வணக்கம். கடந்த சனிக்கிழமையன்று (17/02/2024) “பழைய வருமான வரி தாக்கல் முறை, புதிய வருமானவரி தாக்கல் முறை” குறித்து நமது GSTPS இணைச்செயலர் செண்பகம் அவர்கள் கலந்துகொண்ட அனைவருக்கும் தெளிவாக புரியும் விதத்தில் அருமையான உரையை தந்தார்.
பழைய வருமான வரித்தாக்கல் முறையில் உள்ள அம்சங்கள் என்னென்ன? புதிய வருமான வரித்தாக்கல் உள்ள முறையில் உள்ள அம்சங்கள் என்னென்ன? யார் யார் என்ன முறையை தேர்ந்தெடுத்தால் சரியாக இருக்கும் என்பதை அட்டவணைப் போட்டு, உதாரணங்களுடன் தெளிவாக விளக்கினார்.
உரை முடிந்ததும், பங்கேற்பாளர்கள் கேட்ட பல கேள்விகளுக்கும் புரியும் விதத்திலும், விளக்கமாகவும் பதிலளித்தார். அவருக்கு எந்த இடத்திலும் தடுமாற்றம் இல்லை. அவருடைய தொழிலில் வருமான வரி விசயங்களிலும், நடைமுறை அம்சங்களிலும் அத்தனை தெளிவு இல்லாமல் இப்படி ஒரு உரை சாத்தியமில்லை. அத்தனை சரளமாக பதிலளித்தார்.
சில இடங்களில் தனக்கு சில குறிப்பான விசயங்களில் பரிச்சயம் இல்லை என்றால், மற்றவர்கள் உதவவும் தயங்காமல் கேட்டுக்கொண்டார். ஒரு பேச்சாளருக்கு இருக்கவேண்டிய நல்ல பண்பு இது. செயலர் பாலாஜி இடையிடையே சில கேள்விகளை எழுப்பியும், பதில் அளித்தும் கூட்டத்தை மெருகேற்றினார். கலந்துகொண்டவர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.
கூட்டத்தில் நமது உறுப்பினர்களோடு தமிழகத்தின் பிற மாவட்டங்களில் இருந்தும் திரளாக கலந்துகொண்டார்கள்.
நன்றி.
- - GSTPS
தொடர்பு கொள்ள : 095000 41971, 098412 26856
தளம் : https://gstprofessionalssociety.blogspot.com
மின்னஞ்சல் : gstpschennai@gmail.com
யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987
No comments:
Post a Comment