அன்புள்ள
உறுப்பினர்களுக்கு,
வணக்கம். வருகிற சனிக்கிழமை 24/10/2026 நேரடிக் கூட்டத்தில்
பி.எப்., இ.எஸ்.ஐ, - அப்டேட் குறித்து சீனியர் Dr. வில்லியப்பன் அவர்களும், நானும்
விளக்க இருக்கிறோம்.
புதிய தொழிலாளர்
நலச்சட்டம் 2020ல் அறிமுகப்படுத்தினாலும், டிசம்பரில் இருந்து அமுல்படுத்துகிறோம் என அறிவித்தார்கள். அதை உடனே
அமுல்படுத்துவதில் அவர்களிடம் சில குழப்பங்கள் இருந்தன. பிறகு ஜூனுக்கு பிறகு அமுல்படுத்துவதாக
தெரிவித்தார்கள்.
கூடுதலாக,
அந்தந்த மாநில அரசுகள் தங்கள் மாநில நிலைமைகளுக்கு ஏற்ப இதற்கு Draft முன்வைப்பார்கள்
என தெரிவித்தார்கள். ஆனால் தமிழக அரசு அப்படி
முன்வைக்கவில்லை. புதிய தொழிலாளர் நலச்சட்ட
அம்சங்களை அமுல்படுத்துவதில், அதிகாரிகள் மத்தியிலேயே
குழப்பம் இருக்கிறது. பழைய விதிகளையும், புதிய
விதிகளையும் குழப்பி பதில் அளிக்கிறார்கள்.
உதாரணமாக,
முன்பு இ.எஸ்.ஐ, பதிவு செய்வதற்கு குறைந்தப்பட்ச தொழிலாளர்கள் 10 பேர் இருக்கவேண்டும்
என்பது விதி. புதிய தொழிலாளர் நலச்சட்டத்தின் படி, 10 பேருக்கு குறைவாக இருந்தாலே,
விருப்பத்தின் அடிப்படையில் (Volundary basis) பதிவு எடுக்கமுடியும் என்பது விதி. ஆனால்
ஒரு பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தில் 8 பேர் இருக்கிறார்கள். அதற்கு பதிவு செய்யாலாம்
என உள்ளே நுழைந்தால்… பழைய விதிப்படி 10 இருக்கவேண்டும் என இ.எஸ்.ஐ தளம் சொல்கிறது. புதிய சட்டத்திற்கேற்ப இன்னும் தளத்தின் அம்சங்களை
மாற்றியமைக்கவில்லை.
நேற்று சீனியர்
வில்லியப்பன் அவர்களிடம் பேசிய பொழுது, ஒரு
பி.எப். அதிகாரி, புதிய சட்டத்தை அமுல்படுத்தியதன் மூலம் பழைய சட்டங்கள் காலாவதியாகிவிட்டன.
ஆகையால் பழைய சட்டத்தை பேசுவது தவறு. புதிய சட்டத்தைத் தான் அமுல்படுத்தவேண்டும் என
கூறியுள்ளார்.
வில்லியப்பன்
அவர்களும், நானும் எங்களது கிளைண்டுகளுக்கு புதிய தொழிலாளர் சட்டத்தை ஏற்கனவே அமுல்படுத்த
துவங்கிவிட்டோம்.
நமது உறுப்பினர்
திரு. சந்திரசேகர் தலைவரிடம் கேட்டுக்கொண்டதற்கிணங்க பி.எப்., இ.எஸ்.ஐ குறித்த அப்டேட்
குறித்துப் பேச ஏற்பாடு செய்திருக்கிறார்கள்.
இது குறித்து
தெளிவு வேண்டும் என நினைப்பவர்கள் கூட்டத்தில் அவசியம் கலந்துகொள்ளுங்கள்.
நன்றி.
- இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721

No comments:
Post a Comment