Monday, June 1, 2026

பணியாளர் இணைந்த தேதி- கவனம்

 


ஒரு நிறுவனத்தை பதிவு செய்த தேதி 01/01/2026.   பதிவு செய்து, இரண்டு மாதங்கள் தாமதமாக DSCக்கு அனுமதி தந்து… நான்கு பணியாளர்களை அந்த நிறுவனத்தில் உள்ள ஒரு ஊழியர் பதிவு செய்த பொழுது, 01/01/2026 என்பதற்கு பதிலாக, தவறுதலாக 01/04/2026 என பதிந்துவிட்டார்.

 

இப்படி தவறாக பதிந்ததினால், ஜனவரி  மாதத்தில் இருந்து பணம் செலுத்த முடியவில்லை.   பிறகு இணைந்த தேதியை சரி செய்துகொள்ளலாம்.  இப்பொழுது ஏப்ரலில் இருந்து பணம் செலுத்திவிடலாம் என்றால்,   முதல் மூன்று மாதங்கள் ஏன் பணம் செலுத்தவில்லை என தளம் கேள்வி கேட்கிறது.

 

ஊழியர்கள் இணைந்த தேதியை தளத்திலேயே  Joint declaration மூலமாக மாற்றிவிடலாம் என்றால்,,   அந்த  பணியாளர் பெயரில் நாம் எதுவும் பணம் செலுத்தவில்லை என்பதால்,  Not found என வந்துவிட்டது. அதனால்  online ல் மாற்ற முடியவில்லை.

 

பிறகு சம்பந்தப்பட்ட திருச்சி பி.எப் அலுவலகம் சென்று இந்த பிரச்சனைக்கு தீர்வு கேட்டதற்கு,  வேலைக்கு சேர்ந்த தேதிக்கான ஆதாரங்களை கொண்டு வாருங்கள் (Appointment letter, Request letter in Company letter head) என கேட்டு,  இன்றைக்கு அந்த சரியான தேதிக்கு மாற்றி தந்துவிட்டார்கள்.   மகிழ்ச்சி.

 

ஆகையால், நிறுவனத்தில் பி.எப்பில் பதிவு செய்கிற பொழுது, மிகவும் கவனமாக இருக்கவேண்டும்.

 

நன்றி.

 

இரா. முனியசாமி,

ஜி.எஸ்.டி, வருமானவரி, இபிஎப், .எஸ்.ஐ, எல்.ஐ.சி ஆலோசகர்,

GSTPS உறுப்பினர்,

9551291721