Monday, August 25, 2025

GSTPS : ”ஜி.எஸ்.டி பற்றி அதிகம் அறிந்து கொள்ளுங்கள்” - இரண்டாவது பதிப்பு வெளியிடப்பட்டது


திரு. செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் எழுதிய  ”ஜி.எஸ்.டி பற்றி அதிகம் அறிந்து கொள்ளுங்கள்” மேம்படுத்தப்பட்ட பதிப்பாகவும், இரண்டாவது பதிப்பாகவும் வெளிவந்ததை ஒட்டி, நேற்று  GSTPS  சார்பாக சென்னையில் நடைபெற்ற பட்டிமன்றத்தின் இடைவேளையின் பொழுது, வெளியிடப்பட்டது. சொசைட்டியின் உறுப்பினர் வழக்கறிஞர் சங்கர் கணேஷ் வெளியிட, உறுப்பினர் வழக்கறிஞர் நீலகண்டன் பெற்றுக்கொண்டார். 


முதல் பதிப்பு 1000 புத்தகங்களும் விற்றதற்கு உதவிய அனைவருக்கும் தலைவர் நன்றி தெரிவித்தார்.  இந்தப் புத்தகத்தின் உருவாக்கத்தில் நான் எவ்வளவு உழைத்தேனோ, அதே அளவிற்கு கோவை பெருமாள் அவர்களும் உழைத்தார் என நன்றி தெரிவித்தார்.



அவர் சார்பில் உதவியவர்களுக்கு நன்றி தெரிவிக்க சொசைட்டியின் உறுப்பினர் திரு. முனியசாமி பேசினார்.


”நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்களுடைய சில ஆண்டுகள் உழைப்பு இது. தொழில் உலகம், வணிகமணி போன்ற வணிக இதழ்களில் மாதந்தோறும் தொடர்ந்து எழுதி, தொகுத்து, கவனத்துடன் அப்டேட் செய்யப்பட்டு கொண்டு வந்தார். இது ஒரு மகத்தான பணி. மத்திய, மாநில அரசுகள் சேர்ந்து ஒரு குழுவை உருவாக்கி செய்து இருக்கவேண்டிய பணி. வரி ஆலோசகர்கள், வணிகர்களின் நலன் கருதி தமிழில் எளிமையான கேள்வி பதில் வடிவத்தில் கொண்டு வந்ததற்காக அவருக்கு முதலில் நாம் நன்றி சொல்லவேண்டும்.




பொருத்தமான பதிப்பகம் தேடியதில் கடந்த ஜனவரி புத்தக திருவிழாவில் மக்கள் பெருந்திரளாக இருந்த அரங்கில் மணிமேகலை பிரசுரம் நல்ல முறையில் தொகுத்து புத்தகம் வெளியிட்டார்கள். நமது உறுப்பினர்களும், நண்பர்களுமாக ஐம்பது பேருக்கு மேலாக கலந்துகொண்டோம். அவர்களுக்கு நன்றி.



நமது சொசைட்டி சார்பில் சேம்பர் ஆப் காமர்சில் ஒரு கூட்டம் ஏற்பாடு செய்தோம். அரங்கு நிறைந்த கூட்டம் அது. தலைவருடைய பள்ளி தோழர்களுக்கு உட்கார இடம் இல்லை. அதையே அவர்கள் பெருமையாக சொன்னார்களாம்.



நமது உறுப்பினர்கள் தங்களுக்கு மட்டுமில்லாமல், தங்களுடைய தொழில்முறை நண்பர்களுக்கு நிறைய வாங்கி பகிர்ந்தார்கள். திரு. சண்முகம் ஐந்து புத்தகங்கள் வாங்கினார். திரு. முருகன் ஆறு புத்தகங்கள் வாங்கினார்.



தமிழ்நாடு முழுவதும் நம்மைப் போல இயங்கிவரும் வரி ஆலோசகர்கள் அமைப்புகள் புத்தகங்களை வாங்கி விநியோகித்தார்கள்.  அதில் முக்கியமானவர் மதுரையைச் சேர்ந்த திரு. பூரண செல்வகுமார் தன் அலுவலகத்தில் வாங்கி வைத்து, நேரில் வருபவர்களுக்கும், தபால் வழியாகவும் அனுப்பிவைத்துக்கொண்டே இருந்தார். அவரே சில நூறு புத்தகங்கள் விற்பனை செய்து உதவியிருக்கிறார். அவருக்கு நன்றி.



திரு. நீலகண்டனும், அவர்களுடைய அமைப்பும் பாண்டியில் இந்திய அளவில் பங்கேற்பாளர்கள் கலந்துகொண்ட கருத்தரங்கு நடத்தும் பொழுது, நமது நிர்வாகிகள் அங்கு கலந்துகொண்டு, புத்தகத்தை அரங்கில் விற்பனை செய்ய உதவினார்கள். அவருக்கு நன்றி.



ஒருமுறை விளம்பரத்தில் என்னுடைய மொபைல் எண்ணும் வெளியாக, மீனம்பாக்கம் கிளம்பி முகப்பேர் மேற்கு வந்து சேர மூன்று மணி நேரம் ஆனது. தொடர்ச்சியாக அழைப்பு வந்தவண்ணம் இருந்தது. மகிழ்ச்சி.


தமிழ்நாடு முழுவதும், தணிக்கையாளர்கள், வரி ஆலோசகர்கள், கணக்காளர்கள், புரியும் விதத்தில் கேள்வி பதில் வடிவத்தில் இருப்பதால் வணிகர்களும் பரவலாக வாங்கியிருக்கிறார்கள்.



ஜனவரியில் 2025 புத்தகம் கொண்டு வரும் பொழுது, 570 பக்கம். 600 விலை. ஐநூறு புத்தகங்கள் விற்பனையாகுமா? என ஒரு சின்ன ஐயம் இருந்தது. தினமும் விசாரிப்புகள். தினமும் பார்சல்கள் அனுப்பப்பட்டன. ஆனால், பிப்ரவரி இறுதியிலேயே விற்று தீர்ந்தது.  இரண்டாவது முறையும் ஐநூறு புத்தகங்கள் அச்சிடப்பட்டன.



வரி ஆலோசகர்கள் மத்தியில் பரவலாக கொண்டு சேர்த்ததில் இதழ்களின் பங்கு அதிகம். தினகரன், தினத்தந்தி, தொழில் உலகம், தினமணி, தினமலர் இதழ்கள் புத்தகம் குறித்த அறிமுகம், விமர்சனம் என்ற அளவில் வெளியிட்டன. TN Headline சானல் புத்தகம் குறித்து சாரிடம் ஒரு பேட்டி வெளியிட்டது. அனைவருக்கும் நன்றி.

 


இப்பொழுது ஜூலை 2025 வரை கவனமாக அப்டேட் செய்யப்பட்டு, கூடுதலாக 40 பக்கங்கள் அதிகமானதால், மொத்தம் 610 பக்கங்களாக உருவாகியுள்ளது.  விலை ரூ. 640 என தீர்மானிக்கப்பட்டுள்ளது.


இந்தப் புத்தகம் இன்னும் சில ஆயிரம் புத்தகங்கள் விற்பனை செய்யவேண்டிய தேவை சமூகத்தில் இருக்கிறது. இன்னும் பலருக்கு நாம் தெரிவிப்பதன் மூலம் இந்த புத்தகத்தை பரவலாக கொண்டு சேர்க்கமுடியும்.



உதவிய அனைவருக்கும் நன்றி” என பேசினார்.


- GSTPS 

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment