Saturday, August 16, 2025

ஜி.எஸ்.டி தொழிலாற்றுநர் (GST Practitioner)


பிரிவு :  48

விதி :  83(1) (2)(4)(6), 83-B

படிவங்கள் : GST PCT -1, 7


தகுதி : வணிகவியல் பட்டதாரி அல்லது அதற்கு தகுதியான தேர்வில் வெற்றி பெற்றவர். அரசின் வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். மத்திய கலால், சுங்க வாரியம், அரசிதழ் பதிவு பணியாற்றிய ஓய்வு பெற்றவர்கள்


விதிகள் :  


இந்திய குடிமகனாக இருக்கவேண்டும்.  உளவியல் சார்ந்த நல்ல மன நலத்துடன் இருக்கவேண்டும்.

திவால் ஆனவராக இருக்ககூடாது.

நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து தண்டிக்கப்படாதவராக இருக்கவேண்டும்.


கடமைகள் :


ஜி.எஸ்.டி போர்ட்டலில் ரிட்டன்கள் தாக்கல் செய்வது, ரீபண்ட் பெற என வாடிக்கையாளர் தொடர்பான அத்தனை வேலைகளையும் செய்யமுடியும்.


பதிவு செய்யும் முறை :


www.gst.gov.in போர்ட்டலில் அடிப்படையான விவரங்களான பெயர், பான் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் கொடுத்து  பதிவு செய்து  பதிவு எண்ணைப் (Enrolment Number) பெறலாம்.


(வாடிக்கையாளர்கள் ஜி.எஸ்.டி தளத்தில் அருகில் உள்ள ஜி.எஸ்.டி தொழிலாற்றுநரை தேடும் பொழுது, அந்த பட்டியலில் நம் பெயரும் வந்துவிடும்.)


- ஜி.எஸ்.டி (GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள் புத்தகத்திலிருந்து… பக் 442


(இங்கு சுருக்கப்பட்ட வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது.  புத்தகத்தில் விரிவாக தரப்பட்டுள்ளது)

Sunday, August 10, 2025

வருங்கால வைப்பு நிதி திட்டம் (EPF) : சில சந்தேகங்களும் விளக்கங்களும்!


சமீபத்தில் ஒரு புதிய நிறுவனத்தில் நிர்வாகியை சந்தித்து பேசுகிற பொழுது, சில பணியாளர்கள் தங்களுக்கு பி.எப் திட்டத்தில் இணைய விருப்பமில்லை என தெரிவிக்கிறார்கள். அவர்களுக்கு இத்திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்க முடியுமா சார்? என கேட்டதற்கு ஏற்றுக்கொண்டேன்.

 

உடனே அந்த அலுவலகத்தின் கான்பரன்ஸ் ஹாலில் 15 பேர் வரை வந்து குழுமினார்கள்.  20 வயது துவங்கி 50 வயது வரைக்குமான வயதினர் இருந்தார்கள்.  இருபது நிமிடங்கள் பி.எப், இ.எஸ்.ஐ. திட்டத்தின் பலன்கள் குறித்து விளக்க, நாற்பத்தைந்து நிமிடங்கள் அவர்கள்  கேள்விகளுக்கு பதில் அளிப்பதுடன் அந்த விளக்க கூட்டம் முடிவுற்றது.

ஒவ்வொரு தலைப்பையும் விரிவாக எழுதுவதால், இந்த தலைப்பில் பேசியது, பெரும்பாலான பணியாளர்களுக்கு உதவும் என்பதால் உங்களுடன் பகிர்ந்துகொள்கிறேன்.  

