Monday, February 24, 2025

GSTPS : Self Introduction - Reg.


வணக்கம்.  எங்களது சொசைட்டி குறித்தும், ஆக்கப்பூர்வமான செயல்பாடுகள் குறித்தும் ஒரு சிறிய அறிமுகத்தை உங்களுக்கு தருகிறோம்.


2017ல் இந்தியாவில் ஜி.எஸ்.டி றிமுகமான பொழுது பொழுது தணிக்கையாளர்களும்முதலாளிகளுக்கான சங்கங்களும்வரி ஆலோசகர்களும்மத்திய அரசுக்கு தொடர்ச்சியாக கடிதம் எழுதிக்கொண்டிருந்தார்கள்நிறைய சந்தேகங்கள் சூழ்ந்திருந்தன.  

 

இந்த இக்கட்டான சமயத்தில் தான் சென்னையில் நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக வணிக வரி ஆலோசகராக னுபவம் வாய்ந்த செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் முன்னெடுப்பில்இந்த சொசைட்டியை அவரைப் போல ஒரே சிந்தனை கொண்டவர்களும் இணைந்து ஜி.எஸ்.டி புரொபசனல்ஸ் சொசைட்டியை (GST Professionals Society (Regd.) உருவாக்கினோம்.

 


சொசைட்டியில் தணிக்கையாளர்கள்ஜி.எஸ்.டி வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள் என எல்லா நிலைகளிலும்  உறுப்பினர்களாய் இணைந்தார்கள்துவக்க நிலையில் மாதம் ஒரு  நேரடிநேரடிக் கூட்டம் நடத்தினோம்அதில் ஜி.எஸ்.டி குறித்த தலைப்பு வாரியாக விளக்க கூட்டங்களை நடத்தினோம்.  உறுப்பினர்களின் சந்தேகங்கள் உடனுக்குடன் தீர்க்கப்பட்டன.


 


கொரானா காலத்திற்கு பிறகுபுதிய நிலைமைக்கேற்ப வாரம் ஒரு கூட்டம் என இணைய வழியில் (Zoom Via) நடத்தினோம்சொசைட்டியின் நிர்வாகிகளுக்கு தமிழக அளவிலும்இந்திய அளவிலும் பரந்துப்பட்ட தொடர்புகள் இருந்ததால், ஒவ்வொரு வாரமும் துறை சார்ந்த அறிவும்அனுபவமும் கொண்ட பேச்சாளர்களை ஏற்பாடு செய்தோம்அவர்களும் சிறப்பாக உரையாற்றினார்கள்தொடர்ச்சியாக கூட்டங்கள் உற்சாகமாக நடைபெற்றன.

 


GSTPS சொசைட்டியின் பெயரில் ஜி.எஸ்.டிக்கென ஒரு வாட்சப் குழுவும்இன்னொன்று GSTPS IT News என்ற பெயரிலும் இரண்டு வாட்சப்  குழுக்களை ஆரோக்கியமாய் இயக்கி வருகிறோம்அதில் புதிதாய் வரும் ஜி.எஸ்.டி குறித்தான அறிவிப்புகள்அப்டேட்கள்செய்திகள்வழக்குகள்தீர்ப்புகள் குறித்த விவரம் என தினமும் நிர்வாகிகள் பகிர்ந்துவருகிறோம்உறுப்பினர்கள் கேட்கும் சந்தேகங்களுக்கும் உடனடியாக பதில் அளித்து வருகிறோம்

 

 

ஒவ்வொரு  மாதமும் இரண்டு சனிக்கிழமைகளில் காலை 10.30 மணியளவில் ஜூம் வழியில் கூட்டம் நடத்துகிறோம். மாதத்தின்  நானகாம் சனிக்கிழமையன்று மதியம் 2.30 மணியளவில் சென்னையில் நேரடிக்கூட்டமும் நடத்திவருகிறோம்இப்படி கடந்த காலங்களில் 151 ஜூம் 

ழிக் கூட்டங்களையும்,  38 நேரடிக்கூட்டங்களையும் நடத்தியிருக்கிறோம்.

 

மேலும் GSTPSக்கென ஒரு தளம் ஒன்றை பராமரித்து வருகிறோம். அதில் கூட்டம் குறித்த அறிவிப்புகளை வெளியிடுகிறோம். கூட்டத்தில் பேசும் பேச்சாளர்கள் பயன்படுத்தும் பிபிடிகளை பகிர்கிறோம். சொசைட்டிக்கென இயங்கும் யூடியூப் சானலில் கூட்டம் குறித்த காணொளிகளை வெளியிடுகிறோம். பேஸ்புக்கில் தொடர்ந்து ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ குறித்த செய்திகளை வெளியிடுகிறோம்.




 

கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக சொசைட்டி சார்பில் ஒரு மின்னிதழை கொண்டு வந்துகொண்டிருக்கிறோம். அதில் ஜி.எஸ்.டி, வருமானவரி குறித்த அப்டேட்கள்,  முக்கிய வழக்குகள் குறித்த செய்திகள், பி.எப். குறித்த கட்டுரைகள், ஜி.எஸ்.டி குறித்த வினாடி வினாவை வெளியிடுகிறோம்.


 

மேலும் உறுப்பினர்கள் தங்கள் தொழிலில் எதிர்கொள்ளும் ஜி.எஸ்.டி குறித்த எந்த கேள்விக்கும், சந்தேகத்திற்கும், வழிகாட்டலுக்கும் நிர்வாகிகளை தொலைபேசி வழியாக தொடர்புகொண்டால் உடனே பதிலளிக்கிறோம்உரிய முறையில் வழிகாட்டுகிறோம்.

 


ஜி.எஸ்.டி துவங்கிய காலத்தில் ருந்து  இன்றைக்கும் திருத்தங்கள்புதிய புதிய அறிவிப்புகள் வந்துகொண்டே இருக்கின்றனவழக்குகள் நடைபெற்று வருகின்றனஅது குறித்த முக்கிய தீர்ப்புகள் வந்துகொண்டே தான் இருக்கின்றன. இதைத் தனிப்பட்ட முறையில் ஒவ்வொருவரும் தன்னை அப்டேட் செய்வது என்பது மிகச்சிரமம்ஆனால் பலரும் இணைந்த கூட்டு செயல்பாடுகளில் து எளிதில் சாத்தியமாகிறதுஆகையால் GST Professionals Socitetyயில் இணைய முன் வாருங்கள்.

 


இந்த சொசைட்டியை முறையாக சொசைட்டி சட்டத்தின் கீழ் பதிவு செய்திருக்கிறோம்.  அதற்கான விதிமுறைகளைநடைமுறைகளை முறையாக கடைப்பிடித்து வருகிறோம்.  கடந்த நான்கு ஆண்டுகளாக ஆண்டின் துவக்கத்தில் மாத காலண்டர் வெளியிட்டியிருக்கிறோம்.  எங்களது உறுப்பினர்கள் வழியாக ஜிஎஸ்டி அலுவலகங்களுக்கும் விநியோகித்திருக்கிறோம்.  உறுப்பினர்களுக்கு யன்படும் வகையில் டைரி விநியோகித்திருக்கிறோம்.




 

சொசைட்டியில் சேர பதிவுக்கட்டணம் ரூ.100. மாதம் ரூ. 200 கட்டணம் என வருடத்திற்கு ரூ.2200. மூன்றாண்டு சந்தாவாக ரூ.5000.  தொடர்ச்சியான கூட்டங்களை ஏற்பாடு செய்வதற்கான செலவுகளை எதிர்கொள்ளத்தான் சந்தா சேகரிக்கிறோம்சொசைட்டியில் உறுப்பினராக இணையுங்கள்எங்களோடு இணைந்து பயணியுங்கள்வேறு ஏதும் சந்தேகம் இருந்தாலும்எங்களை அழையுங்கள்பதில் சொல்கிறோம்.


நன்றி.



GSTPS

 

திருசுசெந்தமிழ்ச்செல்வன்,
தலைவர்
098412 26856
 
திருபாலாஜி அருணாச்சலம்,
துணைத்தலைவர்

095000 41971


திருபாலாஜி,
செயலாளர்
097104 48944
 
திருசெல்வராஜ்,
பொருளாளர்
097910 46555


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety