தலைப்பை இன்னும் செழுமைப்படுத்தி, “தொழில்முறை அணுகுமுறையில், படிவம் ஒன்றில் வருமான வரித்தாக்கல் செய்வது எப்படி?” (Income Tax return filing – Professional approach – ITR1) என்பதை பிபிடி மூலம் அருமையாக விளக்கினார்.
யாரெல்லாம் வருமான வரித்தாக்கல் செய்யவேண்டும், தனிநபருக்கு, பெண்களுக்கு, மூத்த குடிமக்களுக்கு என்ன நிபந்தனை (Slab) என்பதையும், படிவம் ITR1 துவங்கி, ITR7 வரை யாருக்கெல்லாம் எந்த படிவம் பொருந்தும் என்பதையும் பறவை பார்வையில் விளக்கினார். மாற்றித் தாக்கல் செய்யும் பொழுது, அதனால் வரும் இழப்புகளையும் சொல்லி, சரியான படிவத்தை தெரிவு செய்வது அவசியம் என்பதை சுட்டிக்காட்டினார்.
பழைய வருமான வரித்திட்டத்தில் என்னென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன, புதிய வருமான வரித்திட்டத்தில் என்னென்ன சலுகைகள் தரப்பட்டுள்ளன, ஒவ்வொரு வருடமும் மாற்றிக்கொள்ளலாமா என்பதையும் ஒவ்வொரு தலைப்பு வாரியாக விளக்கினார்.
வருமான வரித்தாக்கல் செய்ய ஒருவரிடமிருந்து தனிநபர் விவரங்களை பெறும் பொழுது, ஒரு சரி பார்ப்பு பட்டியல் (Check List) தயாரித்து, அதன்படி கவனமாய் வாங்கிவிடுவது நல்லது. இல்லையெனில் கடைசி நேரத்தில் தடுமாறுவதை தவிர்க்கலாம் என்பதையும் விளக்கினார்.
எப்படி தாக்கல் செய்வது என்பதை ஒருவருக்கு தாக்கல் செய்தும் காண்பித்தார். இந்த மாதம் வருமான வரித் தாக்கல் குறித்த வகுப்புகளைத் தான் தொடர்ச்சியாக எடுக்க இருக்கிறோம். அந்த வரிசையில் இது முதல் கூட்டம் என்பதால், நிறைய கேள்விகளை நமது உறுப்பினர்களும், தமிழக அளவில் கலந்து கொண்ட மற்றவர்களும் கேட்டனர். எல்லாவற்றிக்கும் பதில் அளித்தார்.
இன்றைக்கு தணிக்கையாளர் தினம், ஜி.எஸ்.டி அமுலாக்கிய தினமும் கூட! இன்றைய தினத்தில் தான் வகுப்பு எடுத்தது சிறப்பு என தெரிவித்தார். இன்றைய தினத்தில் நமக்கு வகுப்பு எடுத்து, நம் சந்தேகங்களைத் களைந்த தணிக்கையாளர் பாலாஜி அவர்களுக்கும், கலந்து கொண்ட உறுப்பினர்களுக்கும், தமிழகத்தின் பிற பகுதிகளில் இருந்து கலந்துகொண்டவர்களுக்கும் நிர்வாக குழு உறுப்பினர் சிவக்குமார் நன்றி தெரிவித்தார். கூட்டம் நிறைவுற்றது.
- GSTPS
No comments:
Post a Comment