Thursday, February 29, 2024

GSTPS : "GST Common Reversal" - Mr. L. Poorna Selvakumar, Madurai

 


நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 132 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (02/03/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.


தலைப்பு :    "GST Common Reversal" 


பேச்சாளர் :   

திரு. பூர்ண செல்வகுமார்,

Accountant Tax Consultant,

Madurai.


ஜூம் ஐடி      : 6625536356

பாஸ்வேர்ட் :  02032024


வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


Tuesday, February 27, 2024

GSTPS : Free Accupuncture Medical Camp by ATAMA - Dr. Poovendan





வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (24/02/24) எழும்பூர் இக்சா மையத்தில்  அக்குபஞ்சர் மருத்துவ முகாமில் நமது உறுப்பினர்களும், குடும்ப உறுப்பினர்களும், நண்பர்களும் திரளாக கலந்துகொள்ள சிறப்பாக நிறைவேறியது.




இனிய தமிழ்த்தாய் வாழ்த்துடன் மருத்துவ முகாம் துவங்கியது. நமது துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று பேசினார்.

 



தலைவர் செந்தமிழ்ச்செல்வன் தனது உரையில்… “அக்குபஞ்சர் மருத்துவம் சீனாவில் புகழ்பெற்று இருந்தாலும், இந்தியாவில் வர்ம புள்ளிகள் என இருந்தது தான் அங்கு பரவியது என்றும் சொல்கிறார்கள்.  என் அனுபவத்தில் இடது கை ஒரு குறிப்பிட்ட அளவிற்கு மேல் தூக்க முடியாது சிரமப்பட்டேன். ஒருநாள் மருத்துவம் செய்த பிறகு முழுவதும் தூக்க முடிந்தது. அது ஒரு மேஜிக் போல இருந்தது. அதன்பிறகு தான், இந்த மருத்துவத்தை கற்றுக்கொள்ள துவங்கினேன்.  நமது உறுப்பினர்களுக்கும் அறிமுகப்படுத்தலாம் என முடிவு செய்தோம்.” என பேசினார்.


அக்குபஞ்சர் மருத்துவர்
பூவேந்தன் தனது உரையில் அக்குபஞ்சர் மருத்துவம் பற்றி அதன் அடிப்படைத் தத்துவம், எப்படி வேலை செய்கிறது என்பதையும் சுருக்கமாக பேசினார்.



ஒவ்வொருவருக்கும் மருத்துவம் பார்க்க ஆரம்பித்தார்.  எல்லோருக்கும் பார்த்து முடிக்க மாலை 6.30ஆகிவிட்டது.  சிலருக்கு உடனடியாகவே நல்ல விளைவு ஏற்படுத்தியதை தெரிவித்தார்கள்.  சிலர் தொடர்ந்து பார்த்தால் சரியாகிவிடும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்கள்.



மருத்துவர் ஆற்றிய சேவையைப் பாராட்டி, மருத்துவருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கப்பட்டது.

 

தங்களுடைய அனுபவங்களை  பகிரும் பொழுது, பொருளாளர் செல்வராஜ் அவர்களின் துணைவியார் பேசும் பொழுது, ”மருத்துவருடைய அணுகுமுறை ஒரு மருத்துவராக  இல்லை. எங்கள் குடும்ப உறுப்பினர் ஒருவருடன் உரையாடுவது போல இருந்தது. “ என பாராட்டி பேசினார்.

 


சந்திரசேகர் அவர்கள்தினமும் பகலில் எவ்வளவு அலைந்தாலும், நின்றுகொண்டிருந்தாலும், இரவானால், கடுமையான கால் வலி இருக்கும்.  என் குடும்பத்தினரை கால் அமுக்க சொல்லி சிரமப்படுத்துவேன்.  இன்று இரவு வலி இல்லாமல் தூங்கினால், மருத்துவத்திற்கு நன்றி கடன்பட்டுள்ளேன்என்றார். இன்று காலையில், வலி இல்லாமல் தூங்கினேன் என்பதை நமது வாட்சப் குழுவில் பதிவு செய்தார்.

 

முனியசாமி அவர்கள் பேசும் பொழுதுநமது வாட்சப் குழுவில் தொடர்ந்து அக்குபஞ்சர் மருத்துவம் குறித்த செய்திகளைப் பகிர்ந்துகொண்டேன் என தலைவர் குறிப்பிட்டு பேசினார். மற்றவர்களும் அதை தெரிவித்தார்கள். தலைவர்  நல்லது செய்யவேண்டும் என நினைத்து நிர்வாகிகளுடன் பேசி ஒன்றை அறிவிக்கிறார்.  அதற்கு உறுதுணையாக இருப்பது நமது கடமை. அதைத் தான் செய்தேன்.

 


அலோபதி மருத்துவம் இங்கு நோய்களில் இருந்து குணப்படுத்துவதில் செல்வாக்கு செலுத்தினாலும், அதனாலும் குணப்படுத்தவே முடியாத, சாந்தப்படுத்துகிற நோய்களின் பட்டியல் அதிகம்.  இந்தியாவில் மாற்று மருத்துவ முறைகள் என ஹோமியோபதி, சித்தா, ஆயுர்வேதா, யுனானி, வர்மம், இயற்கை மருத்துவம் என நிறைய இருக்கின்றன.  அவற்றில் உள்ள நல்ல அம்சங்களை பயன்படுத்திக்கொள்வது சரியானது.  நடைமுறையில் சில அலோபதி மருத்துவர்கள் அப்படி பயன்படுத்துவதையும் பார்த்திருக்கிறேன்.

 


அதே போல அலோபதி மருத்துவத்தில் இருக்கும் இன்னொரு பெரிய பிரச்சனை  சேவை என்கிற எண்ணம் போய், வணிகம் என்பது பெரிதாக கலந்துவிட்டது. பல சமயங்களில் உண்மையை சொல்கிறார்களா,    பொய் சொல்கிறார்களா என பிரித்து பார்ப்பது பெரிய சவாலாக இருக்கிறது.  கடைசி எளிய மனிதன் வரைக்கும் மருத்துவம் என்பது கிடைக்கவேண்டும் என்பது தான் வளர்ந்த, நாகரிக சமூகத்தின் இலக்காக இருக்கமுடியும். மாற்று மருத்துவ முறைகளை இந்திய அரசு உற்சாகப்படுத்தவேண்டும்.” என பகிர்ந்துகொண்டார்.

 


உடல் வளர்த்தேன். உயிர் வளர்த்தேனேஎன்கிறார் திருமூலர்.  பொதுவாக நம் மக்கள் உடல்நலம் குறித்து வந்த பின் காப்பவர்களாக தான் இருக்கிறோம். தினசரி உணவு முறையில்  கவனம் செலுத்துவது, குறைந்த அளவிலாவது உடற்பயிற்சி செய்வது என்பதை கடைப்பிடித்தால், மருத்துவத்தின் தேவையையே கொஞ்சம் தள்ளிவைக்கமுடியும்.  ஆகையால் கவனத்துடன் இருப்போம்.

 


பொதுவாக நமது உறுப்பினர்கள் தங்களது மகிழ்வான தருணங்களை, உறுப்பினர்களோடு பகிர்ந்துகொள்வது வழக்கம்.  சந்திரசேகர் அவர்கள் அயப்பாக்கத்தில் புது வீடு கட்டி, நிர்வாகிகளையும், நமது உறுப்பினர்கள் சிலரையும் அழைத்திருந்தார்.  போயிருந்தோம்.  அவருக்கு இருபத்தி ஒன்றாம் திருமண நாள் என்பதையும் பகிர்ந்துகொண்டார்.  எல்லோருக்கும் சூடான போண்டாவும்,  சுவையான காபியும் வழங்கப்பட்டது  அதன் செலவுகளை மகிழ்வுடன் ஏற்றுக்கொண்டார்.  வீடு கட்டிய சந்தோசத்தில், நமது சொசைட்டியில் ஏழு ஆண்டு சிறப்புச் சந்தாவான, ரூ. 10000 த்தையும்  செலுத்திவிட்டார். மகிழ்ச்சி.

 

செல்வராஜ் அவர்கள் வந்திருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்ததோடு, முகாம் இனிதே நிறைவுற்றது.

 

நன்றி.

 

-     - GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety



Thursday, February 22, 2024

GSTPS : Old Regime Vs New Regime Under Income Tax Act- A. Senbagam, Joint Secretary, GSTPS


வணக்கம்.  கடந்த சனிக்கிழமையன்று (17/02/2024) பழைய வருமான வரி தாக்கல் முறை, புதிய வருமானவரி தாக்கல் முறை”  குறித்து நமது GSTPS இணைச்செயலர் செண்பகம் அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் தெளிவாக புரியும் விதத்தில் அருமையான உரையை தந்தார்.

 

பழைய வருமான வரித்தாக்கல் முறையில் உள்ள அம்சங்கள் என்னென்ன? புதிய வருமான வரித்தாக்கல் உள்ள முறையில் உள்ள அம்சங்கள் என்னென்ன?  யார் யார் என்ன முறையை தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும் என்பதை அட்டவணைப் போட்டு, உதாரணங்களுடன் தெளிவாக விளக்கினார்.


 

உரை முடிந்ததும்,  பங்கேற்பாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் புரியும் விதத்திலும், விளக்கமாகவும் பதிலளித்தார்.   அவருக்கு எந்த இடத்திலும் தடுமாற்றம் இல்லை. அவருடைய தொழிலில் வருமான வரி விசயங்களிலும், நடைமுறை அம்சங்களிலும் அத்தனை தெளிவு இல்லாமல் இப்படி ஒரு உரை சாத்தியமில்லை. அத்தனை சரளமாக பதிலளித்தார். 

 

சில இடங்களில் தனக்கு சில குறிப்பான விசயங்களில் பரிச்சயம் இல்லை என்றால்,   மற்றவர்கள் உதவவும் தயங்காமல் கேட்டுக்கொண்டார்.  ஒரு பேச்சாளருக்கு இருக்கவேண்டிய நல்ல பண்பு இது.  செயலர் பாலாஜி இடையிடையே சில கேள்விகளை எழுப்பியும், பதில் அளித்தும் கூட்டத்தை மெருகேற்றினார். கலந்துகொண்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

 

கூட்டத்தில் நமது உறுப்பினர்களோடு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.


கூட்டத்தில் பேச்சாளர் பயன்படுத்திய பிபிடியை இங்கு பகிர்கிறோம். பயன்படுத்திக்கொள்ளுங்கள்.  


நன்றி.

 

-          - GSTPS









தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Friday, February 16, 2024

GSTPS : Old Regime Vs New Regime Under Income Tax Act- A. Senbagam, Joint Secretary, GSTPS


நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 131வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (17/02/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.


தலைப்பு :    "Old Regime Vs New Regime Under Income Tax Act"


பேச்சாளர் :   

திரு. செண்பகம்,

இணைச் செயலர்,

GSTPS


ஜூம் ஐடி      : 6625536356

பாஸ்வேர்ட் :  17022024


வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety


Saturday, February 10, 2024

GSTPS : Our 6th E Magazine - January 2024

 




அனைவருக்கும் வணக்கம்.   GSTPSயினுடைய ஆறாவது மாத மின்னிதழை ஜனவரி 2024 இதழாக  வெளியிட்டு உள்ளோம்.  GSTPS உறுப்பினர்களும், பொதுவெளியில் உள்ளவர்களும் பயன்படுத்திக்கொள்ளட்டும் என எங்களது தளத்தில் வெளியிடுகிறோம்.


ஜனவரி மாதத்தில் ஜி.எஸ்.டி, வருமான வரியில் நடந்த முக்கிய அறிவிப்புகளையும், வழக்குகளையும் தொகுத்து தந்துள்ளோம். வருங்கால வைப்பு நிதியில் தொழிலாளர்களுக்கான பி.எப். தளத்தில் உள்ள அம்சங்கள் என்னென்ன என்பதை விரிவாக ஒரு கட்டுரை எழுதியிருக்கிறோம்.  வினாடி வினா பகுதியும் இருக்கிறது.  


படியுங்கள். உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


-     -   GSTPS








































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety/