ஒவ்வொரு மாதமும் இறுதி சனிக்கிழமையன்று நமது உறுப்பினர்கள் (மட்டும்) நேரடியாக சந்தித்து கூட்டம் நடத்தி விவாதிப்பதின் தொடர்ச்சியாக இன்று (26/08/23) சென்னை ராயபுரத்தில் உள்ள அவ்வை அகாடமியில் கூடினோம்.
இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் துவங்கியது. நமது GSTPS உறுப்பினர் சென்னியப்பன் அவர்கள் சமீபத்தில் மறைந்தார். அவர் சம்பந்தப்பட்ட நினைவுகளை நமது பொருளாளர் செல்வராஜ் பகிர்ந்துகொண்டார். அனைத்து உறுப்பினர்களும் எழுந்து நின்று அஞ்சலி செலுத்தினோம்.
இன்றைய சிறப்புரையாக “Factories Act” சார்பாக , பேச வந்திருக்கும். திரு. சதீஷ்குமார் அவர்களைப் பற்றிய ஒரு அறிமுகத்தை நமது துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் உறுப்பினர்களுக்கு வழங்கினார். ராயல் என்பீல்டு நிறுவனத்தில் HR துறையில் பணிபுரிந்து வருகிறார்.
Inspector of Factories 1948 ஆண்டு சட்டத்தைப் பற்றி… பிபிடி வழியாக விரிவாக விளக்கினார்.
1. "தொழிற்சாலை" என இந்தச் சட்டம் என்ன வரையறை செய்கிறது?
2. ஒரு தொழிற்சாலை இந்த சட்டத்திற்குள் வருவதற்கு என்ன தகுதி வைத்திருக்கிறது?
3. ஒரு தொழிற்சாலையை, இயந்திரங்களை, இன்னபிற விசயங்களை எவ்வாறு பராமரிக்கவேண்டும்?
4. தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகள் என்னென்ன செய்துதரவேண்டும்?
5. இந்தச் சட்டத்தில் என்னென்ன உரிமைகள் தொழிலாளர்களுக்கு இருக்கின்றன?
என ஒவ்வொரு தலைப்பிலும் முக்கிய அம்சங்களை விரிவாக விளக்கினார்.
இடையிடையே பங்கேற்பாளர்களிடையே கேள்விகளை எழுப்பி, எழுப்பி விவாதித்தது ஆரோக்கியமாக இருந்தது. இடையிடையே நமது உறுப்பினர்கள் கேட்ட சில சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். தான் பணிபுரியும் இடத்தில் ஒரு தொழிலாளிக்கு விபத்து நடந்ததையும், அதை எப்படி எதிர்கொண்டோம் என்கிற அனுபவத்தையும் பகிர்ந்துகொண்டார். பிபிடியை பகிர்ந்துகொள்கிறேன். விரிவாக படித்துக்கொள்ளுங்கள் என தெரிவித்தார். அவருக்கு சொசைட்டி சார்பாக நன்றி தெரிவித்ததுடன், நினைவுப் பரிசு ஒன்றும் வழங்கப்பட்டது.
இடையே சூடான போலி, சமோசா, மிக்சர், சுவையான காபி வழங்கப்பட்டது. பிறகு கூட்டம் மீண்டும் சுறுசுறுப்பாக துவங்கியது.
நமது சொசைட்டி சார்பாக, மின்னிதழ் ஒன்றை நிர்வாகிகள் வெளியிட்டார்கள். நமது தலைவர் முதல் இதழை வெளியிட்டார்
நமது சொசைட்டி கடந்து வந்த பாதையை ஒரு பறவைப் பார்வையில் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் பகிர்ந்துகொண்டார்.
”சொசைட்டி துவங்கிய பொழுது, உறுப்பினர்களுக்காக மாதம் ஒரு கூட்டம். நேரடியாக சந்திப்போம். அதில் ஜி.எஸ்.டி குறித்த தலைப்புகளை விவாதிப்போம். சந்தேகங்களுக்கும் பதிலளிப்போம். அதற்கு பிறகு கொரானா வந்து உலகை குலுக்கிப் போட்டது. நாம் சுதாரித்து, கூட்டங்களை இணைய வழிக்கூட்டங்களாக (Zoom Meetings) வாரம் வாரம் தொடர்ந்து நடத்தினோம்.
வாட்சப் குழுக்களை இயக்கினோம். நமது தலைவர் தினமும் ஜி.எஸ்.டி தொடர்பான செய்திகளை, அப்டேட்களை, வழக்கு விவரங்களை பகிர்ந்துகொள்கிறார். நாமும் தெரிந்துகொள்கிறோம்.
அதற்கு பிறகு நமது சொசைட்டிக்கென ஒரு தளம் (http://gstprofessionalssociety.blogspot.com ) துவங்கினோம். அது வெற்றிகரமாக இயங்கிவருகிறது. பலரும் படித்து பயனடைந்துவருகிறார்கள். துவங்கிய இரண்டு மாதம் முடிவதற்குள்ளேயே 3000 பார்வைகளை தளம் தொட இருக்கிறது. தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களை பதிவு செய்து, யூடியூப்பில் வெற்றிகரமாக வலையேற்றியுள்ளோம். அதிலும் பலர் பதிவு (Subscribe) செய்துள்ளார்கள். பேஸ்புக்கிலும் நமது சொசைட்டியின் செய்திகளை பகிர்ந்துவருகிறோம்.
