Wednesday, October 29, 2025

ஒரு வரி ஆலோசகருக்கு நேர மேலாண்மை அவசியம் ஏன்?


"அதிக வேலை செய்வதே திறமை அல்ல; சரியான வேலையை சரியான நேரத்தில் செய்வதே திறமை.” -  Harvard Business Review

***

வரி ஆலோசகரின் வாழ்க்கை காலக்கெடுவிற்குள் இருக்கிறது.  நெருக்கடியான சமயத்தில் தான் ஒரு நல்ல வரி ஆலோசகர் எப்படி திறம்பட செயல்படுகிறார் என அவரின் ஆற்றலை தெரிந்துகொள்ளமுடியும்.

 

சென்னையில் ஒரு தணிக்கையாளரை நானறிவேன்.  பலரும் இறுதி நாட்களில் பதைபதைப்பாய் இரவும் பகலும் வேலை செய்யும் பொழுது, அவர்  ஏதோ ஒரு நாட்டில் ஹாயாக சுற்றுலாவில் இருப்பார். இப்படி இந்தியாவின் கிழக்கு திசை நாடுகளில், வருடத்திற்கு இரண்டு சுற்றுலா என ஐம்பது நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். கடைசியாக ”வியட்நாம்” என தெரிவித்தார். அவருடைய அலுவலகத்திலுள்ள ஊழியர்களுக்கும் சுற்றுலா செல்வதற்கான விடுமுறையும், ஊக்க தொகையும் கொடுப்பார். (போகாவிட்டால், திரும்ப பெற்றுக்கொள்வார்)

 

உங்களுக்கும் பல அம்சங்கள் தெரியும். ஆகையால் எனக்கு புதிதாய் இருப்பதை மட்டும் பகிர்கிறேன்.

 

திட்டமிடுங்கள்

 

முதல் 30 நிமிடம்ஒரு நாளின் வேலைத் திட்டத்தை எழுதுவதற்காக ஒதுக்குங்கள். தினத்தைநோக்கத்துடன்தொடங்குங்கள்; பணிப் பட்டியலால் நிறைந்து அல்ல.

Digital calendar பயன்படுத்துங்கள்நினைவூட்டல்கள், மின்னஞ்சல் இணைப்புகள் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.

பணிகளை மூன்று பிரிவாகப் பிரியுங்கள்: அவசரம், முக்கியம், பிற வேலைகள்.

ஒவ்வொரு பணிக்கும் நேரக்கெடு நிர்ணயுங்கள்; முடிவில்லா பட்டியல்கள் மனஅழுத்தம் தரும்

மனநிலை ஆற்றலுடன் இயங்கும் நேரத்தை முக்கிய பணிக்காக ஒதுக்குங்கள் காலை ஆழம், மாலை எளிமை.

To-do list மட்டுமல்ல, “Not-to-do list” ஒன்றையும் வைத்திருங்கள்.

 

செயல்படுங்கள்

 

அளவுக்கு மீறிய “multitasking” தவிருங்கள்; கவனம் சிதறும்.

கவனச்சிதறல்களை குறையுங்கள்: மொபைல் அறிவிப்புகள், சமூக ஊடகங்கள், இடையூறுகள்.

வேலைகளை பகிர்ந்தளியுங்கள் (Delegation)நம்பத்தகுந்த குழுவினருக்கு பணிகளை ஒப்படையுங்கள்.

ஒழுங்கான ஆவண அமைப்பில் கவனம் கொள்ளுங்கள் — physical & digital இரண்டிலும்.

வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை “deep work session”வேலைகள் செய்ததை குறித்த சுய பரிசீலனை செய்யுங்கள்.

சில வேலைகளை “automation” மூலம் எளிதாக்குங்கள்; தொழில்நுட்பத்தை துணையாக்கி கொள்ளுங்கள்.

மற்றவர்களின் அழுத்தத்தில் அல்ல, நமது மதிப்புகளின் அடிப்படையில் நேரத்தை நிர்ணயிங்கள்.

 

ஓய்வெடுங்கள்

 

மாலை நேர “shutdown ritual”வேலை முடிந்த பின் தொழிலிலிருந்து மனம் விலகட்டும்.

நமது ஆற்றலை மதிப்பிடுங்கள்; சோர்வை மீறிச் செயல்படாதீர்கள்.

மறக்காமல் இருக்க குறித்துக் கொள்ளுங்கள்; மனம் நினைவிற்காக அல்ல, சிந்தனைக்காக.

டிஜிட்டலில் இருந்து இரவு 9 மணிக்கே விடுபடுங்கள்.  நிம்மதியாக 7 மணி நேரம் தூங்குங்கள்.  நல்ல ஓய்வு அடுத்த நாள் திட்டமிட்டபடி செயல்படுவதற்கான மூலதனம்.

 

”ஒரு நேர்த்தியான வரி ஆலோசகர் இரண்டு திசையிலும் திறமையானவர் துல்லியமாகவும், திசைதிருப்பாமலும் செயல்படுபவர்” . - Peter Drucker

 

-          இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், .எஸ்., ஆலோசகர்,

9551291721

Tuesday, October 28, 2025

ஒரு வரி ஆலோசகருக்கு Interpersonal and Communication Skills ஏன் அவசியம்?


“Communication works for those who work at it.” – John Powell

 

Interpersonal and communication skills என்பது பிறருடன் பயனுள்ள முறையில் பேசவும், கேட்கவும், புரிந்துகொள்ளவும் உதவும் திறன்கள். இதில் listening, empathy, clarity, மற்றும் respect போன்ற பண்புகளும் அடங்கும். ஒரு வரி ஆலோசகரின் பணியில் கணக்குகளும், சட்டங்களும் முக்கியம்ஆனால் அவை மனிதர்களுடன் தொடர்பு கொள்ளும் திறனுடன் இணைந்தால் தான் முழுமையடையும். இது வாய்மொழி, எழுத்து மற்றும் உடல்மொழி (body language) மூலமான தொடர்பாடலை உள்ளடக்கும்.

 

Harvard Business Review (2019) ஆய்வுப்படி, *தொழில்வெற்றியின் 85% பகுதி இத்தகைய திறன்களால் தீர்மானிக்கப்படுகிறது.*

 

வரி ஆலோசகர் தினசரி வாடிக்கையாளர்களோடு உரையாடுகிறார், அதிகாரிகளுடன் ஆவணங்களை பரிமாறுகிறார், மற்றும் நிதி விவரங்களை விளக்குகிறார். இத்தகைய சூழலில் தெளிவும் நம்பகத்தன்மையும் இல்லாவிட்டால், தவறான புரிதல்கள், தாமதங்கள், அல்லது வாடிக்கையாளர் இழப்புகள் ஏற்படும்.

 

மேலாண்மை நிபுணர் Peter Drucker கூறுவது போல்:

“The most important thing in communication is hearing what isn’t said.”

அதாவது, வாடிக்கையாளரின் *சொல்லாத கவலைகளையும் உணர்வது தான் உண்மையான தொடர்பின் கலை.*

 

American Psychological Association (APA, 2021) தரவுப்படி, ஒரு ஆலோசனையின் வெற்றியில் 70% பங்கு ஆலோசகரின் empathy மற்றும் active listening திறனால் ஏற்படுகிறது. அதேபோல், WHO (2022) கூறுகிறதுநல்ல தொடர்பாடல் மன அழுத்தத்தை 40% வரை குறைக்க முடியும்.

 

ஏன் அவசியம்?

 


வாடிக்கையாளரின் நம்பிக்கையைப் பெறுவதற்கு.

சட்ட மற்றும் நிதி விவரங்களை எளிதாக விளக்குவதற்கு.

குழு ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கு.

பிரச்சினைகளை சீராக தீர்க்கும் திறனை வளர்த்துக்கொள்வதற்கு.

 

*எப்படி வளர்த்துக்கொள்வது?*

 

1. Listening Skills – பிறர் பேசும்போது முழுமையாக கவனியுங்கள்; இடைமறிக்க வேண்டாம்.

2. Empathy – வாடிக்கையாளரின் உணர்ச்சியை புரிந்து அதற்கேற்ப பதிலளிக்கவும்.

3. Clarity in Expression – தொழில்நுட்ப வார்த்தைகளை எளிய மொழியில் சொல்ல பழகுங்கள்.

4. Feedback – வாடிக்கையாளர்களிடமிருந்து கருத்துகளை பெறுங்கள், உங்களின் தொடர்பை மேம்படுத்துங்கள்.

5. Continuous Learning – seminars, workshops, peer discussions மூலம் பயிற்சி பெறுங்கள்.

 

மனித உறவுகள் நம்பிக்கையால் கட்டப்படுகிறது; நம்பிக்கை, நல்ல தொடர்பாடலால் உருவாகிறது. ஒரு வரி ஆலோசகருக்கு இது வெறும் திறன் அல்லதொழில்முறை வாழ்வின் அடித்தளம்.

 

“Effective communication is 20% what you know and 80% how you feel about what you know.” – Jim Rohn

 

இந்த திறன்களை வளர்த்துக்கொள்வதே ஒரு வரி ஆலோசகரின் நீண்டகால வெற்றிக்கான முக்கிய விசையாகும்.

 

-இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,

உறுப்பினர், GSTPS

9551291721

GSTPS : நமது 45வது நேரடி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!


தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கப்பட்டது. தலைவர் தனது தொடக்க உரையில், “நம்முடைய உறுப்பினர்களை பேச்சாளர்களாக உருவாக்குவது நமது முக்கிய நோக்கம். இன்று திரு. விக்கி தானாக முன்வந்து வகுப்பு எடுக்க முனைந்திருப்பது சிறப்பு” எனக் கூறி அவரை பாராட்டினார்.


முதல் உரை:


“TCS – Under GST என்ற தலைப்பில் நமது உறுப்பினர் திரு. விக்கி அவர்கள் பிபிடி மூலம் விளக்கமளித்தார். குறிப்பாக ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் வணிகங்களில் TCS நடைமுறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.


அதனைத் தொடர்ந்து திரு. பாலாஜி அவர்கள் தனது நேரடி அனுபவங்களை பகிர்ந்து, TCS அமல்படுத்தலில் எதிர்கொண்ட நடைமுறை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 


நவம்பர் மாதத்தில் எத்தகைய தலைப்புகளில் வகுப்புகள் நடத்தலாம் என்ற விவாதத்தைத் தலைவர் தொடங்கினார். இதன்போது, “E-Way Bill Notices – பதிலளிக்கும் முறை” குறித்து ஒரு வகுப்பு வைக்கலாம் என திரு. சீனிவாசன் அவர்கள் பரிந்துரைத்தார். அதனைத் தொடர்ந்து Dr. வில்லியப்பன் அவர்கள் அதனுடன் தொடர்புடைய சில முக்கிய கேள்விகளையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். தலைவர், இதற்கான புதிய தலைப்புகள் குறித்தும் உறுப்பினர்கள் குழுவில் தங்கள் ஆலோசனைகளைப் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.


இடைவேளையில் … மழைக்கு இதமாக இனிப்பு, சூடான பஜ்ஜி, வடை, காபி என அனைவரும் மகிழ்ச்சியாக பகிர்ந்துண்டனர்.


இரண்டாவது தலைப்பாக….


“GSTR-9 – சமீபத்திய புதுப்பிப்புகள்” என்ற தலைப்பில் செயலர் திரு. செண்பகம் அவர்கள் விரிவாக விளக்கமளித்தார். GSTR-9 தாக்கல் செய்தால்தான் GSTR-9C தாக்கல் செய்ய இயலும் என்பதையும், அதில் உள்ள புதிய அம்சங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விரிவான பதில்கள் வழங்கப்பட்டன. உறுப்பினர்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.


திரு. செல்வராஜ் “புதிய ஆண்டை எதிர்நோக்கும் நிலையில், நமது சொசைட்டி சார்பாக பெரிய டைரி மற்றும் மாதாந்திர காலண்டர் வெளியீட்டுக்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறோம்” என அறிவித்தார். டைரி தயாரிப்புக்கான செலவினத்தை குறைக்கும் வகையில், உறுப்பினர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து விளம்பரங்களை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டார்.


இன்றைய கூட்டத்தில் வழக்கமாக வருபவர்கள் கூட சிலர் வரவில்லை. Tax Audit செய்யும் இறுதி வாரத்தில் இருக்கிறோம். மழைக்காலமும் கூட! நேரடிக் கூட்டத்தில் நாம் பகிரும் ஒவ்வொரு அனுபவமும், விவாதிக்கும் ஒவ்வொரு கேள்வியும், அனுபவங்களும், நமக்குள் ஏற்படும் நெருக்கமும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் தன்மையும் நம்மை சிறந்த வரி ஆலோசகராக உருவாக்குகின்றன. அதை நாம் இழக்ககூடாது என்பதை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.


- GSTPS 


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

ஜி.எஸ்.டி : கடந்த வந்த 8 ஆண்டுகள் சாதனையா? சோதனையா? – பட்டிமன்றத்தின் காணொளி

ஜி.எஸ்.டி : கடந்த வந்த 8 ஆண்டுகள் சாதனையா? சோதனையா? – பட்டிமன்றத்தின் காணொளி


ஜி.எஸ்.டியில் உள்ள சாதனைகளையும், சோதனைகளையும் பேச்சாளர்கள் பேசுவதை கேட்கும் பொழுது, கடந்து வந்த பாதைகளை அசை போட்டது போலவும் இருந்தது. நிறைய அம்சங்களை கற்றுக்கொள்ளவும் முடிந்தது.


நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பட்டிமன்ற காணொளியை நமது சானலில் பகிர்ந்துள்ளோம்.  தொழில்முறை நண்பர்களுக்கும் பகிருங்கள்.


https://youtu.be/cMIXe3DNK94?si=I0UrXH4kFBLrRYMd


கேளுங்கள். உங்கள் கருத்துகளையும் பகிருங்கள்.


நன்றி.


- GSTPS



தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Monday, October 27, 2025

வரி ஆலோசகர் – உடலும் மனமும் கவனிக்க வேண்டியது ஏன்?


நம் வாழ்க்கையில் நமது மூளை வேலை நேரமே அதிகம்.

கணக்கு பார்க்கும் போதும், சட்டம் பார்க்கும் போதும், வாடிக்கையாளரை சமாளிக்கும் போதும்எல்லாம் சிந்தனையையே உபயோகிக்கிறோம்.

உடல் சோர்ந்து போக ஆரம்பித்தால், மனமும்  இணைந்து உழல ஆரம்பிக்கும்.

 

நரம்பியல் நிபுணர் டாக்டர் சுந்தர் ராமன் சொல்கிறார்.

மூளை சரியாக செயல்பட தேவையானது தூக்கமும் இரத்த ஓட்டமும்.
நாம் முதலில் இதையே கவனிக்க வேண்டும்.”

அதாவது,
தூக்கம்மூளை தெளிவு
நடை/உடற்பயிற்சிமனம் சீரான நிலை

 

உடல் கவனிப்பது எப்படி?

 

  • தினமும் குறைந்தது அரை மணி நடை.
    இதனால் இரத்த ஓட்டம் சீராகி மூளை புத்துணர்ச்சி பெறும்.
  • உணவு நேரத்தை தவறாமல் செய்ய வேண்டும்.
    குறிப்பாக காலை/மதிய உணவை skip செய்வது
    மாலை நேரத்தில் எரிச்சல் + கவனம் குறைவு உருவாக்கும்.
  • நாற்காலி, மேசை உயரம் சரியாக இருக்க வேண்டும்.
    முதுகு, கழுத்து வலி வந்தால்
    வேலையின் தரம் தான் முதலில் பாதிக்கப்படும்.

 

உட்கரு மருத்துவ நிபுணர் டாக்டர் எம். சண்முகம் சொல்வார்:

உடல் நோய்கள் பெரும்பாலும் சிறு அலட்சியங்களில் தொடங்கும்.
அலட்சியத்தை குறைத்தால் மருந்து தேவையும் குறையும்.”

 

மன நலன் காப்பது எப்படி?


  • ஒரு நாளில் குறைந்தது 10 நிமிடம் அமைதியான மூச்சு பயிற்சி.
    இது மனதில் இருக்கும்அசைவுநிதானமாகும்.
  • வேலைக்கு நேரம், வீட்டுக்கு நேரம்இரண்டுக்கும் எல்லை.
    எல்லை இல்லாத இடத்தில் தான் சோர்வு உருவாகும்.
  • கடினமான வாடிக்கையாளர்களுக்கு தெளிவான வரம்பு.
    மரியாதையுடன், “நாம் பேசும் நேரத்தில் பேசலாம்என்று சொல்லலாம்.

 

உளவியல் ஆய்வாளர் டாக்டர் கண்ணப்பன் குறிப்பிடுகிறார்:

மன அழுத்தம் என்பது நிகழ்வுகளில் இல்லை;
அதை எப்படிப் புரிந்துகொள்கிறோம் என்பதில் உள்ளது.”

 

வாழ்க்கை சமநிலை


வரி கோப்பு, நிதி அறிக்கை, AO பதில்இவை எல்லாம் வாழ்க்கையின் ஒரு பகுதி.

ஆனா வாழ்க்கை முழுக்க இதல்ல.

குடும்பம், உடல், மன அமைதிஇவை அடிப்படை.

விக்டர் ஃப்ராங்கிள் சொன்னார்:

மனிதனுக்கு மகிழ்ச்சியை கொடுக்கும் துறைகள்
உறவு, நோக்கம், அமைதி.
வேலை அதில் ஒன்று மட்டும்.”

 

சாரமாக….

  • தூக்கம்மூளை தெளிவு
  • நடை / சிறு உடற்பயிற்சிமன அமைதி
  • உணவு + நீர்உடல் நிலை
  • வேலைவாழ்க்கை எல்லைநீண்டநாள் நலம்

 

நாம் பல காலம் புத்துணர்ச்சியுடன் வேலை செய்ய வேண்டி இருக்கிறது.
அதற்காக நாம்  நம்மை பாதுகாத்துக்கொள்ளவேண்டும்.

 

-         - இரா. முனியசாமி,

9         9551291721