 

பணியாளருக்கான பி.எப் நலத்திட்டங்கள்

 


ஒரு பணியாளர் தன்னுடைய பணிக்காலத்தில் சம்பளம் அவருடைய வாழ்வாதரத்திற்கு உதவுகிறது. ஆனால் ஓய்வு பெற்ற பிறகு, அவர் வாழ்வதற்கு ஒரு நிதியை உருவாக்கி தருவது அவருக்கு மிகவும் பயன்படும்.   அவருக்கு ஓய்வூதியமும் இதன் மூலம் ஏற்பாடு செய்தால், மரியாதையுடன் வாழ்வதற்கு உதவி செய்யும் என்பதற்காகவே, 1952ல் இந்த திட்டம் உருவாக்கப்பட்டது.

 

(ஆகஸ்ட் 2023 நிலவரத்தின் படி) இத்திட்டத்தில் உள்ள நிறுவனங்களின் எண்ணிக்கை மொத்தம் கிட்டத்தட்ட 8 லட்சம்.  பயன்பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 7 கோடி பேர்  ஓய்வூதியம் பெறும் தொழிலாளர்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 77 லட்சம் பேர்.

 

ஒரு தொழிலாளியின் சம்பளத்தில் அடிப்படை சம்பளம் (Basic Salary), பஞ்சப்படி (Dearness Allowance) இரண்டிலும் வேலை செய்த நாட்களுக்கு சம்பளம் கணக்கிட்டு, அதில் 12% பிடித்தம் செய்யவேண்டும்.  நிறுவனமும் அதே அளவிற்கு 12% செலுத்தவேண்டும். நிறுவனம் செலுத்துகிற நிதியான 12% நிதியில் 8.33%  ஓய்வூதிய கணக்கிற்கு செல்லும். மீதி 3.67% பி.எப் கணக்கிற்கு செல்லும்.

 

சேகரிக்கப்படும் பணத்திற்கு வருட வட்டி வருடந்தோறும் கணக்கிட்டு தருகிறார்கள். 2024 – 25 கணக்காண்டிற்கு 8.25% அறிவித்திருக்கிறார்கள்.  வங்கி வட்டியை விட நல்ல வட்டி தருகிறார்கள்.

 

பணியாளருக்கான ஓய்வூதியம்

 


ஒரு பணியாளர் தன்னுடைய பணிக்காலம் 58 வயது வரை வேலை செய்த பிறகு, விண்ணப்பித்து  பெறுவது தான் ஓய்வு நிதி.  இதற்கு முதல் தகுதி ஒரு நிறுவனத்திலோ அல்லது சில நிறுவனங்களிலோ வேலை செய்த காலங்களின் கூட்டுத்தொகை பத்து ஆண்டுகளுக்கு  அவர் கணக்கில் செலுத்தியிருக்கவேண்டும்.

 

பி.எப்  ஓய்வூதியத்தை எப்படி கணக்கிடுகிறது?


 

தொழிலாளர்களுக்கான ஓய்வூதியத்தை கீழ்க்கண்ட வகையில் கணக்கிடுகிறது. சிக்கலான முறை எல்லாம் கிடையாது.

கணக்கிடுவதற்கான Formula = Pensionable Salary * Employee Service

                                                            70

https://www.epfindia.gov.in/EP_Cal/pension.html  இந்தச் சுட்டியும் ஓய்வூதியத்தை கணக்கிட உதவும்.

 

குறைக்கப்பட்ட ஓய்வூதியம் அல்லது விருப்ப ஓய்வூதியம்  (Reduced Pension)

 

ஒரு பணியாளர்  வேலை செய்ய இயலாமை காரணமாகவோ, தனது நோயின் காரணமாகவோ 50 வயது முடிவடைந்ததுமே, ஓய்வூதியம் பெறுவதற்கு உரிய தகுதி அதாவது பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பி.எப். பென்சன் தொகை செலுத்தியிருந்தால் தனக்கு ஓய்வூதியம் அவசியம் என கருதினால், பி.எப்பில் விண்ணப்பிக்கமுடியும்.  இதில் மேலே விளக்கியபடியே தான் பி.எப். ஓய்வு நிதியை கணக்கிடுவார்கள். 

 

பணியாளரின் குடும்பத்திற்கான ஓய்வூதியம்

 


ஒரு பணியாளர் பணியில் இருக்கும் பொழுது இறப்பு ஏற்பட்டால்,  அவருடைய குடும்பத்திற்கும் ஓய்வூதியம் கிடைப்பதற்கு பி.எப் வழி செய்கிறது.  பணியாளர் ஆணாக/பெண்ணாக இருந்தால், அவருடைய துணைவியாருக்கு/கணவருக்கு  அவருடைய இறப்பு காலம் வரைக்கும் ஓய்வூதியம் கிடைக்கும்.

 

பணியாளருடைய இரண்டு வாரிசுகளுக்கு அவர்களுடைய இருபத்தைந்து வயது வயது வரையும் நிதி கிடைக்கும்.  அந்த இரண்டு வாரிசுகளுக்கு பிறகும், மேலும் அவருக்கு குழந்தைகள் இருந்தால், அவர்களும் விண்ணப்பித்தால், அவர்களும் தங்களுடைய இருபத்தைந்து வயது வரை நிதி கிடைக்கும்.

 

ஊனமுற்றோருக்கான ஊதியம்

 

ஒரு பணியாளர் வேலை செய்யும் பொழுது விபத்து ஏற்பட்டு, பகுதியளவு ஊனமானலோ, அல்லது வேலை செய்யமுடியாத அளவிற்கு முழு ஊனம் ஆனாலோ அந்த பணியாளர் ஊனமுற்ற நாளிலிருந்து மாதாந்திர ஓய்வூதியத்திற்கு தகுதி பெறுகிறார். அவருக்கு வாழ்நாள் முழுவதும் ஓய்வூதியம் வழங்கப்படும். 

 

பணியாளருக்கான EDLI (Employees Deposit Linked Insurance Scheme)  திட்டமும்  அதன் பலன்களும்

 

இந்தத் திட்டம் 1976ல் அறிமுகப்படுத்தப்பட்ட அருமையான திட்டமாகும்.  பி.எப் திட்டத்தில் இணைந்த அனைத்து பணியாளர்களுக்கும் இந்த திட்டம் பொருந்தும்.  கட்டவேண்டிய தொகை என்பது, ஒரு பணியாளரின் மாதாந்திர அடிப்படைச் சம்பளம், பஞ்சப்படியில் 0.50% கணக்கிட்டு பணியாளர் செலுத்தவேண்டியதில்லை. நிறுவனமே செலுத்தும். 

 

இறப்பதற்கு முன்பு பணியாளர் வேலை செய்த ஓர் ஆண்டு சம்பளத்தைக் (Basic + DA) கணக்கிட்டு, அதை 35ஆல் பெருக்குகிறார்கள்.  கூடுதல் போனசாக ரூ. 1.75 லட்சத்தையும் சேர்த்து தருகிறார்கள். அதிகப்பட்சம் ஏழு லட்சம் வரை கிடைக்கும்.

 

இதற்கு பிறகு பணியாளர்கள் கேட்ட சந்தேகங்களுக்கு, பதிலளிக்க ஆரம்பித்தேன்.

 

பணியாளருக்குரிய வருங்கால வைப்பு நிதி (PF) அடையாள எண் (UAN – Universal Account Number)

 


பணியாளருக்கென செலுத்தப்படும் நிதிக்காக. வங்கியில் கணக்கு எண் தருவது போல, பி.எப் அமைப்பும் ஒவ்வொரு தொழிலாளிக்கும் 12 இலக்கங்களில் தனித்த ஒரு அடையாள எண்ணைத் தருகிறது.


பணியாளரின் அடிப்படை தரவுகளையும், ஆதார் எண்ணையும் பெற்று, நிறுவனம் பி.எப் தளத்தில் பதியும் பொழுது, பி.எப். தனித்த அடையாள எண்ணை (UAN) தருகிறது.

