கடந்த (22/07/2023) சனிக்கிழமையன்று
நமது GSTPS சார்பில் சென்னையில் உள்ள இந்துஸ்தான் சாம்பர் ஆம் காமர்ஸ் அரங்கத்தில் மதியம் தமிழ்த்தாய் வாழ்த்துடன் திரளான நமது உறுப்பினர்களுடன் இனிதே துவங்கியது.
நமது
செயலர் பாலாஜி அவர்கள் அனைவரையும் வரவேற்று பேசினார். இன்றைக்கு
நமது கூட்டத்திற்கு சிறப்பு பங்கேற்பாளராக பங்கேற்ற கோவையைச் சார்ந்த திரு. பெருமாள் அவர்களையும் சிறப்பாக வரவேற்றார்.
நமது
தலைவர் செந்தமிழ்ச் செல்வன் அவர்கள் அவரைப் பற்றிய அறிமுகமாக பேசும் பொழுது “பெருமாள்
அவர்களைப் பற்றிய அறிமுகம் நமக்கு அனைவருக்கும் உண்டு. நமது
இணைய வழிக் கூட்டங்களில் (Zoom) தொடர்ந்து பங்கேற்று தனது
கருத்துக்களை பகிர்ந்துகொண்டு இருக்கிறார். கோவையில்
வரி ஆலோசகராக பணியாற்றி வருகிறார். ஜி.எஸ்.டி,
பி.எப், இ.எஸ்.ஐ,
வருமான வரி குறித்து புதியவர்களுக்கும் பல ஆண்டுகளாக வகுப்புகள்
நடத்தி வருகிறார். தான்
பணியாற்றும் துறையில் எந்த கேள்விகளை எப்பொழுது கேட்டாலும், சரளமாகவும், தெளிவாகவும், உடனடியாகவும் பதில் சொல்லக்கூடிய ஆற்றலுடையவர். இவரைப்
போலவே பல ஆண்டுகள் அனுபவம்
பெற்ற வரி ஆலோசகர் சேது அவர்களுடன் இணைந்து PS அகாடமி ஒன்றை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவர் கவிஞராகவும் இருக்கிறார். தொலைக்காட்சிகளில் தொடர்ந்து உரையாற்றியும் வருகிறார். துறை
சார்ந்த புத்தகங்களையும் தொடர்ந்து எழுதி வருகிறார் ” என பேசினார்.
உறுப்பினர்கள்
கைத்தட்டி அவர் பேசியதை ஆமோதித்தனர்.
சமீபத்தில்
ஜி.எஸ்.டி கவுன்சில் 50வது
கூட்டத்தை நடத்தி முடித்து, சில பரிந்துரைகளையும், சில அறிவிப்புகளையும்
(Recommendations and Notifications) அறிவித்தது. ஒரு
பறவைப் பார்வையில், நமது செயற்குழு உறுப்பினர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் பகிர்ந்துகொண்டு, விளக்கினார். உறுப்பினர்கள்
எழுப்பிய சில சந்தேகங்களுக்கும் பதிலளித்தார்.
அதன்
பிறகு பொதுக்குழு
சார்பான விசயங்கள் துவங்கியது. நமது
சொசைட்டியில் துணைத்தலைவருக்கான
(Vice President) இடம்
தேர்ந்தெடுக்கப்பட வேண்டியிருந்தது. அதில்
செயற்குழு உறுப்பினரான பாலாஜி அருணாச்சலம் அவர்களை செயலர் பாலாஜி அவர்கள் முன்மொழிய, எல்லா
உறுப்பினர்களும் உற்சாகமாய் வரவேற்று கைத்தட்டி ஆமோதித்தனர்.
தலைவர்
பேசும் பொழுது, “ ஜி.எஸ்.டி
சட்டம் அமுலான பிறகு, ஒரு வாட்சப் குழு ஒன்றை இயக்கிக்கொண்டு இருந்தேன். அதில் பலர் இருந்தனர். அதில்
முதன் முதலாக என்னைத் தொடர்பு கொண்டு நாம் ஒரு சொசைட்டியாக இயங்கலாமே என ஆலோசனையை
முன்மொழிந்தார். வாருங்கள்
இணைந்து துவங்கலாம் என சொன்ன பொழுது, இப்பொழுது
நிர்வாகிகளாக இருக்கும் சிலரும் இணைந்து தான் நமது சொசைட்டியைத் துவங்கினோம். சொசைட்டியின்
செயலராக சில காலம் பணியாற்றினார். இப்பொழுதும் செயற்குழுவில் இருந்து கொண்டு சொசைட்டியின் பணிகளை மேற்கொண்டு வருகிறார். ஆகையால் அவரை துணைத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்”
என வாழ்த்து தெரிவித்தார்
செயலர்
பாலாஜி ” தலைவர் சொன்னது போல பாலாஜி அருணாச்சலம் துவங்கலாம் என முன்மொழிந்ததோடு மட்டுமில்லாமல், அதற்கு பிறகு
அந்த குழுவில் இருந்த நூற்றுக்கணக்கானவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். அதில் ஆர்வமாய் முன்வந்தவர்களை வைத்து தான் துவங்கினோம்”
என்றார்.
பொருளாளர்
செல்வராஜ் ஆண்டு நிதி அறிக்கையை வாசித்தார். கடந்த
ஆண்டுகளை போலவே, நிர்வாகிகள் உறுப்பினர்களிடம் பெறப்படுகிற பொதுப்பணம் என்பதால், கவனமாக பார்த்துப் பார்த்து செலவழித்திருக்கிறார்கள். சில
செலவுகளை நிர்வாகிகள் சொந்தக் காசை செலவழித்திருக்கிறார்கள். ஆகையால்
வழக்கம் போல பணத்தை மிச்சப்படுத்தியிருக்கிறார்கள்.
ஏற்கனவே உள்ள வைப்புத்தொகையை கொஞ்சம் அதிகப்படுத்தும் அறிவிப்பையும் செய்தார்கள். பொதுவேலை என்பது ஏதும் பலன்கள் இல்லாமல் செய்வது. இதில்
கைக்காசையும் செலவழிப்பது என்பது பெரிதாக பாராட்டத்தக்க அம்சம்.
ஒரு
அமைப்புக்கு நிதி என்பது அவசியமான
ஒன்று. சில ஆக்கப்பூர்வமான விசயங்களை செய்யலாம் என யோசிக்கும் பொழுது,
நிதி என்பது பல சமயங்களில் தடையாய்
வந்து நிற்கும். இப்போதைய
பெரும் செலவு என்பது மாதம் ஒருமுறை நேரடிக்கூட்டம் நடத்துகிறோம். அதற்கான வாடகைச் செலவுகள், வருடத்திற்கு ஒருமுறை டைரிகள், மாதக் காலண்டர்கள் போடுகிற செலவு தான். செலவுகளைப்
பார்த்து பார்த்து தான் செலவு செய்கிறோம். உறுப்பினர்கள் புதிய உறுப்பினர்களை கொஞ்சம் கவனம் கொடுத்து, ஒவ்வொவரும் அதிகப்படுத்தினால் நிதியைப்
பலப்படுத்த முடியும். இன்னும் ஆக்கப்பூர்வமான செயல்களை நம்மால் முன்னெடுக்கமுடியும். அதே போல வருடச் சந்தா பெறுகிறோம். ஏழு ஆண்டுகளுக்கு ரூ. 10000 என பெறுகிறோம். துவக்கத்தில்
நான்கு பேர் இணைந்தார்கள். கடந்த ஆண்டுகளில் நான்கு பேர் இணைந்து, மொத்தம் எட்டு பேர் இப்பொழுது ஏழு ஆண்டு சந்தாதாரராக இருக்கிறார்கள்.
சொசைட்டியில் உற்சாகமாய் இயங்குகிற உறுப்பினர்கள் ஏழு ஆண்டு சந்தா செலுத்த பரிசீலியுங்கள்”
என கேட்டுக்கொண்டார்.
நமது
உறுப்பினர் சந்திரசேகர் ஒரு ஆலோசனையை முன்மொழிந்தார். “சொசைட்டி நிர்வாகிகள் மூலம் உதவிகள் பெற்று உறுப்பினர்கள் பலன் பெறுகிறார்கள். அப்படி
கிடைத்த பணப் பலன்களில் ஒரு குறிப்பிட்ட சதவிகித்தைப் பெற்றால், நிதியைப் பலப்படுத்தலாம்”
என்றார்.
தலைவர்
இந்த கேள்விக்குப் பதிலளிக்கும்
பொழுது, “அது கமர்சியல் அமைப்பாக மாறிவிடும். இந்த
சொசைட்டி துவங்கும் பொழுது, உறுப்பினர்களிடம்
சந்தா கூட பெறக்கூடாது. இலவசமாக சேவை செய்யவேண்டும் என்ற நோக்கத்தில் தான் துவங்கினோம். ஆனால்
அடிப்படையான, அத்தியாவசிய செலவுகள் செய்யவேண்டியிருப்பதால் தான் தவிர்க்க முடியாமல் கூட சந்தா
சேகரிக்கிறோம்.” என்றார்.
”முன்பு,
நமது சொசைட்டியில் தன் துறையில் பல ஆண்டுகள் அனுபவம் பெற்ற
சந்திரசேகர் என்பவர்
இருந்தார். துவக்க
காலத்தில் உறுப்பினர்களின் எண்ணிக்கை குறைவு. ஆகையால் சந்தாவும் குறைவாக வருவதால், நிர்வாகிகள் தான் பலமுறை செலவழித்து சமாளித்திருக்கிறோம்.
அதை நாம் சொல்லாமலே புரிந்துகொண்டு,
ஒவ்வொரு நேரடி மாதக் கூட்டத்தின் பொழுது, ஒரு
குறிப்பிட்ட தொகையை கொடுத்து,
ரசீது வாங்கிச் செல்வார். அவர்
கொரானாவின் தாக்கத்தில்
இறந்துவிட்டார். அவருடைய
இழப்பு நம் சொசைட்டிக்கு பேரிழப்பு”
என்றார் தலைவர்.
அவரைப்
போல நமது உறுப்பினர்கள் தங்களால் சாத்தியமானதை கொடுக்க முன்வரலாம். நிதி
நிலைமையும் பலப்படும்.
உறுப்பினர்
சேர்க்கை குறித்து உறுப்பினர்களின் ஆலோசனைகள் கேட்கப்பட்ட பொழுது, உறுப்பினர் முனியசாமி தனது அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.
”நமது
சொசைட்டியில் எனது சீனியர் வில்லியப்பன் அவர்களும், நானும் உறுப்பினர்களை குறிப்பிடத்தக்க வகையில் இணைத்து விட்டிருப்பதாக அவ்வப்பொழுது தலைவர் பாராட்டிச் சொல்கிறார். வில்லியப்பன்
அவர்கள் கடந்த பல ஆண்டுகளாக இந்தத்
துறையில் புதியவர்களுக்கு அவர்களுடைய துறை சார்ந்த அறிவை, ஆற்றலை வளர்ப்பதில் பலன்கள் எதையும் எதிர்பாராமல்
நிறைய
உதவிகள் செய்திருக்கிறார். அப்படித்தான் என் வளர்ச்சியிலும் பல உதவிகள் செய்திருக்கிறார். என்னைப்
போன்றவர்கள் அவரிடம் தொடர்ந்து சந்தேகங்கள், ஆலோசனைகள் கேட்கும் பொழுது, அதற்கு
பதிலளிக்கும் பொழுது, அதனோடு சேர்த்து இப்படி GSTPS ஒரு சொசைட்டி இயங்கிவருகிறது. நீங்கள் இணைந்தால் உங்கள் வளர்ச்சிக்கு உதவும் என இருவரும் சொல்கிறோம்.
இப்படி கேட்டுக்கொண்டவர்களில்
சிலர் ஆறு மாதத்தில் இணைந்திருக்கிறார்கள். சிலர் இரண்டு
வருடங்கள் கழித்து கூட இணைந்திருக்கிறார்கள். நமக்கு
பிறகு அமைப்பைத் துவங்கியவர்கள் கூட இப்பொழுது ஆயிரக்கணக்கில் உறுப்பினர்களைக் கொண்ட பெரிய அமைப்பாக வளர்ந்து நிற்பதை நாமே பார்க்கிறோம். உறுப்பினர்கள் அதிகமாகும் பொழுது, நமக்கு எல்லாவகையிலும் பங்காற்றுகிற சொசைட்டிக்கு ஆட்கள் கிடைப்பார்கள். ஆகையால், ஓவ்வொரு உறுப்பினரும் இதைக் கவனத்தில் கொண்டு செயல்படவேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”
என்றார்.
மேலும்,
இப்பொழுது நமது சொசைட்டிக்காக துவங்கப்பட்ட தளம் https://gstprofessionalssociety.blogspot.com நமது உறுப்பினர்களாலும், பொதுவான நபர்களாலும் பயன்படுத்தப்பட்டுவருகிறது. துவங்கி
ஒரு மாதத்திற்குள்ளாகவே 2200 பார்வைகளை தளம் பெற்றிருக்கிறது.
அதற்கு
பிறகு யூடியூப் பக்கம் துவங்கப்பட்டது, அதில் வருமான வரி தொடர்பாக நாம் நடத்திய
கூட்டத்தின் ஒரு
காணொளியையும் நிர்வாகிகள்
பதிவேற்றியதை அறிவீர்கள். https://www.youtube.com/@gstprofessionalssociety6987 இதில்
நமது உறுப்பினர்களும், பொதுவானவர்களும் என இன்றுவரை 34 பேர்
உறுப்பினர்களாகி இருக்கிறார்கள். உறுப்பினர் ஆகாதவர்கள் சந்தாதாரராக (Subscribe) ஆகுங்கள். அப்படி செய்துவிட்டால், தொடர்ச்சியாக நாம் வலையேற்றும் பொழுது, உங்களுக்கும் அந்த பதிவுகள் தவறாமல் வந்துவிடும்.
இப்பொழுது
நாம் பேஸ்புக்கிலும் இயங்க துவங்கியுள்ளோம். GST
PROFESSIONALS SOCIETY என்ற
பெயரில்குழுவாக இயங்க துவங்கியிருக்கிறோம். ஆகையால், பேஸ்புக்கில் இயங்கும் உறுப்பினர்கள் அதில் இணைந்துகொள்ளுங்கள். அதற்கான லிங்க்
https://www.facebook.com/groups/792542932366102 இதன் தொடர்ச்சியாக,
விரைவில் இன்ஸ்டாகிராமிலும் இணைய இருக்கிறோம்.
இந்த
சமூக வலைத்தளங்களை நம் துறை சார்ந்த புதியவர்களிடம்
கொண்டு சேர்ப்பதன் மூலம் புதியவர்களை நமது சொசைட்டிக்கு உள்ளே கொண்டுவரலாம். உறுப்பினர்களின் ஆர்வமான செயல்பாடுகள் தான் எல்லாவற்றையும் சாத்தியப்படுத்தும் என்பதை சொசைட்டி சார்பாக பகிர்ந்துகொண்டார்.
உறுப்பினர்களுக்கு
நான்காம் பொதுக்குழுவை முன்னிட்டு, சாவிகளை சுவரில் தொங்கவிடுவதற்கு வசதியாக மரத்தலான நல்ல வேலைப்பாடுகள் கொண்ட GSTPS பெயர் பொரித்த ஸ்டாண்டை நினைவுப்பரிசாகவும், உறுப்பினர்களுக்கு கடந்த ஆண்டில் ஏற்கனவே உறுப்பினர்
சான்றிதழ் கொடுக்கப்பட்டிருந்தது. அது காலாவதி ஆனதால் புதிதாக சான்றிதழும் நமது
உறுப்பினரான தணிக்கையாளர் ஓம் பிரகாஷ் நாராயணன் மூலமாகவும், சிறப்பு அழைப்பாளர் பெருமாள் அவர்களாலும் அனைவருக்கும் வழங்கப்பட்டது.
மேலும்,
நமது உறுப்பினர் சாதிக் பாட்சா அவர்கள், ஒவ்வொரு
கூட்டத்திலும் ஜி.எஸ்.டி
நோட்டிஸ்களுக்கு பதில் அளிப்பது, அதில்
நாம் வெற்றி, தோல்வி பெற்றது என பகிர்ந்துகொண்டால், அனைத்து உறுப்பினர்களுக்கும்
நன்றாக பயன்படும் எனக் கோரிக்கை வைத்தார். அதை
ஒவ்வொரு கூட்டத்திலும் நாம்
தொடர்ந்து செய்து தான் வந்தோம். இடையில் ஒன்றிரண்டு கூட்டத்தில் செய்ய
தவறியிருக்கிறோம். இனி
கவனமாக தொடர்வோம்
என தலைவர் பதிலளித்தார்.
அதனடிப்படையில், வில்லியப்பன்,
சிவக்குமார் என சில உறுப்பினர்கள்
தங்களது அனுபவங்களை உற்சாகமாக பகிர்ந்துகொண்டார்கள். அதே போல இந்த அனுபவங்களை நேரடிக் கூட்டத்தின் மட்டுமில்லாமல், குழுவில் கூட பகிர்ந்துகொள்வது எல்லோருக்கும் உடனடியாக சென்று சேரும் என்பதை உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
தட்டச்சு
செய்ய தெரியவில்லை என்றால், வாய்ஸ் செய்தியாக கூட பதியலாம் எனவும் ஆலோசனை கூறப்பட்டது.
கூட்டத்திற்கு
இடையே, சுவையான சமோசாவும், பானி பூரி, கூல் டிரிங்க்ஸ் என
அனைவருக்கும் வழங்கப்பட்டது. நமது சொசைட்டியின் இணைச் செயலர் செண்பகம் அவர்கள் தன் மகளுக்கு குழந்தை பிறந்த செய்தியை இனிப்புடன் மகிழ்வைப் பகிர்ந்துகொண்டார்.
இறுதியில்
கைலாசமூர்த்தி அவர்கள் கலந்து கொண்டு சிறப்பித்த அனைவருக்கும் அவருடைய மொழி நடையில் உற்சாகமாக நன்றிகளைப் பகிர்ந்துகொண்டார்.
நன்றி
- - GSTPS
தொடர்பு கொள்ள : 95000 41971, 98412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
பேஸ்புக் : https://www.facebook.com/groups/792542932366102