அனைவருக்கும் வணக்கம்.
கடந்த சனிக்கிழமையன்று (03/02/2024) ”ஜி.எஸ்.டி போர்ட்டலில் செய்யப்பட்ட மாற்றங்கள்” என்ற தலைப்பில் நமது தலைவர் விரிவாக உரையாற்றினார்.
கலந்துகொண்ட அனைவரையும் வரவேற்று, செயலர் பாலாஜி துவங்கி வைத்தார்.
தலைவர் தான் தயாரித்த பிபிடிகளோடு ஒவ்வொரு மாற்றங்களாக விளக்க ஆரம்பித்தார்.
1. Profile பகுதியில் ஜி.எஸ்.டியில் பதிவு பெற்றவர்கள் குறித்த பதிவு விவரங்களான, முகவரி, மொபைல் எண், மின்னஞ்சல் முகவரி போன்ற விவரங்களை இப்பொழுது பார்க்க முடியும்.
2. வருமான வரித்தளத்தில் Bank Validate செய்வது போல, இப்பொழுது ஜி.எஸ்.டி தளத்திலும் கொண்டு வந்திருக்கிறார்கள்.
3. ஜி.எஸ்.டி தளத்தில் ஒரு பான், ஒரு டிரேட் பெயர் என்று தான் இருந்தது. இப்பொழுது Additional trade name கொடுத்துக்கொள்கிற வசதிகளை உருவாக்கி தந்திருக்கிறார்கள்.
இப்படி ஜி.எஸ்.டி போர்ட்டலில் மாற்றம் செய்த 27 அம்சங்களை விரிவாக விளக்கினார்.
”எல்லோருக்கும் தெரிந்த அம்சங்கள் தான். ஆகையால் தலைப்பை விரைவில் எடுத்து முடித்துவிடலாம் என நினைத்தேன். விளக்கும் பொழுது தான் இதில் பலருக்கும் சந்தேகங்கள் இருக்கின்றன. கூட்டம் பலருக்கும் தெளிவு உண்டாக்கியிருக்கிறது என்பதில் மகிழ்ச்சி” என தனது உரையை முடித்தார் தலைவர்.
பங்கேற்பாளர்கள் விளக்கும் பொழுதே இடையிடையே கேட்ட சந்தேகங்களுக்கும் பதிலளித்தார். இந்த மாதிரி தலைப்புகளில் இடையிடையே சந்தேகம் கேட்பது, அதற்கு விரிவாக பதிலளிப்பது நல்ல புரிதலை தருகிறது. ஆனால், அதில் ஒரு சிக்கலும் எழுகிறது. அடுத்தடுத்து பங்கேற்பாளர்கள் தலைப்பை ஒட்டிய தங்கள் எதிர்கொண்ட சிக்கல்களை சொல்லி விளக்கம் கேட்கும் பொழுது, அதற்கு பதிலளிக்கும் பொழுது நிறைய நேரமும் எடுத்துக்கொள்கிறது. இடையே செயலர் பாலாஜி தலைவர் விளக்கி முடித்துவிடட்டும். முடித்ததும் கேள்வி கேளுங்கள் என சுட்டிக்காட்டினார்.
கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி, பொருளாளர் செல்வராஜ் அவர்கள் கூட்டத்தை முடித்துவைத்தார்.
நமது உறுப்பினர்களும், பிற மாவட்டங்களில் இருந்தும் பலர் பங்கேற்றார்கள்.
நன்றி.
- - GSTPS
குறிப்பு : இங்கு கூட்டத்தில் பகிர்ந்துகொண்ட பிபிடிகளை பகிர்கிறோம். விரைவில் பேச்சின் காணொளியை யூடியூப்பில் பகிர்கிறோம்.
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment