Tuesday, October 28, 2025

GSTPS : நமது 45வது நேரடி கூட்டம் சிறப்பாக நடைபெற்றது!


தமிழ்த்தாய் வாழ்த்துடன் கூட்டம் தொடங்கப்பட்டது. தலைவர் தனது தொடக்க உரையில், “நம்முடைய உறுப்பினர்களை பேச்சாளர்களாக உருவாக்குவது நமது முக்கிய நோக்கம். இன்று திரு. விக்கி தானாக முன்வந்து வகுப்பு எடுக்க முனைந்திருப்பது சிறப்பு” எனக் கூறி அவரை பாராட்டினார்.


முதல் உரை:


“TCS – Under GST என்ற தலைப்பில் நமது உறுப்பினர் திரு. விக்கி அவர்கள் பிபிடி மூலம் விளக்கமளித்தார். குறிப்பாக ஸ்விக்கி, ஜொமாட்டோ போன்ற ஆன்லைன் வணிகங்களில் TCS நடைமுறைகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதையும் எடுத்துக்காட்டுகளுடன் விளக்கினார்.


அதனைத் தொடர்ந்து திரு. பாலாஜி அவர்கள் தனது நேரடி அனுபவங்களை பகிர்ந்து, TCS அமல்படுத்தலில் எதிர்கொண்ட நடைமுறை அனுபவங்களை பகிர்ந்துகொண்டார். 


நவம்பர் மாதத்தில் எத்தகைய தலைப்புகளில் வகுப்புகள் நடத்தலாம் என்ற விவாதத்தைத் தலைவர் தொடங்கினார். இதன்போது, “E-Way Bill Notices – பதிலளிக்கும் முறை” குறித்து ஒரு வகுப்பு வைக்கலாம் என திரு. சீனிவாசன் அவர்கள் பரிந்துரைத்தார். அதனைத் தொடர்ந்து Dr. வில்லியப்பன் அவர்கள் அதனுடன் தொடர்புடைய சில முக்கிய கேள்விகளையும் தனது அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டார். தலைவர், இதற்கான புதிய தலைப்புகள் குறித்தும் உறுப்பினர்கள் குழுவில் தங்கள் ஆலோசனைகளைப் பகிருமாறு கேட்டுக்கொண்டார்.


இடைவேளையில் … மழைக்கு இதமாக இனிப்பு, சூடான பஜ்ஜி, வடை, காபி என அனைவரும் மகிழ்ச்சியாக பகிர்ந்துண்டனர்.


இரண்டாவது தலைப்பாக….


“GSTR-9 – சமீபத்திய புதுப்பிப்புகள்” என்ற தலைப்பில் செயலர் திரு. செண்பகம் அவர்கள் விரிவாக விளக்கமளித்தார். GSTR-9 தாக்கல் செய்தால்தான் GSTR-9C தாக்கல் செய்ய இயலும் என்பதையும், அதில் உள்ள புதிய அம்சங்களையும் தெளிவாக எடுத்துரைத்தார். உறுப்பினர்களின் கேள்விகளுக்கும் விரிவான பதில்கள் வழங்கப்பட்டன. உறுப்பினர்கள் ஏதேனும் சந்தேகம் இருந்தால் அவரை தொடர்பு கொள்ளுங்கள்.


திரு. செல்வராஜ் “புதிய ஆண்டை எதிர்நோக்கும் நிலையில், நமது சொசைட்டி சார்பாக பெரிய டைரி மற்றும் மாதாந்திர காலண்டர் வெளியீட்டுக்கான பணிகள் விரைவில் தொடங்க இருக்கிறோம்” என அறிவித்தார். டைரி தயாரிப்புக்கான செலவினத்தை குறைக்கும் வகையில், உறுப்பினர்கள் தங்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து விளம்பரங்களை பெற்று தருமாறு கேட்டுக்கொண்டார்.


இன்றைய கூட்டத்தில் வழக்கமாக வருபவர்கள் கூட சிலர் வரவில்லை. Tax Audit செய்யும் இறுதி வாரத்தில் இருக்கிறோம். மழைக்காலமும் கூட! நேரடிக் கூட்டத்தில் நாம் பகிரும் ஒவ்வொரு அனுபவமும், விவாதிக்கும் ஒவ்வொரு கேள்வியும், அனுபவங்களும், நமக்குள் ஏற்படும் நெருக்கமும், ஒருவருக்கொருவர் உதவிக்கொள்ளும் தன்மையும் நம்மை சிறந்த வரி ஆலோசகராக உருவாக்குகின்றன. அதை நாம் இழக்ககூடாது என்பதை உறுப்பினர்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.

நன்றி.


- GSTPS 


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

No comments:

Post a Comment