Monday, December 1, 2025

GSTPS : AI Basic introduction to Tax Consulants - R. Muniasamy, GSTPS Member

 


கடந்த சனிக்கிழமையன்று நடைபெற்ற கூட்டத்தில் நான் பேசிய உரையின் சாரம் இது தான்.

"AI தொழில்நுட்பம் புதிதல்ல! இரண்டாம் உலகப்போர் காலத்திலேயே ஒரு விஞ்ஞானி  விதைப் போட்டு, பின்பு வளர்ந்து… கணிப்பொறி வளர்ந்து, அதில் நிறைய தரவுகள் (Data) வளர்ந்து… கடந்த 12 ஆண்டுகளில் நாம் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வேகத்துடனும், துல்லியமாகவும் வளர்ந்து நிற்கிறது.

AI –  விவசாயம், தொழிற்துறை, சுகாதாரம், கல்வி, வரித்துறை என சகல துறைகளிலும் நுழைந்துவிட்டது. உலகம் டிரில்லியன்  டாலர்களை AI தொழில்நுட்பத்தில் முதலீடு செய்திருக்கிறது.  அதன் பாதையின் இந்தியாவும் அந்த வரிசையில் இணைந்து சில வருடங்களாகிவிட்டது.

குறிப்பாக, AI வரித்துறையில் Faceless  Assessment, அதிக மதிப்புள்ள பரிவர்த்தனைகள் கண்காணிப்பு என பயன்படுத்தப்படுகிறது.  11000 கோடி இதன்மூலம் வருமானம் கிடைத்துள்ளதாக அரசே வெளிப்படையாக அறிவித்துள்ளது.  இனி துறை சார்ந்த கேள்விகளும்/தணிக்கைகளும் என்பது காலங்கடந்ததாக இல்லாமல், உடனுக்குடன் இருக்கப்போகிறது. 

AI துணையுடன்… மெல்ல மெல்ல GSTR1, 3B எல்லாம் ஆட்டோமேசனாக (Automation) மாறப்போகிறது. பணத்தை செலுத்துவது மட்டுமே வேலையாக இருக்கப்போகிறது.  

அப்பொழுது வரி ஆலோசகரான நமக்கான வேலை என்பது, அவர்கள் AI மூலமாக விரைவாக கேட்கும் கேள்விகளுக்கும், தணிக்கைகளுக்கும் மட்டும் வேலை செய்யவேண்டியது மட்டுமாகத்தான் இருக்கப்போகிறது..  அதற்கு நிறுவனங்களின் ஆவணங்களை எப்பொழுதும் தயார் நிலையில் வைத்திருக்கவேண்டியது அவசியம்.

துறை சார்ந்த அறிவு என்பது மேலோட்டமாக இல்லாமல், ஆழமாகவும், மிகவும் தெளிவாகவும் இருப்பது அவசியம்.  மெதுவாக அல்ல விரைவாக வேலை செய்வதும் அவசியம்.

ஆக இந்த திசை வழியில் நாம் வளரவில்லை என்றால்… நாம் காலத்தின் போக்கில் பின் தள்ளப்பட்டுவிடுவோம் என்பது தான் கசப்பான உண்மை.

அதற்கு AIயின் உதவியை கொண்டு, நம் சட்ட அறிவை வளர்த்துக்கொள்ள பயன்படுத்துவோம்.  நமது அன்றாட வேலைகளையும் விரைவாக செய்வதற்கு பயன்படுத்துவோம்.

AI யின் துறை சார்ந்தவர்கள் AI இப்பொழுது காலவதியாகிவிட்டது. அடுத்த நிலைக்கு Artificial General Intelligence நகர்ந்துவிட்டது. அடுத்து Artificial Super intelligence ஒரு சில ஆண்டுகளில் நகர்ந்துவிடும் என அதன் வேகத்தை கணித்து சொல்கிறார்கள்.

கால மாற்றத்திற்கேற்ப நாம் மாறுவது அவசியம். இதை கவனத்தில் கொள்ளுங்கள்

இந்த பின்னணியின் புரிதலில் இருந்து  இங்கு நான் பகிர்ந்துள்ள பிபிடியை பாருங்கள். நன்றாக புரியும். அதன் தீவிரத்தையும் புரிந்துகொள்ளமுடியும்.

நன்றி."

- இரா. முனியசாமி







































- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


No comments:

Post a Comment