அதன் தொடர்ச்சியில்… இப்பொழுது மின்னிதழை (E Magazine) துவங்கியுள்ளோம். நிர்வாகிகள் கூட்டத்தில் பலமுறை விவாதித்து இருக்கிறோம். இந்த மாதம் கொண்டுவந்துவிடமென்று தலைவர் விரும்பினார்.
இந்த இதழை இன்று வெற்றிகரமாக கொண்டுவருவதற்காக நமது செயலர் பாலாஜி நேற்று விடிய விடிய வேலைப் பார்த்துள்ளார். மற்ற நிர்வாகிகளும் இதற்காக உழைத்திருக்கிறார்கள். குறிப்பாக சுந்தர்ராமன் கல்யாண் இதழுக்குரிய டிசைன் வேலைகளை சிறப்பாக வடிவமைத்துள்ளார். ஒரு கூட்டுழைப்பில் முதல் மின்னிதழ் வெளிவந்துள்ளது.
இந்த இதழ் நமக்கான இதழ். நாம் வாட்சப்பில் தொடர்ந்து ஜி.எஸ்.டி குறித்த அப்டேட்டுகளை தந்து வருகிறோம். அது நீரோடையில் ஓடுவது போல வாட்சப்பில் போய்விடுகிறது. அதை உறுப்பினர்களுக்கு நினைவில் தக்க வைக்க இந்த மின்னிதழ் உதவும்.
இந்த இதழின் ஆசிரியர் குழுவில் சொசைட்டியின் நிர்வாக குழு, செயற்குழு உறுப்பினர்கள் இருக்கிறார்கள். அவர்கள் இதில் சிறப்பாக பங்களித்தாலும், அனைத்து உறுப்பினர்களின் பங்களிப்பில் தான் இந்த இதழின் வெற்றி இருக்கிறது. ஜி.எஸ்.டி, வருமான வரி, இ.எஸ்.ஐ, பி.எப் என எல்லா துறை சார்ந்த பதிவுகளையும் எழுதலாம். சாத்தியமான அளவில் பலரும் பங்கேற்கவேண்டும். பேசுவதற்கு புதிய பேச்சாளர்கள் உருவானது போல, இனி புதிய எழுத்தாளர்களும் உருவாகவேண்டும். இந்த இதழ் குறித்து படித்து கருத்துகளை நிச்சயம் தெரிவியுங்கள். இதழை எப்படி மேம்ப்படுத்தலாம் என ஆலோசனைகளையும் தெரிவியுங்கள்.
இந்த இதழ் நம் உறுப்பினர்களுக்கு மட்டுமல்ல! வெளியிலும் நமது அலுவலக நண்பர்களுக்கு, தொழில்முறை நண்பர்களுக்கு நிச்சயம் பயன்படும். அவர்களுக்கும் அனுப்புங்கள். இதன் வழியே நிறைய புதிய உறுப்பினர்கள் நமது சொசைட்டியில் உறுப்பினராவார்கள் என உற்சாகமாக பேசி முடித்தார்.
தலைவர் செந்தமிழ்ச்செல்வன் பேசும் பொழுது, இந்த இதழ் கொண்டு வரவேண்டும் என தொடர்ந்து பேசிக்கொண்டிருந்தோம். இப்பொழுது நமது நிர்வாகிகள் கடும் உழைப்பு கொடுத்து அதைச் சாத்தியப்படுத்தியிருக்கிறார்கள். இந்த இதழை பரவலாக கொண்டு செல்வோம் என பேசினார்.
அடுத்த இதழுக்கு பெயர் கொடுங்கள் என கேட்டதும், Dr. வில்லியப்பன் அவர்கள் முன்வந்தது ஆரோக்கியமாக இருந்தது.
கடந்த முறை வாங்காதவர்களுக்கு சான்றிதழும், நினைவுப் பரிசும், ஐடி கார்டும் வழங்கப்பட்டன.
தமிழக அரசு வியாபாரிகளின், தொழில் செய்பவர்களின் குறைகளை கேட்பதற்கு சமீபத்தில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்திருந்தது. நாம் தினசரிகளிலும், ஊடகங்களிலும் இந்த செய்தியைப் பார்த்தோம். அந்த கூட்டத்தில் கலந்துகொண்டு, என்னென்ன விசயங்கள் விவாதிக்கப்பட்டன என்பதை குறித்துக்கொண்டு, முக்கிய அம்சங்கள் ஒன்று விடாமல், நமது உறுப்பினர் முத்து அவர்கள் உறுப்பினர்களோடு பகிர்ந்துகொண்டார். அவருடைய செயல் பாராட்டத்தக்கது.
இப்படி நம் துறை சார்ந்த தகவல்கள் எங்கு இருந்தாலும், சொசைட்டியின் சக உறுப்பினர்கள் அறிந்துகொள்ள தருவதை அனைவரும் வழக்கமாக்கி கொள்ளவேண்டும்.
நன்றியுரையுடன் கூட்டம் இனிதே நிறைவுற்றது.
- GSTPS
பின்குறிப்பு : Factories Act குறித்த பிபிடிகளையும்,
GSTPS யினுடைய மின்னிதழையும் தனித்தனி பதிவுகளாக விரைவில் வெளியிடுகிறோம்.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment