Friday, May 31, 2024

GSTPS : "Place of supply under GST - Part 2" - Dr. M. Villiyappan, Member, GSTPS


நமது GSTPS மூலம் தொடர்ந்து, பொதுவெளியில் இணைய (ஜூம்) வழியிலும், உறுப்பினர்களுக்காக நேரடிக்கூட்டங்களையும் நடத்தி வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில், இந்த வாரம் 137 வது கூட்டமாக... சனிக்கிழமையன்று (01/06/2024) காலை 10.30 மணியளவில் ஜூம் வழிக் கூட்டத்தை நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.


தலைப்பு :   

 "Place of supply under GST - Part 2


பேச்சாளர் :   

Dr. ம. வில்லியப்பன்,

ஜி.எஸ்.டி & வருமான வரி ஆலோசகர்


ஜூம் ஐடி      : 6625536356

பாஸ்வேர்ட் :  01062024


வாய்ப்புள்ளவர்கள் கலந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் தெரிவியுங்கள்.  உங்கள் கருத்துக்களையும் தெரிவியுங்கள்.


நன்றி.


GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Wednesday, May 29, 2024

GSTPS : Documents to be collected for IT filing - Balaji Arunachalam, Vice President, GSTPS

 




கடந்த சனிக்கிழமையன்று (25/05/2024) நமது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. 


இந்த கூட்டத்தில் இரண்டாவது தலைப்பாக....


வருமான வரித் தாக்கல் செய்வதற்காக ஆவணங்களை எப்படி சரியாக பெறுவது? என்ற தலைப்பில், GSTPS துணைத் தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் விரிவாக பேசினார்.



இப்பொழுது வருமான வரித் தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளை துவங்கும் காலமிது.   முன்பெல்லாம் தனிநபர்கள் சொல்வது தான் தகவல், நாமும் பெரிதாக மெனக்கெடாமல் தாக்கல் செய்துவிடுவோம்.  இப்பொழுது, அரசு தனிநபர் பொருளாதார நடவடிக்கைகளை வெவ்வேறு இடத்தில் இருந்து கவனமாய் தொகுத்து தந்துவிடுகிறது. ஆகையால் முன்பு போல ”எளிமை” கிடையாது.  எல்லாவற்றையும் கவனமாக ஆவணங்களை கேட்டு,  சரிப்பார்த்து, தாக்கல் செய்யவேண்டும். இல்லையெனில் நோட்டிசை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிக்குள்ளாகிவிடுவோம் என்பதை தலைப்பு வாரியாக  தெளிவாக விளக்கினார்.  பங்கேற்பாளர்களும் தங்களுடைய அனுபவங்களை சரியாக பகிர்ந்துகொண்டனர்.


- GSTPS






தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety





Monday, May 27, 2024

GSTPS : Our 32nd Direct Meeting held


கடந்த சனிக்கிழமையன்று (25/05/2024) நமது நேரடிக் கூட்டம் சிறப்பாக நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் துவங்கியது.

 


தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் ஜி.எஸ்.டி குறித்த ஐந்தாவது வகுப்பை பிபிடி வழியாக தெளிவாக விளக்கினார்.  வழக்கமாக, ஒரு கறாரான வாத்தியாராய் கடந்த வகுப்பு குறித்த கேள்விகளை கேட்பார். என்னைப் போல டல் மாணவர்கள் தலையை சொறிவோம்.  இன்றைக்கு நேரம் கடந்ததினால், நேரடியாக வகுப்புக்கு சென்றுவிட்டார்.

 


குறிப்பாக அதிகாரிகளின் நியமனம், அவர்களின் அதிகாரம் என்ற அளவில் இருந்தது.  அதிகாரிகள் ஜி.எஸ்.டி துவங்கிய காலம் தொட்டு எல்லாம் சட்டத்தை படித்துக்கொண்டிருந்தார்கள்.   இப்பொழுது தினந்தோறும் நோட்டிசுகளை தொடுத்துக்கொண்டே இருக்கிறார்கள். வில்லியப்பன் சார் ஒரு நிறுவனத்துக்கு மட்டும் 64 நோட்டிசுகளை பெற்றிருக்கிறார்.  ஆகையால் காலையில் முழிக்கும் பொழுதே, இன்றைக்கு எந்த அதிகாரியை பார்ப்பது என்ற யோசனையில் எழுகிறோம்.

 


ஆக, ஒரு சிஸ்டம் என்ன விதிகளோடு இயங்குகிறது என புரிந்துகொண்டால் தான், அவர்களை  சரியாக எதிர்கொள்ளமுடியும். நாம் நமது வாடிக்கையாளர்களை துன்பத்திலிருந்து காக்க முடியும். அவரை மீட்டால் தான், நம் பொருளாதாரமும் வளமாக இருக்கும்.  அந்த அடிப்படையில் இந்த வகுப்பு மிகவும் முக்கியமாய் இருந்தது.

 


வகுப்பு எடுக்கும் பொழுது,  நிறைய அனுபவங்களை அவரும் பகிர்ந்துகொண்டார்.   பங்கேற்ற உறுப்பினர்களும் உற்சாகமாய் தங்களது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.  நிறைய நேரம் விவாதித்ததினால், நேரம் கொஞ்சம் கடந்து போனது. தலைவரே தான் எடுக்க நினைத்திருந்த இரண்டாவது அத்தியாத்தை அடுத்த மாதம் தள்ளி வைக்கும்படி ஆகிவிட்டது.

 


இடைவேளையில் சுவையான இனிப்பும், காரமும், சூடாக காபியும் வழங்கினார்கள்.

 




திரு கிருஷ்ணமூர்த்தி அவர்களும், குபேந்திரன் அவர்களும் சமீபத்தில் நம்மோடு இணைந்த இரண்டு புதிய உறுப்பினர்கள். கடந்த மாதம் நீலகண்டன் அவர்கள் நடத்திய கூட்டத்தில் நம் சொசைட்டி பற்றி கேள்விப்பட்டு நம்மோடு விருப்பமாக இணைந்தவர்கள்.   நம் தலைவர் செந்தமிழ்ச்செல்வன் வெவ்வேறு வெளி கூட்டங்களில் தொடர்ந்து உரையாற்றுகிறார். அந்த கூட்டங்களை கவனித்திருக்கிறார்கள்.   தங்களை சுய அறிமுகம் செய்துகொண்டார்கள்.

 


இப்பொழுது வருமான வரித் தாக்கல் செய்வதற்கான ஆயத்த பணிகளை துவங்கும் காலமிது.   முன்பெல்லாம் தனிநபர்கள் சொல்வது தான் தகவல், நாமும் பெரிதாக மெனக்கெடாமல் தாக்கல் செய்துவிடுவோம்.  இப்பொழுது, அரசு தனிநபர் தகவல்களை வெவ்வேறு இடத்தில் இருந்து கவனமாய் தொகுத்து தந்துவிடுகிறது. ஆகையால் முன்பு போல ”எளிமை” கிடையாது.  எல்லாவற்றையும் கவனமாக ஆவணங்களை கேட்டு,  சரிப்பார்த்து, தாக்கல் செய்யவேண்டும். இல்லையெனில் நோட்டிசை எதிர்கொள்ளவேண்டிய நெருக்கடிக்குள்ளாகிவிடுவோம் என்பதை தலைப்பு வாரியாக துணைத்தலைவர் பாலாஜி அருணாச்சலம் அவர்கள் தெளிவாக விளக்கினார்.  பங்கேற்பாளர்களும் தங்களுடைய அனுபவங்களை சரியாக பகிர்ந்துகொண்டனர்.

 


ஒவ்வொரு நேரடிக் கூட்டத்தின் பொழுதும், தலைப்புகளில் இருந்தும், குறிப்பாக விவாதிப்பதில் இருந்தும், நிறைய கற்கிறோம். தினசரி கற்கவேண்டும் ஒரு நல்ல மாணவர் தான் ஒரு நல்ல வரி ஆலோசகராக இருக்கமுடியும் என்கிறார் ஒரு மூத்த வரி ஆலோசகர். உண்மை தான்.  இல்லையென்றால், இந்த வரி உலகில் நிச்சயம் பின் தங்கிவிடுவோம் என்பதை மட்டும் நன்றாக உணர முடிகிறது.


 

நமது சொசைட்டி துவங்கி ஜூன் மாதத்தோடு  ஐந்தாம் ஆண்டை உற்சாகமாக நிறைவு செய்கிறோம். ஒவ்வொரு ஆண்டும்  வெளியே ஓரிடத்தில் நாள் முழுவதும் கூடி விவாதிப்பதும், களிப்பதும் வழக்கம்.  இந்த ஆண்டும் ஜூனில் அப்படி சந்திக்க இருக்கிறோம்.  அதற்கான இடத்தேர்வை செய்ய இருக்கிறோம் என தலைவர் தெரிவித்தார்.  உறுப்பினர்களும் தங்களுக்கு தெரிந்த, நல்ல, நம் பட்ஜெட்டுக்கு ஏற்ற இடங்களை பரிந்துரைக்க கேட்டுக்கொண்டார்.  

 


நன்றி.

 

-        -  GSTPS


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

 

Friday, May 24, 2024

GSTPS : "Place of supply under GST " - Dr. M. Villiyappan, Member, GSTPS - PPT


வணக்கம். 18/05/24 அன்று காலையில்  ஜூம் கூட்டம் சிறப்பாக நிறைவேறியது. நமது உறுப்பினர்களும், பிற பகுதிகளில் இருந்தும் கலந்துகொண்டார்கள்.

 

நமது தலைவர் செந்தமிழ்ச்செல்வன் அவர்கள் பேசும் பொழுது, பல  நெருக்கடியான சமயங்களில் உதவுகிறவராக நமது உறுப்பினர்  Dr. வில்லியப்பன் இருந்திருக்கிறார். நம்மிடைய கடந்த காலங்களில் பல தலைப்புகளிலும் உரையாற்றியுள்ளார். கடந்த வாரம் Place of supply குறித்துப் பேசுங்கள் எனக் கேட்ட பொழுது, உடனே ஒப்புக்கொண்டார் என துவங்கிவைத்தார்.

 

வரவேற்புரை வழங்கிய உறுப்பினர் முனியசாமிஎனது சீனியரான Dr. வில்லியப்பன் அவர்கள் அம்பத்தூர் எஸ்டேட் பகுதியில்... வரித்துறையில் 35 ஆண்டுகளாகவும், 25 ஆண்டுகளாக வரி ஆலோசகராகவும் இருக்கிறார். வரிச் சட்டங்கள் குறித்து நல்ல அறிவோடும், அதற்கு இணையான நடைமுறை அறிவோடும் இருக்கிறார்அவருடைய பட்டறையில் வளர்ந்தவன் தான் நான். என்னைப் போல பலருடைய வளர்ச்சிக்கும் உதவுகிறவராக இருக்கிறார் என்பது இன்னும் சிறப்பு.”  

 

”அவர் பேச்சில் எப்பொழுதும் ஒரு வேகம் இருக்கும். என்னைப் போன்றவர்களை மனதில் வைத்து மெதுவாக பேசவேண்டும் என கோரிக்கை வைத்து... அனைவரையும் வரவேற்றார்.

 

Place of supplyகுறித்து பிபிடி வழியே வில்லியப்பன் அவர்கள் விரிவாக விளக்க ஆரம்பித்தார்.

 

ஜி.எஸ்.டி சட்டத்தில் பொருள் வழங்கும் இடத்தின் முக்கியத்துவத்தின் பல அம்சங்களையும் உதாரணங்களோடும், படங்களோடும் நன்றாக விளக்கினார்.

 

கடந்த வாட் வரி விதிப்பில் இடத்தின் முக்கியத்துவம், ஜி.எஸ்.டி வரி விதிப்பில் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் கட்டமைக்கப்பட்டிருக்கிறதுபழைய நினைவுகளில் இருந்து எதையும் அணுக முடியாது.

 

அவர் உரையை முடித்ததும், கலந்துகொண்ட பங்கேற்பாளர்கள் கேட்ட கேள்விகளுக்கும் பதில் அளித்தார்தலைவர் அவர்கள், கோவையில் இருந்து பெருமாள் அவர்கள், நீலகண்டன் அவர்களும். மற்றவர்களும் விவாதங்களில் பங்கு கொண்டு, பங்கேற்பாளர்களுக்கு ஒரு தெளிவை உண்டாக்கினார்கள்

 

இந்த தலைப்பு விரிவானது என்பதால், வகுப்பு இத்தோடு முடியவில்லை. அடுத்த தலைப்பு இன்னும்  இன்னும் விரிவாக எடுக்கிறேன் என முடித்தார்.

 

தலைவர் அவர்கள் இந்த தலைப்பில் ஒரு எடுத்துக்காட்டு சொல்லி, பதில் அளியுங்கள் என கூறியுள்ளார்.

 

ஒவ்வொரு கூட்டத்திலும் கலந்துகொள்வதின் மூலம் ஜி.எஸ்.டி ஒரு பரந்து விரிந்த கடல் என புரிந்துகொள்ள முடிகிறதுஇனி தினமும் ஒரு மணி நேரமாவது படிப்பது அவசியம் என உணரமுடிகிறதுபடிப்பது ஒரு பக்கம் என்றால், விவாதத்தில் பங்கு கொண்டு புரிந்துகொள்வது அதைவிட அவசியம் எனவும் புரிந்துகொள்ள முடிகிறது.

 

பொருளாளர் செல்வராஜ் அவர்கள் உரையாற்றியவருக்கும், கலந்துகொண்ட அனைவருக்கும் நன்றி சொல்லி கூட்டத்தை முடித்துவைத்தார்.


- GSTPS































































தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety