கடந்த சனிக்கிழமையன்று (25/05/2024) நமது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் இரண்டாவது தலைப்பாக....
வருமான வரித் தாக்கல் செய்வதற்காக ஆவணங்களை எப்படி சரியாக பெறுவது? என்ற தலைப்பில், GSTPS துணைத் தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் விரிவாக பேசினார்.
இப்பொழுது வருமான வரித் தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளை துவங்கும் காலமிது. முன்பெல்லாம் தனிநபர்கள் சொல்வது தான் தகவல், நாமும் பெரிதாக மெனக்கெடாமல் தாக்கல் செய்துவிடுவோம். இப்பொழுது, அரசு தனிநபர் பொருளாதார நடவடிக்கைகளை வெவ்வேறு இடத்தில் இருந்து கவனமாய் தொகுத்து தந்துவிடுகிறது. ஆகையால் முன்பு போல ”எளிமை” கிடையாது. எல்லாவற்றையும் கவனமாக ஆவணங்களை கேட்டு, சரிப்பார்த்து, தாக்கல் செய்யவேண்டும். இல்லையெனில் நோட்டிசை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிக்குள்ளாகிவிடுவோம் என்பதை தலைப்பு வாரியாக தெளிவாக விளக்கினார். பங்கேற்பாளர்களும் தங்களுடைய அனுபவங்களை சரியாக பகிர்ந்துகொண்டனர்.
- GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety
No comments:
Post a Comment