Thursday, April 30, 2026

GSTPS : "GST - Collection and Payment of Tax - Dr. Villiyappan, Member, GSTPS

 


“GST – வரியின் வசூலும், வரியை செலுத்துதலும்”  - Dr. வில்லியப்பன் ஜூம் கூட்டத்தில் விளக்குகிறார்.

 

இந்த தலைப்பு ஒரு சாதாரண பகுதி அல்ல! GST அமைப்பின்மைய கட்டுப்பாட்டு பகுதிஎன்று பார்க்கப்பட வேண்டும். (எல்லாமே பணம்)

 

ஒரு வாடிக்கையாளர் பில் எழுதிய தருணத்திலிருந்து அரசுக்கு வரி செலுத்தப்படும் வரைசட்டப் பொறுப்புகள், தணிக்கை அபாயங்கள், வழக்கு சிக்கல்கள்அனைத்தும் இதன் கீழ் வருகிறது.

 

      1.       ஏன் இந்த தலைப்பு முக்கியம்?

 

  • Time of Supply (Sec.12, 13)எப்போது வரி?
  • Payment (Sec.49)எப்படிச் செலுத்துவது?
  • Interest (Sec.50)தாமதத்தின் விளைவு


👉 சிறிய தவறு கூட வட்டி, அபராதமாக ஆக மாறும். (கோவிட் காலத்தில் கூட அபராதம வசூலித்தது நினைவுக்கு வரும்)

 

      2.      கடந்த 9 ஆண்டுகளில் முக்கிய மாற்றங்கள்

 

  • Electronic Ledgersமுழுமையான அமைப்பு
  • Sec.49A/49B → ITC பயன்படுத்தும் கட்டுப்பாடு
  • Interest → Gross → Net liability (திருத்தம்)
  • Rule 86B → 1% cash payment கட்டாயம் (சிலருக்கு)
  • E-invoicingநேரடி கண்காணிப்பு
  • Return matching → GSTR-1 vs 3B கடுமை

 

👉 துவக்கத்தில் குழப்பமாக இருந்தாலும் கொஞ்சம் கொஞ்சமாக சீரமைக்கப்பட்டு கடுமையான கட்டுப்பாட்டிற்குள் வந்துவிட்டது.

 

       3.      முக்கிய வழக்குகள்

 

  • Refex Industries Ltd. vs Assistant Commissioner of CGST
    → Interest on net liability

 

  • Bharti Airtel Ltd. vs Union of India
    → System-based compliance
    முக்கியம்

 

  • Safari Retreats Pvt Ltd vs Chief Commissioner of CGST
    → ITC & tax liability
    தொடர்பான முக்கிய தீர்ப்பு

 

👉 Time of Supply தொடர்பான பல விவாதங்கள் இன்னும் “grey area” தான் நீடிக்கின்றன.

 

       4.      முக்கிய அபாயங்கள்

 

  • வசூலித்த வரி செலுத்தாதது (Sec.76)
  • தவறான Time of Supply
  • ITC utilisation பிழைகள்
  • System mismatch notices

 

  5. ஏன் இந்த கூட்டம் அவசியம்?

 

இந்த தலைப்பு:

  • அடிப்படை அல்ல — “advanced compliance”
  • நடைமுறை + சட்டம் + தணிக்கைமூன்றும் இணைந்தது

 

👉 சரியாகப் புரிந்தால்:

  • தணிக்கையில் நம்பிக்கை  வரும்.
  • வழக்கு அபாயம் குறையும்.

 

  இறுதியாக..

வரி வசூல் & செலுத்துதல்என்பது ஒரு வழமையான வேலை அல்ல
அது தொழில்முறை திறனை தீர்மானிக்கும் முக்கியமான பகுதி.

 

இந்த கூட்டம் ஒரு தகவல் பகிர்வு அல்லஒரு தொழில்முறை முன்னேற்ற வாய்ப்பு.


-          இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721

 

 தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

-         


Wednesday, April 29, 2026

GSTPS : GST - Collection and payment of Tax - Dr. Villiyappan, Member, GSTPS



நமது GSTPS சொசைட்டி சார்பாக  மாதம் இரண்டு இணைய வழிக் கூட்டங்களையும்,  
 உறுப்பினர்களுக்காக ஒரு நேரடிக் கூட்டத்தையும் தொடர்ந்து வருகிறோம்.


அதன் தொடர்ச்சியில்... இந்த வார சனிக்கிழமை (02/05/2026) அன்று காலை 10.30  மணியளவில் ஜூம் கூட்டத்தை நடத்த இருக்கிறோம்.


தலைப்பு  : "GST - Collection and Payment of Tax"


பேச்சாளர் :   "Dr. Villiyappan, Member, GSTPS"


கலந்துகொள்ளுங்கள்.


நன்றி.


- GSTPS

தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety

Tuesday, April 28, 2026

தவறான பி.எப். கணக்கை நீக்க புதிய வசதி (Delink)


தவறான பி.எப். கணக்கை நீக்க புதிய வசதி (Delink)

 

பணியாளர்கள் பெயரில், அவர்களுக்கு தெரியாமலோ அல்லது தவறுதலாகவோ தவறான பி.எப். கணக்கு இணைக்கப்பட்டிருந்தால், அதை இப்போது நீக்குவதற்கான வசதி வந்துள்ளது.


முன்பு ஒரு பணியாளர் வேலையில் சேரும் பொழுது, நிறுவனம் அவரை தளத்தில் இணைக்கும்.  அன்றைக்கே அந்த பணியாளர் வேலை பிடிக்காமலோ அல்லது வேறு காரணங்களிலோ வேலையை விட்டு நின்றுவிடுவார்.  அவருடைய கணக்கில் அந்த ஒரு நாளைக்கு கூட நிறுவனம் பணம் செலுத்தியிருக்காது.  அதை நீக்கவும் வழி இல்லாமல் இருந்தது. பி.எப். அலுவலகம் ஏன் சேர்த்துவிட்டு பணம் செலுத்தவில்லை என கேட்க சொல்லி, பணியாளரை வலியுறுத்தும். அந்த பணியாளர் வேலை செய்த அலுவலகத்தை கேட்க முடியாத சூழ்நிலையில் இருப்பார்.  இந்த சிக்கலை சரி செய்யத்தான் முதலில் இந்த வசதி கொண்டுவரப்பட்டது. இப்பொழுது கூடுதலாகவும் இந்த வசதி பயன்படுத்தப்படுகிறது. 

 

இந்த வசதி எப்போது பயன்படும்?

 

பணியாளர் வேலை செய்யாத நிறுவனத்தின் பி.எப். கணக்கு இணைக்கப்பட்டிருந்தால் பயன்படும். ஒரே நபருக்கு இரண்டு பி.எப். கணக்குகள் இருந்தால் நீக்கப்  பயன்படும்.   நிறுவனம் தவறாக பணியாளர் பெயரில் கணக்கு இணைத்திருந்தால் பயன்படும்.

 

முன்பு… பணம் செலுத்தப்பட்ட (contribution) கணக்கை நீக்க முடியாது. இப்போது, சில நிபந்தனைகளுடன், பணம் செலுத்தப்பட்ட கணக்கையும் நீக்க அனுமதிக்கிறது.

 

எந்த கணக்குகளை நீக்க முடியாது?

 

ஏற்கனவே பணம் எடுத்த கணக்குகளை நீக்க முடியாது. 6 மாதங்களுக்கு மேல் பணம் செலுத்தப்பட்ட கணக்குகளை நீக்க முடியாது. பணம் மாற்றம் செய்யப்பட்ட கணக்குகளை நீக்கமுடியாது.

 

எப்படி நீக்குவது?

 

பணியாளர்  உறுப்பினருக்காக இருக்கும் பி.எப். இணைய தளத்தில் உள்நுழைய வேண்டும்  பணியாளரின் கணக்கு விவரங்களில் சென்று… தவறான கணக்கை தேர்வு செய்து  “நீக்கு” என்ற தேர்வை அழுத்த வேண்டும். அதை பணியாளரின் ஆதார் மூலம் உறுதி செய்ய வேண்டும். அதன்பின்பு, பணியாளரின்  நிறுவனம் சரிபார்த்து ஒப்புதல் அளிக்கும். ஒருவேளை  நிறுவனம் பதில் அளிக்காவிட்டால்… பி.எப். அலுவலகம் தரவுகளை சரிப்பார்த்து தீர்மானம் எடுக்கும்

 

இப்படி நீக்குவதை பணியாளர் கவனமாக செய்யவேண்டும். ஒருமுறை கணக்கு நீக்கப்பட்டால்… மீண்டும் சேர்க்க முடியாது.  அந்த கணக்கில் இருக்கும் பணம் உடனடியாக கிடைக்காது.  அதன் நிலை குறித்து முழு விளக்கம் இன்னும் வரவில்லை

 

பணியாளர்கள் கவனத்துடன் செய்ய வேண்டியது

 

கணக்கை நீக்குவதற்கு முன் பணியாளரின் பணம் எவ்வளவு உள்ளது என்று பார்க்க வேண்டும்  எந்த கணக்கு சரியானது என்று உறுதி செய்ய வேண்டும்  சந்தேகம் எழுந்தால், விபரம் தெரிந்த நபரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்

 

ஏன் இந்த மாற்றம்?

 

ஒரே நபருக்கு பல கணக்குகள் இருப்பதை தவிர்ப்பதற்காகவும், பணியாளரின் வேலை வரலாறு (Service history) சரியாக இருப்பதற்காகவும், எதிர்காலத்தில் பணம் பெற சிக்கல் வராமல் இருப்பதற்காகவும் இந்த வசதி கொண்டு வரப்பட்டுள்ளது.

 

-          இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721


 தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

 

Income Tax : TDS changes from 01/04/2026 - Mr. Shenbagam, Secretary, GSTPS

 




















தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856


நெகிழ்வு + வேகம் + புரிதல் + செயல்திறன் எல்லாம் கலந்தது - Agility

 


சூழ்நிலைகள், சட்ட மாற்றங்கள், வாடிக்கையாளர் தேவைகள் ஆகியவை மாறும்போது, தாமதமின்றி தங்களை மாற்றிக் கொண்டு, சரியான தீர்வை வழங்கும் திறன் ஆகும்.

 

ஒரு வரி ஆலோசகருக்கு இது எவ்வளவு அவசியம்?

 

வரி துறை என்பது நிலையானது அல்ல. சட்டங்கள் மாறுகின்றன, அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன, விளக்கங்கள் திருத்தப்படுகின்றன. இத்தகைய சூழலில்:

 

1. சட்ட மாற்றங்களை உடனுக்குடன் ஏற்கும் திறன்

 

ஜி.எஸ்.டி, வருமானவரி போன்ற துறைகளில் Notifications, Circulars அடிக்கடி வெளிவருகின்றன. அவற்றை தாமதமின்றி புரிந்து, செயல்படுத்தும் திறன்அதுவே agility.

 

மாற்றத்தை விரைவாக உணராதவர், நடைமுறையில் பின்னடைவர்.”

 

2. வாடிக்கையாளர் தேவைக்கு தகுந்த தீர்வு வழங்குதல்

 

ஒவ்வொரு வாடிக்கையாளரும் ஒரே மாதிரி அல்ல. ஒருவருக்கு compliance முக்கியம்; மற்றொருவருக்கு tax planning முக்கியம்.

 

அந்த வேறுபாட்டை உணர்ந்து, அவரவர் சூழ்நிலைக்கேற்ற அணுகுமுறை — agility இல்லாமல் சாத்தியமில்லை.

 

ஒரே விதி எல்லோருக்கும் பொருந்தாது; சூழ்நிலை தான் வழிகாட்டும்.”

 

3. பிரச்சினைகளுக்கு உடனடி செயல்முறை தீர்வு

 

நோட்டிசு வந்தபோது அல்லது ஜி.எஸ்.டி தளத்தில் பிரச்சனை ஏற்பட்டபோது பார்த்து சொல்கிறோம்என்ற நிலை போதாது. அந்த நொடியில் தீர்வு தேடும் மனப்பான்மைஅதுவே உண்மையான agility.

 

4. தொழில்நுட்ப மாற்றங்களை ஏற்கும் மனப்பான்மை

 

GST portal, AIS, faceless assessment போன்ற அமைப்புகள் வரி ஆலோசகரின் பணியை முற்றிலும் மாற்றியுள்ளன.  இந்த மாற்றங்களை எதிர்ப்பதற்குப் பதிலாக,
அவற்றோடு இணைந்து செயல்படுதல்தொழில்முறை நிலைத்தன்மைக்கான அடிப்படை.

 

மாற்றத்தை ஏற்றுக்கொள்வதே வளர்ச்சியின் முதல் அடிக்கல்.”

 

5. அழுத்தநிலையில் தெளிவான முடிவு எடுக்கும் திறன்

 

கடைசி தேதி, வாடிக்கையாளர் அழுத்தம், சட்ட சிக்கல்கள் இந்த மூன்றும் சேர்ந்தால் குழப்பம் ஏற்படும். அந்த நேரத்தில் அமைதியாகவும், துல்லியமாகவும் முடிவு எடுப்பது ஒரு வரி ஆலோசகரின் முக்கிய திறன்.

 

அறிவு மட்டும் போதாது. அறிவை எப்போது, எப்படி பயன்படுத்துவது என்பது தான் ஒரு வரி ஆலோசகரை வேறுபடுத்துகிறது.


-          இரா. முனியசாமி

வரி ஆலோசகர்

GSTPS உறுப்பினர்

📞 95512 91721


தொடர்பு கொள்ள : 095000 41971,  098412 26856

தளம் : https://gstprofessionalssociety.blogspot.com

மின்னஞ்சல் : gstpschennai@gmail.com

யூடியூப் : https://www.youtube.com/@gstprofessionalssociety6987

பேஸ்புக் : https://www.facebook.com/gstprofessionalssociety