Sunday, October 15, 2023

GSTPS : How to use an employee PF site?

EPF :  தொழிலாளிகளுக்கான பிரத்யேகமான தளத்தை ஒரு தொழிலாளி எவ்வாறு பயன்படுத்துவது?


தொழிலாளிக்கான பிரத்யேகமான பி.எப் தளத்தின் முகவரி

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/



இதில் உள்ளே நுழைவதற்கு… User ID :  xxxxxxxxxxxx  12 எண்களால் உருவாக்கப்பட்ட எண்ணை ஒவ்வொரு தொழிலாளிக்கும் நிறுவனத்தால் ஆதார் எண், தொழிலாளியின் விவரங்களைக் கொண்டு பி.எப் தளத்தில் உருவாக்கப்படும் . அந்த  UAN (Universal Account Number) எண்ணை தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவேண்டும்.


இதற்கான கடவுச்சொல்லை (Password) நாமே தளத்தில் உருவாக்கிக்கொள்ளலாம்.



ஆதார் எண், பெயர், பிறந்த தேதி, மாதம், வருடம், மொபைல் எண், கேப்ட்சா குறியீடு ஆகியவற்றுடன் உங்கள் UAN/உறுப்பினர் ஐடியை உள்ளிட்டு, "அங்கீகரிப்பின் பின்னைப் பெறு" என்பதைக் கிளிக் செய்யவும். இப்போது உங்கள் UAN மற்றும் கடவுச்சொல்லைப் பயன்படுத்தி உங்கள் EPF கணக்கில் உள்நுழையலாம்.


உள்ளே நுழைந்ததும்…  தொழிலாளியின் தனிப்பட்ட விவரங்கள் தென்படும்.

Member Profileல் விடுபட்ட விவரங்கள் இருந்தால்,  தொழிலாளியே கொடுக்கவேண்டியிருக்கும்.


View  என தெரியும் வரிசைக்கு கீழே உள்ள நான்கு வகைகள் தெரியும்.


Profile

Service History

UAN Card

Passbook

இதில் Service History என்பது நாம் என்னென்ன நிறுவனங்களில் வேலை செய்தோம் என்பது நிறுவனத்தின் பெயர், சேர்ந்த தேதி, விலகிய தேதி எல்லாம் வரிசையாக தெரியும்.  இதில் நாம் வேலை செய்த பழைய நிறுவனத்தின்/நிறுவனங்களின் தகவல்கள் இல்லையென்றால், அதற்காக பி.எப். தளத்தில் உரிய விண்ணப்பத்துடன் தெரிவித்து, இணைத்துக்கொள்ளவேண்டும்.  இல்லையெனில் நாம் கணக்கு வழக்குகளை முடித்து பணம் பெற வேண்டியிருக்கும் பொழுது, செய்யவேண்டிய நெருக்கடிக்குள் உள்ளாவோம்.




UAN Card என்பது ஒரு தொழிலாளிக்குரிய அடையாள அட்டை போல ஒன்றை பி.எப் தருகிறது. அதை எடுத்து லேமினேசன் செய்து வைத்துக்கொண்டால் வசதியாக இருக்கும். 

நாலாவது இருக்கும் பாஸ்புக்கை கிளிக் செய்தால்…

 


https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login


என்ற தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.

 

அதில் நம் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரிந்து கொள்ளமுடியும்.  அந்த தளத்திற்கான User ID, கடவுச்சொல் பி.எப் தளத்தில் நாம் பயன்படுத்துகிற அதே User ID, கடவுச்சொல்லையே பயன்படுத்திக் கொள்ளலாம்.

 

தளத்தில் இன்னும் நிறைய விவரங்கள் உள்ளன.  அதை அடுத்தடுத்த பதிவுகளில் பார்க்கலாம்.

 

நன்றி.

 

- இரா. முனியசாமி,
உறுப்பினர்,
GSTPS

No comments:

Post a Comment