Monday, August 7, 2023

GSTPS : Classification of Goods & Services with case laws - S. Senthamilselvan, GST Consultant


நமது GSTPS மூலம் தொடர்ந்துஇணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம். இந்த வாரம் 117வது கூட்டமாக.... சனிக்கிழமையன்று (05/08/2023) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்தினோம்.

இந்த கூட்டத்தில் நமது GSTPS சொசைட்டியின் தலைவரான  சு. செந்தமிழ்ச்செல்வன்,  ஜிஎஸ்டி  தொழிலாற்றுநர் & பயிற்சியாளர், ”பொருட்கள் மற்றும் சேவைகளின் வகைப்பாடு  மற்றும் அது தொடர்பான வழக்குகள்” ( "Classification of Goods & Services with case laws")  தலைப்பில் உரையாற்றினார்.


பொதுவாக நாம் செய்யும் தொழிலில் HSN மற்றும் SAC எண்களை ஒவ்வொருமுறையும் சரிபார்ப்பது இல்லை. கொள்முதல் செய்யும் பொழுது என்ன எண் பயன்படுத்தி உள்ளார்களோ, அதையும் பயன்படுத்துவதையும் பெரும்பாலும், வழக்கமாக கொண்டிருக்கிறோம்.  இது முற்றிலும் தவறு.  ஒவ்வொருமுறையும் சரிபார்க்கவேண்டும். இல்லையெனில் எதிர்காலத்தில்  நமது நிறுவனம் இழப்புக்குள்ளாகும் நிலை ஏற்படும் என ஆரம்பித்து…


HSN, SAC எண்கள் அதன் கட்டமைப்பை எப்படி உருவாக்கியுள்ளார்கள்? 200க்கும் மேற்பட்ட நாடுகளில் எதற்காக ஒரே எண்ணை பயன்படுத்துகிறார்கள்? எப்படி விற்பனை வரி சதவிகிதத்தின் அடிப்படையில் வகைப்படுத்தியுள்ளார்கள் (Schedule) என்பதை விரிவாக விளக்கினார்.

இது சம்பந்தமாக புகழ்பெற்ற வழக்குகள் சிலவற்றை தேர்ந்தெடுத்து,  அதை பங்கேற்பாளர்களும் சிந்திக்கும் படி, கேள்விகள் கேட்டு, பதில் வாங்கி பிறகு, வழக்கில் நடந்த விவாதம் என்ன? தீர்ப்பு எப்படி அளித்தார்கள் என்பதை சுவைபட விவரித்தார்.


GSTPS உறுப்பினர்களும், இணைய வழிக் கூட்டம் என்பதால் தமிழகம் தழுவிய அளவிலும் பலரும் கலந்துகொண்டனர்.  இந்த தலைப்பை ஒட்டியும், பொதுவான சந்தேகங்களையும் கலந்துகொண்டவர்கள் கேட்டார்கள். தலைவர் எல்லாவற்றிக்கும் பதிலளித்தார்.  கூட்டத்தில் கலந்துகொண்ட அனுபவம் வாய்ந்தவர்களும் தங்களது கருத்துக்களையும், பதிலையும் தெரிவித்தார்கள்.


இந்தக் கூட்டத்தை பிபிடி மூலம் விளக்கினார். அதை இங்கே பகிர்கிறோம். கூட்டம் நடந்த பொழுது, பதிந்து இப்பொழுது யூடியூப்பிலும் வலையேற்றியுள்ளோம்.  அதற்கான சுட்டியையும் இங்கு பகிர்கிறோம்.


யூடியூப்பிற்கான சுட்டி :


https://www.youtube.com/watch?v=hyYOa_UrXyA&t=175s


 -         GSTPS

 

குறிப்பு : சொசைட்டியில் உறுப்பினராக இணையுங்கள். எங்களோடு இணைந்து பயணியுங்கள்.  சொசைட்டியில் சேர முதல் ஆண்டுக்கு ரூ. 2300. அடுத்தடுத்து வரும் ஆண்டுகளுக்கு ரூ. 2000 மட்டும்.


தொடர்பு
கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப்https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக்https://www.facebook.com/groups/792542932366102












































  

No comments:

Post a Comment