சு. செந்தமிழ்ச் செல்வன்,
தலைவர்
- GSTPS
ஜிஎஸ்டி
தொழிலாற்றுநர் & பயிற்சியாளர்
கூலி வேலை என்றால் என்ன?
சிஜிஎஸ்டி சட்டம், 2017 இன் பிரிவு 2 (68) படி :
ஒரு நபர், ஒரு பதிவு செய்யப்பட்ட மற்றொரு நபருக்கு (முதல்வர்) சொந்தமான
பொருட்கள் மீது மேற்கொள்ளும் எந்தவொரு மாற்றம் அல்லது செயல்முறைக்கு (PROCESSING)“கூலி வேலை “ (ஜாப்
ஒர்க் )என்று பெயர். அந்த வேலை செய்பவருக்கு “கூலி வேலைசெய்யும் தொழிலாளி “ (ஜாப் ஒர்க்கர்
) என்று பெயர்.பொருட்களின்
உரிமையாளர்(அனுப்புபவர்) முதல்வர் என்று அழைக்கப்படுகிறார்
கூலி வேலை செய்பவரின் கடமை
என்ன ?
கூலி வேலை நடவடிக்கையில் பயன் படுத்தப் படும்பொருட்கள் மற்றொரு பதிவு செய்யப்பட்ட நபருக்கு சொந்தமானதாக இருக்க வேண்டும்; பொருட்களின் உரிமையை மாற்ற முடியாது.கூலி வேலை செய்யும் தொழிலாளி“ (ஜாப் ஒர்க்கர் )முதல்வரின் கட்டளைப்படி மாற்றம் அல்லது செயல்முறைகளை (PROCESSING)செய்ய வேண்டும்.
கூலி வேலை
செய்யும் (Job Worker) தொழிலாளிஜிஎஸ்டி
சட்டத்தில் பதிவு செய்ய வேண்டுமா ?
சேவை தொழில் புரியும் நபர்கள் பிரிவு 22 படி ஆண்டு வருமானம் ரூ இருபது லட்சத்தை தாண்டினால் ஜிஎஸ்டி சட்டத்தின் கீழ் பதிவு கண்டிப்பாக செய்ய வேண்டும்.
நுழைவாயில் வருமானத்தை தண்டா
விட்டாலும் பதிவு செய்து கொள்ளலாமா ?
பதிவு செய்வதற்கான நுழைவாயில் வருமானத்தை தண்டா விட்டாலும் இவர் பிரிவு 25(3) படி தானே முன்வந்து பதிவு செய்து கொள்ளலாம்.
கூலி வேலை செய்பவர் எப்பொழுது
பதிவு செய்ய வேண்டும் ?
மாநிலங்களுக்கு இடையேயான பொருள் அல்லது சேவை புரியும் தொழிலில் ஈடுபடுவோர் கண்டிப்பாக ஜிஎஸ்டி சட்டத்தில் வருமான வாரம்பு இல்லாமல் கண்டிப்பாக பதிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் மாநிலங்களுக்கு இடையேயான சேவைகளை செய்வோருக்கு இதிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ளது.
கூலிவேலைபற்றி முதல்வர்
அரசுக்கு தெரிவிக்க வேண்டுமா ?
முதல்வர்
அவருடைய அதிகார வரம்புக்கு உட்பட்ட
வரி அலுவலருக்கு கூலிவேலை செய்யும் தொழிலாளிக்கு அனுப்பப்படஉள்ள உள்ளீடுகள் பற்றிய விவரம், கூலி வேலை செய்யும் தொழிலாளியால் மேற்கொள்ளப்பட வேண்டிய செயலாக்கத்தின் தன்மை(processing), பிற வேலைத் தொழிலாளர்களின் விவரங்கள் போன்ற விவரங்களை முதல்வர் தெரிவிக்க வேண்டும்.
உள்ளீடுகள்/மூலதனப் பொருட்களை முதல்வர் அவரது வளாகத்திற்குக் கொண்டு வராமல் வேலை செய்யும் தொழிலாளிக்கு நேரடியாக அனுப்ப முடியுமா?
ஆம், வேலை செய்யும் தொழிலாளிக்கு பொருள்களை நேரடியாக அனுப்பலாம்.
கூலி வேலை செய்யும் பணிக்கு பொருள்களை எவ்வாறு அனுப்புவது ?
பொருட்கள் /உள்ளீடுகள், பாதி முடிக்கப்பட்ட பொருட்கள்(semi-finished goods )அல்லது மூலதனம் வேலைக்கான
பொருட்கள் வணிகத்தின் முக்கிய இடத்திலிருந்தும்,சப்ளையர் சப்ளை செய்யும்
இடத்திலிருந்து நேரடியாகவும் கூலி வேலை செய்யும் தொழிலாளியின் இடத்திற்கு அனுப்பலாம்.
அவ்வாறு அனுப்பும்போது Billed to என்று
முதல்வரின் முகவரியும் Shipped to என்று கூலி வேலை செய்யும் தொழிலாளியின்
முகவரியை குறிப்பிட வேண்டும்
பிரிவு 25 இன் கீழ் கூலி வேலை தொழிலாளி ஏற்கனவே பதிவு செய்யதவராக இருந்தால் அல்லது
அறிவிக்கப்பட்ட பொருட்களை வழங்குவதில் அதிபர் ஈடுபட்டிருந்தால் . கூலி வேலை
செய்பவரின் இடத்தை பதிவு செய்ய
தேவையில்லை
கூலி வேலை பணிக்கான கட்டணங்களின் மதிப்பை நிர்ணயிக்கும் நோக்கங்களுக்காகவிளக்கத்திற்கு (ii) சிஜிஎஸ்டி சட்டம், 2017 இன் பிரிவு 22படி முதல்வரால் வழங்கப்பட்ட பொருட்களின் மதிப்பு பதிவு செய்யப்பட்ட கூலி வேலை செய்யும் தொழிலாளியின் மொத்த வருவாயில் சேர்க்கப்படாது.
அவர் ஜிஎஸ்டி சட்டத்தில் பதிவு செய்வதற்காக அறிவிக்கபட்டுள்ள நுழைவாயில் மதிப்பிலும் இந்த தொகை சேர்க்க வேண்டிய அவசியம் இல்லை
கூலி வேலை செய்யும் தொழிலாளியின் வளாகத்தில் இருந்து நேரடியாக வழங்கப் படும் முதல்வரின் பொருட்கள் கூலி வேலை செய்யும் தொழிலாளியின் மொத்த விற்றுமுதலில் சேர்க்கப்படுமா?
இல்லை. இது முதல்வரின் மொத்த வருவாயில் சேர்க்கப்படும். இருப்பினும், கூலி வேலையை மேற்கொள்வதற்காக வேலை செய்பவர் பயன்படுத்தும் பொருட்கள் அல்லது சேவைகளின் மதிப்பு, கூலி வேலை செய்பவரால் வழங்கப்படும் சேவைகளின் மதிப்பில் சேர்க்கப்படும்.
கூலி வேலை செய்யும் ஒருவருக்கு வரி விதிக்கக்கூடிய நபர் அனுப்பப்படும் பொருட்கள் சப்ளையாகக் கருதப்படுமா ? மற்றும் அதற்கு ஜிஎஸ்டி விதிக்கப் படுமா ?
இல்லை. இது சப்ளையாக கருதப்படாது. , பிரிவு 43A இன் அடிப்படையில், பதிவுசெய்யப்பட்ட வரி விதிக்கக்கூடிய நபர் (முதல்வர்) கூலி வேலை செய்யும் பணியாளருக்கு பொருட்களை வழங்குவது, பொருட்களின் வழங்கலாக கருதப்படாது. கூலி தொழிலாளிக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு ஜிஎஸ்டி விதிக்கப் படாது.
கூலி வேலைப் பணிகளுக்கு பொருட்களை அனுப்புவதற்கு இ-வே பில் உருவாக்கப்பட வேண்டுமா?
ஆம். சிஜிஎஸ்டி விதிகளின் விதி 138ன் படி, 50,000/1,00,000/- ரூபாய்க்கு மேல் பொருள்களை அனுப்புவதற்கு பதிவு செய்யப்பட்ட ஒவ்வொரு நபரும் இ-வே பில் உருவாக்க வேண்டும்
முதல்வர் தன்னுடைய சொந்த வளாகத்திற்கு மீண்டும் பொருள்களைகொண்டு வராமல் கூலி வேலை செய்யும் தொழிலாளியின் வளாகத்தில் இருந்து நேரடியாக பொருட்களை வழங்க முடியுமா?
ஆம். ஆனால் வேலை செய்பவர் பதிவுசெய்யப்பட்டவராக இருக்க வேண்டும்அல்லது வேலை செய்யும் தொழிலாளியின் வணிக இடத்தை வேலை தரும் அதிபர் தனது கூடுதல் வணிக இடமாக பதிவு செய்து இருந்தால் மட்டுமே தொழிலாளியின் வளாகத்தில் இருந்து நேரடியாக பொருட்களை வழங்க முடியும்.
கூலி செய்யும் தொழிலாளிக்கு அனுப்பப்படும் பொருள்கள் மீதான உள்ளீட்டு வரியை திருப்பம் (ITC REVERSAL) செய்ய வேண்டுமா ?
ஒரு பதிவு செய்யப்பட்ட நபர் (முதல்வர் ) வரி செலுத்தாமல் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு, கூலி வேலை செய்யும் தொழிலாளிக்கு (ஜாப் ஒர்க்கர் )பொருள்களை / மூலதன பொருட்களை அனுப்பலாம். அதற்காக உள்ளீட்டு வரியை திருப்பம் (ITC REVERSAL) செய்ய வேண்டிய அவசியம் இல்லை .
கூலி வேலை செய்யும் (Job worker) தொழிலாளிக்கு வழங்கப்பட்ட பொருட்களின் மீது உள்ளீட்டு வரி வரவு பெற முடியுமா ?
சிஜிஎஸ்டி சட்டம், 2017 இன் பிரிவு 19 படி கூலி வேலை தொழிலாளியின் “ (ஜாப் ஒர்க்கர்) இடத்திற்கு முதல்வர் பொருள்கள் /உள்ளீடுகள் அல்லது மூலதன பொருட்களை தன் னுடைய இடத்திற்கு கொண்டுவராமல்நேரடியாக அனுப்பபட்ட வரி விதிக்கக்கூடிய பொருட்களுக்கு முதல்வர் உள்ளீட்டு வரி வரவு பெற முடியும், முதல்வர் அந்த பொருள்களை கூலி வேலை செய்யும் தொழிலாளி திரும்பி அனுப்பும் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை.
முதல்வர் உள்ளீட்டு வரி வரவை எப்போது திருப்பம் (reverse ) செய்ய வேண்டும் ?
கூலி வேலை செய்யும் தொழிலாளி வேலை செய்யும் போது, அவருடைய இடத்தில் முதல்வரின் பொருட்கள் சேதம் அடைந்தாலோ, காணாமல் போய்விட்டாலோ (அ) எதிர்பாராதவிதமாக அழிந்து போய்விட்டாலோ அந்த பொருட்களை அவர் முதல்வருக்கு திரும்பி கொடுக்க முடியாது. ஆகவே இதன் மதிப்பை கணக்கீட்டு முதல்வர் அதற்குரிய உள்ளீட்டு வரி வரவை பிரிவு 17(5)(h) படி திருப்பம் (reverse ) செய்ய வேண்டும்
கூலி வேலை செய்யும் பணியின் போது உருவாகும் கழிவுகளை எப்படி அகற்றுவது ?
கூலி வேலை செய்யும் பணியின் போது உருவாகும் கழிவுகளை சிஜிஎஸ்டி சட்டம், 2017 இன் பிரிவு 143 (5) இன் படி கூலி வேலை செய்யும் (ஜாப் ஒர்க்கர்) தொழிலாளி பதிவுபெற்ற நபராக இருந்தால் வரியை செலுத்தி அவருடைய இடத்திலிருந்து விற்பனை செய்யலாம். அவர் பதிவு பெறாத நபராக இருந்தால் முதல்வருக்கு கழிவுகளை திருப்பி அனுப்ப வேண்டும் அல்லது முதல்வர் கூலி வேலை செய்யும் இடத்திலிருந்து அவருடைய விலைப் பட்டியலை எழுப்பி அதற்குரிய வரியை வசூல் செய்து விற்பனை செய்யலாம்
குறிப்பிட்ட காலத்திற்குள் பொருள்களை பெறாவிட்டால் என்னவாகும்?
மூலதனம் மற்றும் உள்ளீட்டு பொருட்கள் முறையே 3 ஆண்டுகள் {பிரிவு 19(6) } மற்றும் 1 ஆண்டுகளுக்குள் பெறப்படாவிட்டால். இந்த பொருட்கள் முதலில் செல்லான் மூலம் வழங்கப்பட்ட தேதிகளிலிருந்து வழங்கலாகக் கருதப்படும், மேலும் அத்தகைய கருதப்பட்ட வழங்கல்களுக்கு வரி பொருந்தும். அந்த பொருட்கள் வழங்கப் பட்டபோது கொடுக்கப் பட்ட செல்லான்களே அத்தகைய வழங்கல்களுக்கு வழங்கப் பட்ட விலைப்பட்டியலாகக் கருதப்படும்
கூலி வேலை செய்பவதற்கான (ஜாப் ஒர்க்) நடைமுறை பற்றி விளக்கவும் ?
பொருட்களை செயலாக்கிய (processing) பிறகு, “கூலி வேலை தொழிலாளி “(ஜாப் ஒர்க்கர்) பொருட்களை கீழ்க்கண்ட காரணங்களுக்காக அகற்றலாம் :
a. மற்றொரு கூலி வேலை செய்பவருக்கு மேலும் பொருள்களில் மாற்றம் செய்து திருப்பி அனுப்புவதற்காக அனுப்பலாம் .
b. வரி செலுத்தாமல் முதல்வரின் எந்தவொரு வணிக இடத்திற்கும் பொருட்களை அனுப்பலாம் .
c. இந்தியாவில் வரி செலுத்தி பொருள்களை அகற்றலாம் அல்லது நிபந்தனைகளை பூர்த்தி செய்வதற்காக இந்தியாவுக்கு வெளியே ஏற்றுமதிக்கு வரி செலுத்தாமல் பொருட்களை அகற்றலாம் .
d. வேலையை கொடுக்கும் முதல்வர் . கூலி வேலை செய்பவரின் இடத்தை தனது கூடுதல் வணிக இடமாக பதிவு செய்து கொள்ளலாம் .
பதிவிலிருந்து விலக்கு அளிக்கப் பட்டுள்ள
எந்தகூலி வேலை தொழிலாளர்களுக்குவிலக்கு பொருந்தாது
?
கூலி வேலைத் தொழிலாளர்களுக்கு பதிவு செய்வதிலிருந்து அறிக்கை எண் 07/2017-ஒருங்கிணைந்த வரி,/ 14-09-2017 படி விலக்கு அளிக்கப் பட்டுள்ளது .
ஆனால் கீழ்க்கண்ட நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள கூலி வேலை தொழிலாளர்களுக்கு இந்த விதி பொருந்தாது;
·
விற்றுமுதல் (ரூ .20 / 10 லட்சம்) அடிப்படையில் பதிவு செய்ய வேண்டியவர்கள் அல்லது
·
தானாக முன்வந்து பதிவு செய்தவர்கள்
அல்லதுநகைகள், பொற்கொல்லர்கள்' மற்றும்
வெள்ளிப் பணியாளர்களின் பொருட்கள் மற்றும் சுங்க தீர்வை அத்தியாயம்
71 கீழ் வரும் பொருட்களை
தொடர்பாக சேவைகளை வழங்குவதில் ஈடுபட்டு உள்ளவர்கள்.
பதிவு செய்யப் படாத
முதவருக்கு, , ஒரு பதிவு செய்யப்
படாத கூலி வேலை செய்தால்
அவருடைய நிலை என்ன ?
பதிவு செய்யப் படாத முதவரிடமிருந்து , ஒரு பதிவு செய்யப் படாத கூலி வேலை செய்யும் தொழிலாளி பொருட்கள் பெற்று வேலை செய்தால் அவருடைய வருவாயில் இந்த தொகை சேர்க்கப்பட்டு , அவர் தன்னை பதிவு செய்து கொள்ளும் நிலைக்கு தள்ளப்படுவார்
கூலி வேலை செய்பவதற்கான ஜிஎஸ்டி
விகிதம் என்ன ?
ஜிஎஸ்டி சுற்றறிக்கை எண் :126/45/2019 இல், கூலி வேலைப் பணியின் கீழ் பதிவுசெய்யப்பட்டுள்ள அனைத்து வரி செலுத்துவோருகக்கும் 12% ஜிஎஸ்டி வசூலிக்கப்பட வேண்டும் என்றும், கூலி வேலை செய்பவதற்காக பணியின் கீழ் பதிவு செய்யப்படாத வரி
செலுத்துவோர் 18% ஜிஎஸ்டி
வீதத்தை செலுத்த வேண்டும்
வைர விநியோக கூலி வேலை செய்பவதற்கானமுந்தைய 5% இலிருந்து
1.5% ஜிஎஸ்டி
விகிதத்தில்குறைக்கப் பட்டுள்ளது
பொருட்களை இறக்குமதி செய்தப் பின், பொருட்களை துறைமுகத்திலிருந்து அனுப்பும் போது முதல்வர் விதி எண் : 55 படி ஒரு செல்லானுடன் அனுப்ப வேண்டும். செல்லானில் கீழ்க்கண்ட விவரங்கள் குறிப்பிடப்பட்டு இருக்க வேண்டும்
o
டெலிவரி செல்லானின் தேதி மற்றும் எண்
o பொருள் அனுப்புபவர் மற்றும் பெறுபவரின் பெயர், முகவரி மற்றும்
ஜி.எஸ்.டி.என் எச்எஸ்என் குறியீடு, விளக்கம் மற்றும் பொருட்களின் அளவு
o
வரி செலுத்தக்கூடிய மதிப்பு, வரி
விகிதம், வரி தொகை-
சிஜிஎஸ்டி , எஸ்ஜிஎஸ்டி , ஐஜிஎஸ்டி , யுடிஜிஎஸ்டி
தனித்தனியாக குறிப்பிட வேண்டும்
o
வழங்கல் இடம்மற்றும் கையொப்பம் .
கூலி வேலை தொழிலாளி பொருட்களை முதல்வருக்கு திருப்பி அனுப்ப வேண்டிய
நடைமுறை என்ன ?
1)கூலி வேலை முடிந்தபின், வேலை செய்யும் தொழிலாளி முதல்வருக்கு அவருடைய இடத்திற்கு பொருட்களை
டெலிவரி செல்லன் மூலம்
திருப்பி அனுப்புவர் . பொருட்களை
திருப்பி அனுப்பும்போது கூலி வேலை
செய்யும் தொழிலாளி
முதல்வரிடமிருந்து பொருள் அனுப்பும்போது வந்த செல்லனின் ஒரு நகலையும் இணைத்து அனுப்புவார். அதோடு அவருடைய கூலி
வேலைக்கான விலைப்
பட்டியலையும் அனுப்புவர்
கூலி வேலை செய்யும்
தொழிலாளி மற்றொரு கூலி வேலை செய்யும்தொழிலாளிக்கு பொருளை எப்படி
அனுப்புவது ?
கூலி வேலை
செய்யும் தொழிலாளி மற்றொரு கூலி வேலை செய்யும் தொழிலாளிகக்கு சிறு சிறு துண்டுகளாக பொருட்களை தனித்
தனியாக அனுப்பினாலோ (அ) முதல்வருக்கு அனுப்பினாலோ முதல்வர் முதலில் அனுப்பிய
செல்லனில் ஒப்புதல் பெற முடியாது. அதனால்
கூலி வேலை செய்யும் தொழிலாளி அதற்கென
தனியாக ஒரு செல்லான் தயாரித்து அதன் மூலம்
பொருட்களை அனுப்ப வேண்டும் .
மாதந்திர வருமான படிவத்தில் கூலி வேலை பற்றிய தகவலை
தெரிவிக்க வேண்டுமா ?
ü செல்லானின்
தகவல் விவரங்களை ஜி.எஸ்.டி.ஆர் -1படிவத்தில் காட்ட வேண்டும்
வேறு என்ன
படிவத்தில் தகவல்கள் தெரிவிக்க
வேண்டும் ?
கூலி வேலை
செய்யும்
பணியாளருக்கு ஒரு காலாண்டுகக்குஅனுப்பப்படும் உள்ளீடு / மூலதன பொருட்களின் தகவல்
விவரங்கள் படிவம் ஜிஎஸ்டி ஐடிசி - 4 மூலம் அடுத்த மாதம் 25 ஆம் தேதிக்குள் அல்லது அதற்கு முன் தெரிவிக்கப் பட வேண்டும்.
படிவம் ஜிஎஸ்டி ஐடிசி - 4 இல் என்ன விவரங்கள் முதல்வரால் தெரிவிக்கப் பட வேண்டும் ?
படிவம் ஜிஎஸ்டி ஐடிசி - 4 இல் முதல்வரால்
கொடுக்கப் பட வேண்டிய விவரங்கள் :
Ø ஒரு கூலி வேலை தொழிலாளிக்கு அனுப்பப்பட்ட பொருட்கள் அல்லது
Ø ஒரு கூலி வேலை தொழிலாளியிடமிருந்து பெறப்பட்ட பொருட்கள் அல்லது
Ø ஒரு கூலி வேலை தொழிலாளியிடமிருந்து இன்னொருவருக்கு அனுப்பப்படும் பொருட்கள்.
Ø ஒரு கூலி வேலை தொழிலாளியின் இடத்திலிருந்து வாடிக்கையாளருக்கு
நேரடியாக பொருட்கள் அனுப்பப்பட்ட விவரம்
Ø வேலை
பணிக்காக முதல்வரால் உருவாக்கப்பட்ட டெலிவரி சல்லன் விவரங்கள்படிவம் GSTR-1 இல்
வழங்கப்பட வேண்டும் (பொருட்கள் அல்லது சேவைகளின் வெளிப்புற வழங்கல் பற்றிய விவரம்
).
Ø சிஜிஎஸ்டி
சட்டம், 2017 இன்
பிரிவு 143 (2) இன் படி, பணியாளரிடம் இருக்கும் பொருள்கள் (உள்ளீடுகள்),கழிவு
/ ஸ்கிராப் அல்லது மூலதனப் பொருட்களுக்கான சரியான கணக்குகளை வைத்திருப்பதற்கான
பொறுப்பு முதல்வரையே சாரும்
கூலி வேலை தொழிலாளி மற்றும் முதல்வர் வெவ்வேறு மாநிலங்களில் இருந்தால் ஜிஎஸ்டி எவ்வாறு விதிக்கப் படும் ?
பதிவுசெய்யப்பட்ட கூலி வேலை தொழிலாளி மற்றும் முதல்வர் வெவ்வேறு மாநிலங்களில் இருக்கும்போதுகூலி வேலை தொழிலாளியின் இடத்திலிருந்து பொருட்கள் நேரடியாக அகற்றப்படும் போது: -
i) முதல்வர்(பொருட்களின் சப்ளையர்) மற்றும் பெறுநர் (பொருட்கள் வாங்குபவர் ) ஒரே மாநிலத்தில் உள்ளனர் ,என்றால் எஸ்ஜிஎஸ்டி மற்றும் சிஜிஎஸ்டி விதிக்கப்படும்
ii) முதல்வர் மற்றும் பெறுநர் (பொருட்கள் வாங்குபவர் )வெவ்வேறு மாநிலங்களில் இருந்தால், பெறுநர் கூலி வேலை தொழிலாளி இருக்கும் மாநிலத்தில் இருந்தாலும் ஐஜிஎஸ்டி வசூலிக்கப்படும்
கூலி வேலை செய்யும் தொழிலாளி (Job Worker) தான் முதல்வரிடமிருந்து பெற்ற பொருள்களை எவ்வளவு காலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டும் ?
கூலி வேலை செய்யும் தொழிலாளி (Job Worker) தான் முதல்வரிடமிருந்து பெற்ற பொருள்களை வேலைகளை முடித்தப் பின் ஒரு ஆண்டுக்குள் திருப்பி தர வேண்டும். மூலதன பொருட்களாக இருந்தால் மூன்று ஆண்டுக்குள் திருப்பி தர வேண்டும்.
பொருள்களை திருப்பி அனுப்புவதற்கான காலத்தை நீடிக்க முடியுமா ?
01/02/2019 முதல் தகுந்த காரணங்கள் இருந்தால் கமிஷனரின் அனுமதியுடன் இந்த காலவரம்பு பொருட்களுக்கு மேலும் ஒரு ஆண்டும், மூலதன பொருட்களாக இரண்டு ஆண்டுகளும் நீடிக்கலாம்.
பொருள்களை குறித்த காலத்திற்குள் திருப்பி அனுப்ப வேண்டிய விதி அழிய கூடிய பொருள்களான அச்சுகள், டைஸ் (moulds, dies) துணை சாதனங்கள் (ஜிக்ஸ்) மற்றும் பொருத்துதல்கள் (fixtures) அல்லது கருவிகள் (tools)ஆகிய பொருட்களுக்கு பொருந்தாது.
நன்றி : தமிழ் தொழில் உலகம், ஜூன், ஜூலை இதழில் வெளிவந்தது.
http://www.ttupublications.com/emagazine.php
No comments:
Post a Comment