"அதிக வேலை செய்வதே திறமை அல்ல; சரியான வேலையை சரியான நேரத்தில் செய்வதே திறமை.” - Harvard Business Review
***
வரி ஆலோசகரின்
வாழ்க்கை காலக்கெடுவிற்குள் இருக்கிறது. நெருக்கடியான சமயத்தில் தான் ஒரு நல்ல
வரி ஆலோசகர் எப்படி திறம்பட செயல்படுகிறார் என அவரின் ஆற்றலை
தெரிந்துகொள்ளமுடியும்.
சென்னையில்
ஒரு தணிக்கையாளரை நானறிவேன். பலரும் இறுதி
நாட்களில் பதைபதைப்பாய் இரவும் பகலும் வேலை செய்யும் பொழுது, அவர் ஏதோ ஒரு நாட்டில் ஹாயாக சுற்றுலாவில்
இருப்பார். இப்படி இந்தியாவின் கிழக்கு திசை நாடுகளில், வருடத்திற்கு இரண்டு
சுற்றுலா என ஐம்பது நாடுகளுக்கு பயணம் செய்திருக்கிறார். கடைசியாக ”வியட்நாம்” என
தெரிவித்தார். அவருடைய அலுவலகத்திலுள்ள ஊழியர்களுக்கும் சுற்றுலா செல்வதற்கான
விடுமுறையும், ஊக்க தொகையும் கொடுப்பார். (போகாவிட்டால், திரும்ப
பெற்றுக்கொள்வார்)
உங்களுக்கும்
பல அம்சங்கள் தெரியும். ஆகையால் எனக்கு புதிதாய் இருப்பதை மட்டும் பகிர்கிறேன்.
திட்டமிடுங்கள்
முதல் 30 நிமிடம் — ஒரு நாளின் வேலைத் திட்டத்தை எழுதுவதற்காக ஒதுக்குங்கள். தினத்தை “நோக்கத்துடன்” தொடங்குங்கள்; பணிப் பட்டியலால் நிறைந்து அல்ல.
Digital calendar பயன்படுத்துங்கள்
— நினைவூட்டல்கள், மின்னஞ்சல் இணைப்புகள் சேர்த்து வைத்துக்கொள்ளுங்கள்.
பணிகளை மூன்று பிரிவாகப் பிரியுங்கள்: அவசரம், முக்கியம், பிற வேலைகள்.
ஒவ்வொரு பணிக்கும் நேரக்கெடு நிர்ணயுங்கள்; முடிவில்லா பட்டியல்கள் மனஅழுத்தம் தரும்
மனநிலை ஆற்றலுடன் இயங்கும் நேரத்தை முக்கிய பணிக்காக ஒதுக்குங்கள் காலை ஆழம், மாலை எளிமை.
To-do list மட்டுமல்ல, “Not-to-do list” ஒன்றையும் வைத்திருங்கள்.
செயல்படுங்கள்
அளவுக்கு மீறிய “multitasking” தவிருங்கள்; கவனம் சிதறும்.
கவனச்சிதறல்களை குறையுங்கள்: மொபைல் அறிவிப்புகள், சமூக ஊடகங்கள், இடையூறுகள்.
வேலைகளை
பகிர்ந்தளியுங்கள் (Delegation) — நம்பத்தகுந்த குழுவினருக்கு பணிகளை ஒப்படையுங்கள்.
ஒழுங்கான ஆவண அமைப்பில் கவனம் கொள்ளுங்கள் — physical & digital இரண்டிலும்.
வாரம் ஒரு முறை அல்லது மாதம் இருமுறை “deep work session” — வேலைகள் செய்ததை குறித்த சுய பரிசீலனை செய்யுங்கள்.
சில வேலைகளை “automation” மூலம் எளிதாக்குங்கள்; தொழில்நுட்பத்தை துணையாக்கி கொள்ளுங்கள்.
மற்றவர்களின் அழுத்தத்தில் அல்ல, நமது மதிப்புகளின் அடிப்படையில் நேரத்தை நிர்ணயிங்கள்.
ஓய்வெடுங்கள்
மாலை நேர “shutdown ritual” — வேலை முடிந்த பின் தொழிலிலிருந்து மனம் விலகட்டும்.
நமது ஆற்றலை மதிப்பிடுங்கள்; சோர்வை மீறிச் செயல்படாதீர்கள்.
மறக்காமல்
இருக்க குறித்துக் கொள்ளுங்கள்; மனம் நினைவிற்காக அல்ல, சிந்தனைக்காக.
டிஜிட்டலில்
இருந்து இரவு 9 மணிக்கே விடுபடுங்கள்.
நிம்மதியாக 7 மணி நேரம் தூங்குங்கள்.
நல்ல ஓய்வு அடுத்த நாள் திட்டமிட்டபடி செயல்படுவதற்கான மூலதனம்.
”ஒரு
நேர்த்தியான வரி
ஆலோசகர் இரண்டு
திசையிலும் திறமையானவர் துல்லியமாகவும், திசைதிருப்பாமலும் செயல்படுபவர்” . - Peter Drucker
-
இரா.
முனியசாமி,
ஜி.எஸ்.டி, வருமானவரி, பி.எப், இ.எஸ்.ஐ, ஆலோசகர்,
9551291721

No comments:
Post a Comment