 

அந்த (UAN) எண்ணை பெற்றுக்கொண்டால், இனி பணியாளர் தன் வாழ்நாளுக்கும் பயன்படுத்திக்கொள்ளவேண்டும்.  அதே எண்ணைத் தான் அடுத்து புதிய வேலையில் எங்கு இணைந்தாலும், அங்கும் தெரியப்படுத்தவேண்டும்.

 

 

நிறைய பணியாளர்கள் தன்னுடைய அடையாள (UAN) எண்ணை முறையாக குறித்து வைத்துக்கொள்வது இல்லை. இப்படி ஒரு பிரச்சனை இருப்பதால், சம்பந்தப்பட்டவருக்கு ஏற்கனவே பி.எப் அடையாள எண் (UAN) இருக்கும் பட்சத்தில், பி.எப் தளத்தில் பணியாளரின் ஆதாரை அடிப்படையாக வைத்து சோதிக்கும் பொழுது அவருக்குரிய தனித்த எண்ணை பி.எப் தளமே காட்டிவிடுகிறது.

 

இப்படிப் பதிந்த பிறகு நிறுவனம் பணியாளருக்கு உரிய அடையாள எண்ணை (UAN) தெரியப்படுத்தவேண்டும். பணீயாளரும் அந்த எண்ணை நிறுவனத்திடமிருந்து கேட்டுப் பெற்று, பாதுகாப்பாய் குறித்து வைத்துக்கொள்ளவேண்டும்.

 

பணியாளர்களுக்காக இயங்கும் பி.எப் தளத்தின் முகவரி

 

பி.எப். பணியாளர்களுக்கென ஒரு தளத்தை இயக்கி வருகிறது.  அந்த தளத்தின் வழியாக தான் கடனுக்கு விண்ணப்பிப்பது, பி.எப். நிதியைப் பெற விண்ணப்பம் சமர்ப்பிப்பது, ஓய்வு நிதி பெறுவதற்கான விண்ணப்பத்தை  சமர்ப்பிப்பது என பல வேலைகளை செய்ய உதவுகிறது. 

https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/

 

பணியாளரின் கணக்கு விவரங்கள் (Passbook)

 

பணியாளர்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருக்கிறது என தெரிந்துகொள்வதற்காக தனியாக ஒரு தளத்தை பி.எப். உருவாக்கி தந்திருக்கிறது.  அந்த தளத்திற்கான User ID, கடவுச்சொல் பி.எப் தளத்தில் நாம் பயன்படுத்துகிற அதே User ID, கடவுச்சொல்லையே பயன்படுத்திக்கொள்ளலாம். https://passbook.epfindia.gov.in/MemberPassBook/login  என்ற தளத்திற்கு நம்மை அழைத்துச் செல்லும்.  செல்லில் Umang என்ற ஒரு செயலி (App) இருக்கிறது.  அதிலும் பார்த்துக்கொள்ளலாம்.

 

ஒரு பணியாளர் நிறுவனத்தில் இருந்து விலகும் பொழுது, தன்னுடைய பி.எப். பணத்தைப் பெறுவதற்கு நிறுவனத்தின் அனுமதி தேவைப்படுமா?  வேலை செய்யும் பொழுது நடந்த ஏதோ ஒரு முரண்பாட்டை காரணம் சொல்லி, பணத்தை எடுக்கவிடாமல் நிறுவனம் தடுக்க முடியுமா?

 

ஒரு பணியாளரின் கணக்கில் செலுத்தப்படும் நிதி என்பது அவருக்கு சொந்தமானது.  பி.எப். விதிகளுக்கேற்ப அந்த நிதியை கையாளலாம்.  இதில் நிறுவனம் தலையிட முடியாது. 

