(வரி ஆலோசகர்கள் & தணிக்கையாளர்களுக்கான ஒரு ஆலோசனை)
வெறும்
“தொடர்ந்து செயலாற்றுவது” அல்ல.
ஒரே திசையில், இடைவிடாமல், ஒரே மனநிலையுடன்
ஆனால் உண்மையில் மேம்பாடு ஏற்படுவது தொடர்ச்சி செயலாற்றுவது.
நாம் தினமும் கற்க, செயல்பட, மேம்பட முயற்சி செய்கிறோம். கொடுக்கும் பொழுதுதான்.
தண்ணீரின் பாடம்
தண்ணீரை சுட
வைக்கிறோம்.
10% வரை
வெப்பம் ஏறுகிறது.
“சரி…
கொஞ்சம் ஓய்வு”
என்று
அடுப்பை அணைக்கிறோம்.
பின்னர் மீண்டும் 20% வரை
சூடு.
மீண்டும் நிறுத்துகிறோம்.
இப்படி
தொடர்ந்தால், தண்ணீர் எப்படியிருக்கும்?
அது
குழப்பத்தில் நம்மை
நோக்கிப் பார்க்கும் போல:
“அய்யா, நீயே
முடிவு
பண்ணுங்கப்பா…
நான்
வெப்பமா இருக்கனுமா? குளிரமா இருக்கனுமா?
என்ன
நிலை?”
தண்ணீர் ஒருபோதும் ஆவியாகாது.
ஏனெனில் அடுத்த நிலைக்கு செல்ல வெப்பம் இடைவிடாமல் சேர வேண்டும்.
“Heat applied continuously
transforms water into steam.
Effort applied continuously transforms a human into a master.”
அதே
மனித
வாழ்க்கை.
நாம்
சில
நாட்கள் தீயாய்
உழைக்கிறோம்.
பின்
தளர்வடைகிறோம்.
மீண்டும் எழுகிறோம்.
அப்படி
இருந்தால் அறிவு வெப்பமடையும்; ஆனால் ஒருநாளும் ஆவியாகாது.
மாற்றமடையாது. மேம்பட்ட
நிலையை எப்பொழுதும் தொடவே மாட்டோம்!
வரி ஆலோசகர் / தணிக்கையாளர் வாழ்க்கையில் Consistency ஏன் அவசியம்?
நம்
துறையில்:
- சட்டம் மாறும்
- சுற்றறிக்கை
வரும்
- வழக்குகள்
தீர்ப்புகள் வரும்
- நடைமுறைகள்
மாறும்
நாம்
ஒரு வாரம் படித்து,
அடுத்த
வாரம்
Gap கொடுத்துவிட்டால்,
மூன்றாம் வாரம்
நம்மாலே நம்மை
கேட்க
நேரிடும்:
“இது நான்
படித்ததா?
இல்லே…
வேறு
யாரோ
படிச்சதுபோல இருக்கிறதே!”
Consistency இருந்தால்:
Google நமக்கு
உதவியாளர்.
Consistency இல்லையெனில்:
Google நமக்குப் பேராசிரியர்.
*ஒரு நிபுணர் உருவாவது எப்படி?*
ஒரு
விதை
நட்டவுடன் நிழல்
தருமா?
இல்லை.
தினமும்:
- கொஞ்சம் நீர்
- கொஞ்சம் சூரியன்
- கொஞ்சம் பொறுமை
- கொஞ்சம் கவனம்
இதுவே
மரத்தை
வேரூன்றி வலுவாக்குகிறது.
அதேபோல் நிபுணத்துவம்:
மெல்ல.
ஆழமாக.
நிலையாக இருத்தல்
வேண்டும்.
*எதை நம்மை தொடர விடாமல் தடுக்கிறது?*
- WhatsApp உரையாடல்கள்
- Status பார்க்கும் anthropology research
- YouTube “Just 5 minutes” (அது 2 மணி நேரம் ஆகிவிடும்)
- சோம்பேறித்தனம்
full HD
- “இப்போ rest பண்ணலாம்… Life ஒரு race இல்ல” என்ற சமாதானம்.
இந்தக்
குரல்
கேட்க
இதமாக இருக்கும்.
அதையெ செய்தால் சரிவு நிச்சயம்.
நம்முள் ஒரு குரல் இருக்கும்:
“ஓய்வு எடுக்கலாம்
ஆனால்
நிற்கக்கூடாது.”
அது
தான்
உண்மை.
*Consistency
உருவாக்க 5 எளிய வழிகள்*
- நிரந்தரமாக
நேரம் ஒதுக்கி செய்வது:
தினமும் ஒரே நேரம் படிப்பு / ஆழமான வேலை. - சிறு
இலக்குகள்:
பெரிய மலைக்கு ஏறும்போது கூட,
ஒரு அடிதான் முதல் அடி. - வாராந்திர
சுய மதிப்பீடு:
“நான் முன்னேறினேனா? எங்கே தடுமாறினேன்?” - பரிமாணத்தை
அல்ல, செயல்முறையை நேசி:
நீ கற்கும் செயலையே ரசித்தால் — அது தானே உன்னை இழுத்துச் செல்லும். - சிறு
வெற்றிகளை கவனிக்க:
அவை தானே தொடர உந்துதலைக் கொடுக்கும்.
இறுதியாக…
Consistency என்பது அழுத்தம்
(pressure) இல்லை.
அது
தினசரி செய்வது (Practice)
தண்ணீர் 100°C வரை வெப்பம் அடைந்தால் மட்டுமே
அது ஆவியாகி வானத்தைத் தொடும்.
அதேபோல
மனிதன்
தொடர்ச்சியான முயற்சியால் மட்டுமே
அவர் நிபுணத்துவம் அடைய முடியும்!
“If you are persistent, you will get
it.
If you are consistent, you will keep it.”
பொது உண்மை:
தளரலாம்.
ஆனால் நிற்கக் கூடாது.
- - இரா. முனியசாமி.
9551291721

No comments:
Post a Comment