”தொழில் உலகம்”
அக்டோபர் இதழில் பி.எப். இ.எஸ்.ஐ குறித்து நான் எழுதும் 33வது தொடர் வெளியாகியிருக்கிறது.
இந்த இதழ்
தமிழகத்தின் அனைத்து அரசு நூலகங்களுக்கும் செல்கிறது என்பது முக்கிய செய்தி. எப்பொழுதும்
இதழ் வந்தால், ஒரு வாரத்திற்கு பல்வேறு மாவட்டங்களில் இருந்து தொழிலாளர்கள்
சந்தேகங்கள் கேட்டு போன் செய்வார்கள்.
சமீபத்தில்
TN Headlines சானலில் இ.எஸ்.ஐ, பி.எப் குறித்து அதன் பலன்கள் குறித்து பேசினேன். இதில்
இ.எஸ்.ஐ. ரீல் ஒன்று பரவலாக தொழிலாளர்கள் மத்தியில் பிரபலமாகியுள்ளது. அது வெளியான நாளில் இருந்து.. தினமும் யாராவது ஒருவர்
தொலைபேசியில் அழைக்கிறார். சந்தேகம் கேட்கிறார்.
நேற்று மதுரவாயிலில் இருந்து திரு. பிரபு பேசினார். இன்று திருப்பூரில் இருந்து திரு. சங்கீதா என்பவர் அழைத்தார்.
இப்படி அழைப்பதன்
மூலம் கள நிலவரம் நன்கு தெரிகிறது. ஒருவர்
ஒரு ஆப்ரேசனுக்காக ESI – Tie up மருத்துவமனையில் போய் விசாரித்தால், பட்டியலில் அந்த நோய்க்கு சிகிச்சை இருந்தாலும்,
இந்த சிகிச்சைக்கு இப்பொழுது நிறைய செலவாகிறது. ESI இதற்கான பணம் தருவதில்லை. ஆகையால்
நிறுத்தி வைத்திருக்கிறோம் என சொன்னதாக ஒரு தொழிலாளி தெரிவித்தார். இதெல்லாம் இ.எஸ்.ஐ. விரைவில் சரி செய்ய முயற்சிகள்
எடுக்கவேண்டியது மிக அவசியம்.
கடலூர் முனிசிபல்
துப்புரவு தொழிலாளர்கள் இ.எஸ்.இ குறித்த விசயங்களுக்காக
கடந்த மாதம் போன் செய்து அடிப்படை விவரங்களை
கேட்டுக்கொண்டார்கள். இந்த மாதம் போன் செய்து இதற்காக அனைத்து தொழிலாளர்களும்
போராட்டம் செய்தோம் என தெரிவித்தார். உரிமைகள்
கிடைத்தால் மகிழ்ச்சி.
இரா. முனியசாமி,
ஜி.எஸ்.டி,
வருமானவரி,
இபிஎப்,
இ.எஸ்.ஐ,
எல்.ஐ.சி ஆலோசகர்,
GSTPS உறுப்பினர்,
9551291721



No comments:
Post a Comment