 

பி.எப். பணியாளர்களுடைய பி.எப் நிதியை கையாள்கிறது.  ஆனால் அந்த பணியாளரை அடையாளம் காணுவதற்கு அதற்கென பிரத்யேக வழியில்லாத நிலை முன்பு இருந்தது.  அதனால், ஒரு பணியாளரை தனிப்பட்ட முறையில் நன்கு தெரிந்தவர் என்ற அடிப்படையில்,  நிறுவனத்தின் நிர்வாகி பி.எப் பணத்தைப் பெறுவதற்குரிய விண்ணப்பத்தில் கையெழுத்திடுவது தவிர்க்க முடியாத அவசியமாக இருந்தது.

 

ஆனால், ஆதார் அமுலாக்கத்திற்கு பிறகு, ஆதார்  பயோ மெட்ரிக் அடையாளத்துடன் இருப்பதால், ஆதாரை ஒரு முக்கிய அடையாளமாக பிஎப். இறுகப் பிடித்துக்கொண்டது.  அதனால் நிறுவனத்தின் நிர்வாகி கையெழுத்திட வேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை.  ஆதாரை அடிப்படையாக கொண்டு நிதியை பெற்றுவிடமுடியும்.

 

ஆனால், ஒரு பணியாளர் வேலை செய்யும் பொழுதே, தன்னுடைய பி.எப். கணக்கில்  ஆதார், வங்கிக்கணக்கு எண், பான் எண்ணை எல்லாம் இணைத்திருக்கவேண்டும் அவசியமானது.   அதை அந்த நிறுவனம் தன்னுடைய டிஜிட்டல் கீ கொண்டு அங்கீகரித்து இருக்கவேண்டும்.   ஒருவேளை நிறுவனம் அதை அங்கீகரிக்க தவறினால், பி.எப். அலுவலகத்தில் இது தொடர்பாக முறையிட்டால், நிறுவனத்திற்கு அதை செய்ய சொல்லி சம்பந்தப்பட்ட அலுவலர் வலியுறுத்தி செய்ய சொல்வார். அதனால் கவலையில்லை.

 

ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்யும் பொழுது, தொழிலாளியின் கணக்கில் பணம் செலுத்தப்படவில்லை என்றாலும், தொடர்ந்து வட்டித்தருவார்களா?

 

இந்த சந்தேகம் பணியாளர்களால்  அடிக்கடி கேட்கப்படும் சந்தேகமாக இருக்கிறது.  ஒரு பணியாளர் வேலை செய்யாத காலத்தில், பி.எப் இல்லாத நிறுவனத்தில் வேலை செய்தாலோ,  மூன்று ஆண்டுகளுக்கு மட்டும் தான் வட்டியைக் கணக்கிட்டு தருகிறார்கள். அதற்கு பிறகு நிறுத்திவிடுகிறார்கள். இது சில ஆண்டுகளுக்கு முன்பு வந்த நடைமுறை.

 

இதில் பி.எப் நிதிக்கு மட்டும் தான் வட்டி தருகிறார்கள்.   பி.எப். ஓய்வூதிய கணகிற்கு வட்டி ஏதும் தருவதில்லை.  ஆகையால், தொழிலாளர்களுக்கு  ஓய்வூதியம் அவசியம் தேவைப்படுவதால் அந்த நிதிக்கு திட்டச் சான்றிதழுக்கு (Scheme Certificate) விண்ணப்பித்து வாங்கி வைத்துக்கொள்ளலாம்.  பி.எப் நிதியை வேண்டுமென்றால், வாங்கிக்கொள்ளலாம்.

 

வேறு நாட்டிற்கு சென்றாலும், இந்த திட்டத்தை அங்கு தொடரமுடியுமா? என்றார் ஒரு இளம் பணியாளர்.

 

இந்த திட்டம் இந்தியாவில் இயங்கும் நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்களுக்கானது. ஆகையால் இந்தியாவில் மட்டும் தான் செல்லுபடியாகும்.

 

ஒரு தொழிலாளி இந்த திட்டத்தில் இணையும் பொழுது, மேலே சொன்ன பலன்கள் உண்டு.  இதில் இணையாத பொழுது அவரும், அவருடைய குடும்பமும் பாதுகாப்பற்ற நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். ஆகையால் இந்த திட்டத்தில் இணைவது மிகவும் அவசியம் என பேசிவந்தேன்.

 

அடுத்தநாள் பேசும்  அதன் நிர்வாகியை தொடர்பு கொண்ட பொழுது பணியாளர்கள் இந்த திட்டத்தில் இணைய ஏற்பு தெரிவித்திருந்தார்கள். மகிழ்ச்சி.

 

உங்களுக்கும் இது போல கேள்விகள் இருந்தால், என்னுடைய வாட்சப் எண்ணுக்கு தட்டச்சு செய்தோ அது சிரமம் என்றால், குரலில் பதிந்து அனுப்புங்கள். பதிலளிக்கிறேன்.

 

இன்னும் வளரும்.

வணக்கங்களுடன்,

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, பி.எப், இ.எஸ்.ஐ ஆலோசகர்,

9551291721

GSTPS: "Updates in refund filing process for various refund categories" - S. Senthamilselvan, President, GSTPS

 


திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ”தொழில் உலகம்” – ஆகஸ்டு 2025 இதழில் “பணத்தை திரும்ப பெறும் வகைகளுக்கான செயல்முறையில் புதுப்பிப்புகள்” (Updates in refund filing process for various refund categories) தலைப்பில் ஜி.எஸ்.டி குறித்த கட்டுரைகளின் தொடர்ச்சியில் 46வது கட்டுரையாக எழுதியுள்ளார். 

தொழில் உலகம் இதழ் தமிழ்நாடு அரசு நூலகங்கள் அனைத்திற்கும் விநியோகிக்கப்படுகிறது என்பது முக்கிய செய்தி.

படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் பகிருங்கள். தேவையானவர்களுக்கு அனுப்புங்கள்.






- சு. செந்தமிழ்ச்செல்வன், 

தலைவர், 

GSTPS

9841226856


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety





GSTPS : TDS under GST - S. Senthamilselvan, President, GSTPS





















- GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


 

Friday, August 1, 2025

GSTPS : ஆறாவது பொதுக்குழு கூடியது! புதிய நிர்வாக குழு தேர்ந்தெடுக்கப்பட்டது!


சென்னை சேம்பர் ஆப் காமர்ஸ் அரங்கத்தில் கடந்த 26/07/2025 அன்று தமிழ்த்தாய்
வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது.

 


கடந்த ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. விவாதிக்கப்பட்டது.

 


கடந்த சில ஆண்டுகளாக சிறப்பாக செயல்பட்ட நிர்வாகிகளுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது.

 

நிர்வாகிகளுக்கான முன்மொழிதல்கள் நடைபெற்று ஏற்கனவே பொறுப்பில் இருந்த நிர்வாகிகள் புதிய பொறுப்புகளில் பதவியேற்றார்கள்.

 


தேர்தல் அலுவலராக தணிக்கையாளர் ஓம் பிரகாஷ் செயல்பட்டார்.

 

தலைவர்

திரு. செந்தமிழ்ச்செல்வன்

 

துணைத் தலைவர்

திரு. பாலாஜி அருணாச்சலம்

 

பொருளாளர்

திரு. சிவக்குமார்

 

செயலர்

திரு. செண்பகம்

 

(வெளியூரில் இருந்ததால், கலந்து கொள்ள முடியவில்லை. அதற்காக அவரிடம் ஒப்புதல் கடிதம் பெறப்பட்டது.)

 

இணைச் செயலர்

திரு. முத்தரசன்

 

செயற்குழு உறுப்பினர்கள்

திரு. செல்வராஜ்

திரு. பாலாஜி

திரு. சுந்தர்ராம்கல்யாண்

 

தேர்ந்தெடுக்கப்பட்ட இவர்கள் அனைவரும் மூன்று ஆண்டுகள் பதவியில் இருப்பார்கள்.

 

சொசைட்டியின் வளர்ச்சியை முன்னிட்டு, நிர்வாகிகள் குழுவை விரிவாக்கலாமே என உறுப்பினர்கள் தரப்பில் ஆலோசனை தெரிவித்த பொழுது... அதற்காக சேவைப்பணிக்குழு உருவாக்கப்பட இருப்பதாக தெரிவித்தார்கள். 

 


உறுப்பினர்களிடம் இருந்து தாங்களாகவே முன்வரலாம் என கேட்டுக்கொண்டதில்…

 

சேவைப் பணிக்குழு (Working Committee) என்ற பெயரில்.. நால்வர் முன்வந்தனர். தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

 Dr. வில்லியப்பன்

தணிக்கையாளர் திரு. சந்திரமெளலி,

(கவிஞர்) திரு. கைலாஷ் மூர்த்தி,

திரு. இராஜீ தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

 

மாணவர்களுக்கு ஜி.எஸ்.டி குறித்த அறிமுக வகுப்பை கடந்த ஜூன் மாதம் 2025 முன்னெடுத்ததும் வெற்றிகரமாக நிறைவேற்றியிருந்தது சிறப்பு.  அதை இன்னும் மெனக்கெடல்களுடன் தயாரித்து விளக்கியிருக்கவேண்டும் என தனது கருத்தைப் பதிவு செய்தார் உறுப்பினர் திரு. சொக்கலிங்கம். ஏற்றுக்கொள்ளப்பட்டது.

 


அடுத்து நாம் சில படிவங்களையும், 9, 9சி பிராடிக்கல் டெமோ வகுப்பு எடுப்பதற்கு.. நிர்வாகிகளோடு உறுப்பினர்கள் சிலரும் முன்வந்தது சிறப்பு.

 

Dr. வில்லியப்பன்

திரு. இராஜேஷ் கண்ணா, CA.,

திரு. சீனிவாசன்..

இன்னும் சிலர்.

 

தலைவர் செந்தமிழ்ச்செல்வன்கடந்து வந்த பாதை” குறித்து சொசைட்டி குறித்த அனுபவங்களை விரிவாக பகிர்ந்தார்.  இந்த சொசைட்டியை தனது அறிவாலும், அனுபவத்தாலும், பலரையும் அரவணைத்து செல்வதாலும், தமிழ்நாடு அளவில் பல்வேறு அசோசியேசன்களுடன் தொடர்பாலும், எல்லோருக்கும் வணிகம் குறித்த அறிவை கொண்டு சேர்க்கும் விரிந்த பார்வையிலும் தான் இந்த சொசைட்டி சிறப்பாக செயல்படுகிறது என்பதை நாம் அறிவோம்.


 

கடந்த ஆண்டு நிர்வாகிகள் தவிர்த்து... உறுப்பினர்கள் சிலர் பேச்சாளர்களாக உரையாற்றினார்கள். அவர்களை கெளரவிக்கும்விதமாக நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.

 


இந்த சொசைட்டி சிறியவர்கள் பெரியவர்கள் என பாராமல் சமமாக நடத்திவருவது சிறப்பானது. அதை நான் உணர்ந்துள்ளேன் என உறுப்பினர் திரு. விக்கி கூறினார்.

 


மேலும் நிர்வாகிகளோ, சேவை பணிக்குழுவோ மட்டும் வேலைகளை செய்யவேண்டும் என்பது இல்லாமல்.. ஆர்வமுள்ள, ஆற்றலுள்ள உறுப்பினர்களையும் ஈடுபடுத்தலாம் என பேசினார்.

 

நன்றி.

 

-         -  GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety