பிரிவு : 48
விதி : 83(1) (2)(4)(6), 83-B
படிவங்கள் : GST PCT -1, 7
தகுதி : வணிகவியல் பட்டதாரி அல்லது அதற்கு தகுதியான தேர்வில் வெற்றி பெற்றவர். அரசின் வணிக வரித்துறையில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள். மத்திய கலால், சுங்க வாரியம், அரசிதழ் பதிவு பணியாற்றிய ஓய்வு பெற்றவர்கள்
விதிகள் :
இந்திய குடிமகனாக இருக்கவேண்டும். உளவியல் சார்ந்த நல்ல மன நலத்துடன் இருக்கவேண்டும்.
திவால் ஆனவராக இருக்ககூடாது.
நீதிமன்றத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் சிறை தண்டனை விதித்து தண்டிக்கப்படாதவராக இருக்கவேண்டும்.
கடமைகள் :
ஜி.எஸ்.டி போர்ட்டலில் ரிட்டன்கள் தாக்கல் செய்வது, ரீபண்ட் பெற என வாடிக்கையாளர் தொடர்பான அத்தனை வேலைகளையும் செய்யமுடியும்.
பதிவு செய்யும் முறை :
www.gst.gov.in போர்ட்டலில் அடிப்படையான விவரங்களான பெயர், பான் எண், மின்னஞ்சல் முகவரி, மொபைல் எண் கொடுத்து பதிவு செய்து பதிவு எண்ணைப் (Enrolment Number) பெறலாம்.
(வாடிக்கையாளர்கள் ஜி.எஸ்.டி தளத்தில் அருகில் உள்ள ஜி.எஸ்.டி தொழிலாற்றுநரை தேடும் பொழுது, அந்த பட்டியலில் நம் பெயரும் வந்துவிடும்.)
- ஜி.எஸ்.டி (GST) பற்றி அதிகம் தெரிந்துகொள்ளுங்கள் புத்தகத்திலிருந்து… பக் 442
(இங்கு சுருக்கப்பட்ட வடிவத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. புத்தகத்தில் விரிவாக தரப்பட்டுள்ளது)
No comments:
Post a Comment