அந்த கூட்டங்களை கவனித்திருக்கிறார்கள். தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டார்கள்.
இப்பொழுது வருமான வரித் தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளை
துவங்கும் காலமிது. முன்பெல்லாம் தனிநபர்கள்
சொல்வது தான் தகவல், நாமும் பெரிதாக மெனக்கெடாமல் தாக்கல் செய்துவிடுவோம். இப்பொழுது, அரசு தனிநபர் தகவல்களை வெவ்வேறு இடத்தில்
இருந்து கவனமாய் தொகுத்து தந்துவிடுகிறது. ஆகையால் முன்பு போல ”எளிமை” கிடையாது. எல்லாவற்றையும் கவனமாக ஆவணங்களை கேட்டு, சரிப்பார்த்து, தாக்கல் செய்யவேண்டும். இல்லையெனில்
நோட்டிசை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிக்குள்ளாகிவிடுவோம் என்பதை தலைப்பு வாரியாக துணைத்தலைவர்
பாலாஜி அருணாச்சலம் அவர்கள் தெளிவாக விளக்கினார்.
பங்கேற்பாளர்களும் தங்களுடைய அனுபவங்களை சரியாக பகிர்ந்துகொண்டனர்.
ஒவ்வொரு நேரடிக் கூட்டத்தின் பொழுதும், தலைப்புகளில் இருந்தும்,
குறிப்பாக விவாதிப்பதில் இருந்தும், நிறைய கற்கிறோம். தினசரி கற்கவேண்டும் ஒரு நல்ல
மாணவர் தான் ஒரு நல்ல வரி ஆலோசகராக இருக்கமுடியும் என்கிறார் ஒரு மூத்த வரி ஆலோசகர்.
உண்மை தான். இல்லையென்றால், இந்த வரி உலகில்
நிச்சயம் பின் தங்கிவிடுவோம் என்பதை மட்டும் நன்றாக உணர முடிகிறது.
நமது சொசைட்டி துவங்கி ஜூன் மாதத்தோடு ஐந்தாம் ஆண்டை உற்சாகமாக நிறைவு செய்கிறோம். ஒவ்வொரு
ஆண்டும் வெளியே ஓரிடத்தில் நாள் முழுவதும்
கூடி விவாதிப்பதும், களிப்பதும் வழக்கம். இந்த
ஆண்டும் ஜூனில் அப்படி சந்திக்க இருக்கிறோம்.
அதற்கான இடத்தேர்வை செய்ய இருக்கிறோம் என தலைவர் தெரிவித்தார். உறுப்பினர்களும் தங்களுக்கு தெரிந்த, நல்ல, நம்
பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களை பரிந்துரைக்க கேட்டுக்கொண்டார்.
நன்றி.
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment