Friday, May 24, 2024

GSTPS : "Place of supply under GST " - Dr. M. Villiyappan, Member, GSTPS - PPT


வணக்கம். 18/05/24 அன்று காலையில்  ஜூம் கூட்டம் சிறப்பாக நிறைவேறியது. நமது உறுப்பினர்களும், பிற பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்டார்கள்.

 

நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பேசும் பொழுது, பல  நெருக்கடியான சமயங்களில் உதவுகிறவராக நமது உறுப்பினர்  Dr. வில்லியப்பன் இருந்திருக்கிறார். நம்மிடைய கடந்த காலங்களில் பல தலைப்புகளிலும் உரையாற்றியுள்ளார். கடந்த வாரம் Place of supply குறித்துப் பேசுங்கள் எனக் கேட்ட பொழுது, உடனே ஒப்புக்கொண்டார் என துவங்கிவைத்தார்.

 

வரவேற்புரை வழங்கிய உறுப்பினர் முனியசாமிஎனது சீனியரான Dr. வில்லியப்பன் அவர்கள் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில்... வரித்துறையில் 35 ஆண்டுகளாகவும், 25 ஆண்டுகளாக வரி ஆலோசகராகவும் இருக்கிறார். வரிச் சட்டங்கள் குறித்து நல்ல அறிவோடும், அதற்கு இணையான நடைமுறை அறிவோடும் இருக்கிறார்அவருடைய பட்டறையில் வளர்ந்தவன் தான் நான். என்னைப் போல பலருடைய வளர்ச்சிக்கும் உதவுகிறவராக இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு.”  

 

”அவர் பேச்சில் எப்பொழுதும் ஒரு வேகம் இருக்கும். என்னைப் போன்றவர்களை மனதில் வைத்து மெதுவாக பேசவேண்டும் என கோரிக்கை வைத்து... அனைவரையும் வரவேற்றார்.

 

Place of supplyகுறித்து பிபிடி வழியே வில்லியப்பன் அவர்கள் விரிவாக விளக்க ஆரம்பித்தார்.

 

ஜி.எஸ்.டி சட்டத்தில் பொருள் வழங்கும் இடத்தின் முக்கியத்துவத்தின் பல அம்சங்களையும் உதாரணங்களோடும், படங்களோடும் நன்றாக விளக்கினார்.

 

கடந்த வாட் வரி விதிப்பில் இடத்தின் முக்கியத்துவம், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறதுபழைய நினைவுகளில் இருந்து எதையும் அணுக முடியாது.

 

அவர் உரையை முடித்ததும், கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்தலைவர் அவர்கள், கோவையில் இருந்து பெருமாள் அவர்கள், நீலகண்டன் அவர்களும். மற்றவர்களும் விவாதங்களில் பங்கு கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்கினார்கள்

 

இந்த தலைப்பு விரிவானது என்பதால், வகுப்பு இத்தோடு முடியவில்லை. அடுத்த தலைப்பு இன்னும்  இன்னும் விரிவாக எடுக்கிறேன் என முடித்தார்.

 

தலைவர் அவர்கள் இந்த தலைப்பில் ஒரு எடுத்துக்காட்டு சொல்லி, பதில் அளியுங்கள் என கூறியுள்ளார்.

 

ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்துகொள்வதின் மூலம் ஜி.எஸ்.டி ஒரு பரந்து விரிந்த கடல் என புரிந்துகொள்ள முடிகிறதுஇனி தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பது அவசியம் என உணரமுடிகிறதுபடிப்பது ஒரு பக்கம் என்றால், விவாதத்தில் பங்கு கொண்டு புரிந்துகொள்வது அதைவிட அவசியம் எனவும் புரிந்துகொள்ள முடிகிறது.

 

பொருளாளர் செல்வராஜ் அவர்கள் உரையாற்றியவருக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி கூட்டத்தை முடித்துவைத்தார்.


- GSTPS































































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


 

No comments:

Post a Comment